புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


பந்தலூர் அருகே குள்ளமான வாலிபரை காதலித்து மணந்த பட்டதாரி இளம்பெண்


குள்ளமான வாலிபரை பட்டதாரி இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் 2
லோக்சபா எம்.பி. ராவ் இந்திரஜித் சிங்கும், முன்னாள் ஐ.பி.எஸ். ஆபிஸர் ஆர்.கே. சிங் பா.ஜ. கட்சியில் இணைந்தார்கள்(படம்)


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் 
தமிழின் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின்.  கேரளாவை சேர்ந்த இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். 
இவருக்கும், இசைக்கலைஞர் மாண்டலின் ராஜேசுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்த

மக்களவையில் தாக்குதல் : எம்.பி.,க்களுக்கு சிகிச்சை
மக்களவையில்  எம்.பிக்கள் மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தினார் எம்.பி. .  மிளகுப்பொடி ஸ்பிரேயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரனுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு-விகடன் 
இலங்கையில் பிரபாகரன் அடக்குமுறையை எதிர்த்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. இவ்வாறு தமிழக ஆனந்த விகடன் சஞ்சிகையின் விகடன் மேடை பத்தியில் வாசகர்களின் வினாக்களுக்கு அ.முத்துலிங்கம் அளித்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் எண்மர் கைது
நீதிமன்ற உத்தரவையும் மீறி உண்ணாவிரத்தில் ஈடுபட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரணைமடுக்குள நீரை யாழ்.குடாவிற்கு வழங்கும் திட்டம் இராணுவத் தேவைக்கே!- சிறிதரன் பா.உ.
இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை யாழ் குடாநாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என்ற துடித்து நிற்பது, இராணுவ முகாம்கள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெற அரசு திட்டம் தீட்டியுள்ள சிங்கள குடியேற்றத்திற்கும் குடி நீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே  என தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். 

சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது
சுவிற்சர்லாந்தில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு,  இலங்கை உள்ளிட்ட நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அந்த நாட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடித்துள்ளது.

தமிழக பட்ஜெட் 2014 -2015 : கூவம் நதியை சீரமைக்க 3,834 கோடியில் திட்டம்
தமிழ்நாடு சட்டசபையில் 2014–15–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தாக்கல் செய்து பேசினார்.

பாலுமகேந்திராவுக்கு திரையுலகினர் அஞ்சலி
தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா, இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார்.  அவரது உடல் சாலிகிராமம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அதிரடி : நரேந்திர மோடியை சந்திக்கிறார் நான்சி பவல்

குஜராத்தில் இனக்கலவரத்தை முதல்–மந்திரி நரேந்திர மோடி கட்டுப்படுத்த தவறி விட்டார் என்று அமெரிக்கா கருதியது. மேலும், மோடிக்கு ராஜ்ய ரீதியிலான விசாவை அமெரிக்கா கடந்த 2005–ம் ஆண்டு ரத்து செய்தது. மோடிக்கு மீண்டும் விசா வழங்குவது குறித்த கேள்விக்கு அமெரிக்கா நேரடியாக பதில்

மிழக பட்ஜெட் : திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
2014 -15ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தேமுதிக, காங்கிரஸ் உடன் கூட்டணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை : கலைஞர் பேட்டி
திமுக மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடவும், மாநாட்டில் பங்கேற்கவும் அக்கட்சித் தலைவர் கலைஞர் இன்று 13.2.2014 வியாழக்கிழமை மாலை திருச்சி புறப்பட்டார்.  புறப்படுவதற்கு முன் அவர் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இயக்குநர் பாலுமகேந்திரா மரணம்
 

 
தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா ( வயது 74) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

1977-ல் கோகிலா என்ற கன்னடப் படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.


பிரென்சு திரைவாயிலில் வெற்றியீட்டிய ஈழத்துயர் சுமந்த குறும்படம்! சுதந்திரத்திற்காக போராடும் இனத்தின் கலையும் ஒர் ஆயுதமே
புங்குடுதீவை சேர்ந்த இயக்குனர் சதா பிரணவன் பாரிசில் வாழ்ந்து வருபவர் .இவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது வாழ்த்துகிறோம் 

ஈழ விடுதலையின் வெந்தணலை திரைமொழியின் ஊடாக பதிவு செய்த God Is Dead எனும் ஈழத்தவர் கைபேசிக் குறும்படமொன்று, பிரென்சு சினிமாவின் வாயிலில் எட்டி வென்றுள்ளது.

அனந்தி சசிதரன், ஜெனிவாவுக்கு நேற்று பயணமானார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனேயே அனந்தி சசிதரன் பயணமாகி இருப்பதாகவும், இவ்விருவரும் நேற்று புதன்கிழமை மாலையே பயணமாகி விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.நாவின் மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.
சிறிலங்காவுக்கு எதிரான ஐ நா தீர்மானத்துக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் நிறைவேற்றம் 

மனித உரிமை மீறல் சம்பந்தமான விசாரணைக்கு சிறிலங்காவை உட்படுத்தும் விடயத்தில் ஐ ந வில் தீர்மானம் கொண்டு வந்து  நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் பெரிய அளவில் உதவ உள்ளது 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மொயின்கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் காப்பாளர்; மொயின்கான் நேற்றுமுன்தினம் நியமிக்கப்பட்டார்.
கடந்த வாரம் தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்ட அமிர் சோகைல் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்க அட்டவணை  தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் என்ற வரிசையில் உள்ளன 




1.ஜேர்மனி 6118
2.கனடா 44210
3.நோர்வே 43512
4.ஹோலாந்து 42410
5ஐக்கிய அமெரிக்கா 3159
6.சுவிட்சர்லாந்து 3014
7.ரஷ்யா 2439
8ஓஸ்திரியா 1405
9.ஸ்லோவானியா 1124
10.பிரான்ஸ் 1023
11.போலந்து 1001
 ஸ்லோவாகியா
1001

தென் கொரியா 1001
 பைலோ ரஷ்யா 1001
15.ஸ்வீடன் 0314
16.ஜப்பான் 0213
 செக் 0213
18.இத்தாலி 0112
19.அவுஸ்திரேலியா 0101
 சீனா 0101
 பின்லாந்து 0101
22.பிரித்தானியா 0011
 லெட்வியா 0011
 உக்ரைன் 0011

ad

ad