-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

3 மார்., 2010

நூற்றாண்டில் யா /புங் .ஸ்ரீ கணேச மஹா வித்தியாலயம்

யாழ்/புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா vithiyaalayam march திங்கள் மூன்றாம் திகதி தனது நூற்றாண்டில் கால் பதித்து பெருமை அடைகிறது.நூற்றாண்டு விழ வெகு சிறப்பாக இந்த வாரம் முழுவதுமாக கொண்டாடப படுகிறது. விழாவை சிறப்பிக்க சுகி.சிவம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாளராக கலந்து கொள்கிறார்.முத்தமிழ் நிகழ்ச்சிகள் பலவும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

ஸ்ரீ கணேச வித்தியாலயம் சித்திரை மூன்றாம் திகதி ஆயிரத்து தொளாயிரத்து பத்தாம் ஆண்டு வ.பசுபதிப்பிள்ளை விதானையாரினால் சிறிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப் பட்டது ஆயிரத்து தொளாயிரத்து எழுபதிரண்டில் கனிஷ்ட மஹா விதியாலயமகவும் எட்டு வருடங்களில் உயர்தர கலை பிரிவு வகுப்பினை கொண்டதாகவும் தரம் உயர்ந்தது. இவ் வித்தியாலயத்தின் க.நமசிவாயம்பிள்ளை,இளையப்பா,க.செல்லத்துரை ,வை.கந்தையா,நா.கார்த்திகேசு,சோ,சேனாதிராசா.த.துறைச்ங்கம்,மு.தர்மலிங்கம் பொ.சபாரத்தினம்,ச,அமிர்தலிங்கம் ,கு,சண்முகலிங்கம் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றி பெருமை சேர்த்தனர்.சுவட்சர்லாந்து இல் வசிக்கும் புங்குடுதீவு மக்களின் முயற்சியினால் பழையமாணவர் சங்கம் ஆரம்பிக்கபட்டு ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றிirandu muthal வாணி விழா நடத்தபட்டு வந்ததூ .இந்த சங்கம் பாடசாலைக்கென பாரிய நிதிப் பங்களிப்பும் செய்ய பட்டுள்ளது.இந்த பாடசாலைக்கு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமும் நிதி உதவியை செய்திருக்கிறது.ஏனைய நாடுகளில் உள்ள புங்குடுதீவு அமைப்புக்களும் இந்த பாடசாலைக்கென உதவி இருகின்றன.

விளம்பரம்