புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2013

ஒரு சுவாரஸ்மான கட்டுரை படித்து ரசியுங்கள் 
தமிழகம் பல கேவலங்களைச் சந்தித்திருக்கிறது… பல கேவலமான தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு கேவலமானதல்ல. கேவலத்திலும் கேவலமானது.. இது பற்றிப் பேசும்நான் மனிதனும் அல்ல. இந்திய அரசியலிலே உள்ள பல கேவலமான மனிதர்களை போலத்தான் நானும்.
இன்றைய புதிய தலைமுறை நிகழ்சிகளில் ஏராளமான ஒளிபரப்புகள் வருகின்றன பார்க்கத் தவறாதீர்கள் 
www.puthiyathalaimurai.tv

இப்போது ஒளிபரப்பாகிறது  பார்க்கலாம் 

பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பாக வெளியிட்ட புகைப்படம் உண்மையானது! சனல் 4 இயக்குனர் உறுதி!! இரவு 8மணிக்கு பார்க்கவும்!!!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரத்தை சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நிலையில் அதனை ஆதாரமற்றதாக சிறிலங்கா அரசுதரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்டுவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சனல்4 இயக்குனரை நேரடியாக தொடர்புகொண்டுள்ளது. இந்த உரையாடல் இன்னும் சற்று நேரத்தில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் 8 மணியளவில் உளிபரப்பாக உள்ளது. 

பாலச்சந்திரனின் புகைப்பட ஆதாரத்தை மறுப்பது சிறிலங்கா அரசின் முட்டாளத்தனம் - கெலன் மெக்ரே!!!

சனல்4 தொலைக்காட்சியால் வெளியடப்பட்டுள்ள பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவை உண்மைக்கு புறம்பானவை என சிறிலங்கா அரசுதரப்பில் தெரிவித்ததை மறுத்துள்ளார் கெலன் மெக்ரே.

சனல்4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனரான கெலன் மெக்ரே புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நர்கானலில் இதனை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதாக முன்னர் வெளியான புகைப்படமும் தற்போது வெளியடப்பட்டுள்ள புகைப்படங்களும் ஒரே புகைப்பட கருவியால் படம்பிடிக்கப்பட்டுள்ளதாக உலகப்பிரபல்யம் பெற்ற தடயவியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது திட்டமிட்ட படுகொலை எனத் தெரிவத்த கெலன் மெக்ரே இதனை பொய்யானதென சிறிலங்கா அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முயற்சிப்பது சிறிலங்கா அரசின் முட்டாள்த்தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாக கெலன் மெக்ரே மேலும் தெரிவித்துள்ளார்.
 


http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-balachchandran%20(2).jpg

ஸ்ரீ கருடாழ்வான் என்றவரின் முக நூலில் இருந்து நன்றி 
முகப்புத்தகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும், அன்னை சோனியாவை அரக்கியாகவும், ராகுல் காந்திக்கு இது போல் நடக்க வேண்டும் என்று சாபம் கொடுத்தும் தங்கள் தமிழ் பற்றை காட்டிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

சந்தடி சாக்கில் நாம் சில விஷயங்களை மறக்கக் கூடாது.

வன்னி மக்களது அவலக்கதைகளால் திக்குமுக்காடிப்போயினர் எதிரணி கூட்டமைப்பினர்

வன்னி மக்களது அவலக்கதைகளால் திக்குமுக்காடிப்போயினர் எதிரணி கூட்டமைப்பினர்.குறிப்பாக இக்குழுவினில் அடங்கியிருந்த எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களது கேள்விக்கணைகளால் அதிர்ந்து

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,மீண்டும் ஏகமனதாகத் தெரிவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளராக செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளராக வி.மணிவண்ணன் ஆகியோர் மீண்டும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்படடுள்ளனர்.

பிஸ்கட் சாப்பிடக் கொடுத்துவிட்டு சுட்டுக் கொலை

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவேளை, அவரை ஒரு பகுதுங்கு குழிக்கு ஓராமாக அமரச்சொல்லியுள்ளது இராணுவம். பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் பக்கட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அவர் உண்ணும்போது, அவர் பிறிதொரு இடத்தை

பாலச்சந்திரன் காணொளிக்காக காத்திருக்கும் ஜெயலலிதா
விடுதல‌ை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பி‌றகு கரு‌த்து தெ‌ரி‌வி‌‌ப்பதாக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா இன்று கூ‌றியு‌ள்ளா‌ர். விடுதல‌ை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகர‌‌னி‌ன் இளையமக‌னான
வைகோவுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வை முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.
சென்னையில் மலிவு விலை உணவகங்களை ஜெ. இன்று திறந்து வைத்தார்


சென்னை நகரில் முதலில் 200 வார்டுகளிலும் தலா ஒரு உணவகம் வீதம் 200 உணவகங்கள் திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு உணவகம் வீதம் 15 உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகங்களில் இட்லி, தயிர்சாதம், சாம்பார் சாதம் ஆகியவை விற்கப்படுகிறது. காலை 7 மணிமுதல் 10 மணி வரை இட்லி விற்கப்படும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தயிர்சாதமும், சாம்பார் சாதமும் விற்கப்படும். இந்த உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று மதியம் 12.05 மணியளவில் சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அருகிலுள்ள மாநகராட்சி கட்டிடத்தில் தொடங்கி வைத்தார்.

ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. உணவகத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 15 உணவகங்களுக்கான கல்வெட்டுகளையும் திறந்து வைத்தார். 


அதன் பிறகு உணவு கூடத்துக்குள் சென்று இட்லி, சாம்பார் மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை தயாரிக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்டார். உணவகத்தை நிர்வகிக்கும் சுயஉதவி குழு பெண்களிடம் எப்படி உணவு தயாரிக்கிறீர்கள் என்று விசாரித்தார். உணவகத்தை நல்லபடியாக நடத்துங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

தொடக்க விழாவையொட்டி இன்று வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ரவா கேசரி வழங்கப்பட்டது. இங்கு தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் மற்ற 14 இடங்களிலும் மலிவு விலை உணவகங்கள் செயல்படத் தொடங்கின. 

இன்று திறக்கப்பட்ட 15 உணவகங்கள் அமைந்துள்ள பகுதிகள் : 

      
திருவொற்றியூர் மண்டலம், 11வது வார்டு, மாநகராட்சி வணிக வளாகம் டி.எச்.சாலை.


மணலி மண்டலம், 19 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், 29-வது தெரு, மாத்தூர்.

மாதவரம் மண்டலம், 24 வது வார்டு, சமுதாய கூடம், சூரப்பட்டு. 

தண்டையார் பேட்டை மண்டலம், 48 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பொம்மி சிவராமுலுதெரு, வண்ணாரப்பேட்டை. 

ராயபுரம் மண்டலம், 55 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நாட்டுபிள்ளையார் கோவில் தெரு, மண்ணடி. 

திரு.வி.க.நகர் மண்டலம், 79வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு 

அம்பத்தூர் மண்டலம், 73வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், கட்டபொம்மன் தெரு, ஒரகடம்.

அண்ணாநகர் மண்டலம், 103வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், டெய்லர்ஸ் ரோடு, கீழ்ப்பாக்கம். 

தேனாம்பேட்டை மண்டலம், 126வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சாந்தோம் நெடுஞ்சாலை. 

கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சிவஞானம் சாலை, தி.நகர். 

வளசரவாக்கம் மண்டலம், 146 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பூந்தமல்லி ரோடு, வடக்குமாடவீதி அருகில், மதுரவாயல். 

ஆலந்தூர் மண்டலம், 166 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நேரு நெடுஞ்சாலை, நங்கநல்லூர். 

அடையாறு மண்டலம், 181வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பி.ஜி.இ. காலனி, குப்பம் கடற்கரை சாலை, திருவான்மியூர். 

பெருங்குடி மண்டலம், 184 வது வார்டு, வணிக வளாகம், அண்ணா நெடுஞ்சாலை. 

சோழிங்க நல்லூர் மண்டலம், 195வது வார்டு, குடிசை மாற்று வாரிய தொழிற்பயிற்சி கூடம், கண்ணகி  நகர் 2-வது பிரதானசாலை, துரைப்பாக்கம்.



பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்: உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான்! - தெ இன்டிப்பென்டன்ட் பத்திரிகை
முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளைவிட, சிங்களவன் செய்த தமிழ் இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்றுகுவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்?வைகோ,

இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்? என்று மதிமுக பொதுச் செயலாளர்  பாலச்சந்திரனின் கொடூரக் கொலை குறித்து ஆதங்கத்துடன்

மருதானையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு: 13 பெண்கள் கைது
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குட்பட்ட பிரபல பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் செயற்பட்டு வந்த விபசார விடுதியொன்று நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டது.

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறுகோரி 132 கிறிஸ்தவ குருமார் ஐ.நாவுக்கு கடிதம்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என கோரி மன்னார் ஆயர் உட்பட வடக்கு, கிழக்கை சேர்ந்த 132 கிறிஸ்தவ குருமார் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தீபம் தொலைக்காட்சியை விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர்- தினக்கதிர் 


லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர்.  நோர்வேயில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மக்களவையை சேர்ந்தவர்களே இதனை வாங்கியுள்ளனர்.  தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது காவல்துறையினர் சட்டநடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தீபம் தொலைக்காட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையில் அத்தொலைக்காட்சியை வாங்குவதற்கு பலரும் முயற்சி செய்த போதிலும் அதிக பணத்தை நோர்வேயில் உள்ள இத்தமிழர்கள் கொடுத்ததால் தீபம் தொலைக்காட்சி கைமாறி உள்ளது.
தீபம் தொலைக்காட்சி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளால் வாங்கப்பட்டுள்ளதால் ஒரு சிலர் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் முக்கியமான ஒருவர் தீபம் தொலைக்காட்சியின் முக்கிய நபராக கருதப்படும் அனாஸ். அனாஸ் ஒரு நல்ல அறிவிப்பாளர், ஊடகவியலாளர், ஆனால் தீபம் தொலைக்காட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாக இருந்தால் சில விடயங்களை அவர் செய்ய வேண்டி ஏற்படலாம்.------------


-தணிக்கை செய்துள்ளோம் முழுவதையும் பிரசுரிக்க முடியவில்லை மன்னிக்கவும் 

கள்ளக் காதலனோடு சேர்ந்து கட்டிய கணவன் தலையில்  கல்லை போட்டு கொன்ற பெண்ணை சின்னஞ்சிறிய பெற்ற பிள்ளைகளே  கேள்வி கேட்கும் அதிசயம் பாரீர் 
குதிரையிறைச்சியில் கலப்படம்
சுவிட்சர்லாந்தின் போஆப் என்ற தகவல் தொடர்பாளி அளித்தபேட்டியில் கோமிகல் என்ற பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த லாசாக்னா என்ற உறைந்த இறைச்சியில் மாட்டிறைச்சியோடு குதிரையிறைச்சியும் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மேலும் 40 முன்னாள் புலி போராளிகள் வவுனியாவில் வைத்து நேற்று அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா - மருதமடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடகால புனர்வாழ்வு பயிற்சியைப் பூர்த்தி செய்த போராளிகளே நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சற்குணம் தனபாலசிங்கம்-pung 1


திருமதி சற்குணம் தனபாலசிங்கம்
பிறப்பு : 14 நவம்பர் 1928 — இறப்பு : 17 பெப்ரவரி 2013
புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் தனபாலசிங்கம் அவர்கள் 17-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(செல்லையா) அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம்(ஆசிரியர்), திருவாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சு.தனபாலசிங்கம்(கூட்டுறவு திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்), விஜயகுமாரன்(ஓய்வுப்பெற்ற அதிபர்- வவுனியா), துதியானந்தன்(ஜெர்மனி), ரவிக்குமார்(கனடா), வசந்தகுமார்(சோபனாஸ்-வசந்தன் கனடா), சியாமளா(கனடா), சிவகுமாரன்(பிரான்ஸ்), இந்திரகுமார்(கனடா) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, தர்மபூபதி(கனடா), முத்தம்மா(ஓய்வுப்பெற்ற அதிபர்- கனடா), நாகரெத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலராணி, இரத்தினவேணி, லலிதா, ஜெகதா, சுசீலா, தர்மலிங்கம், மஞ்சுளா, கலாராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, தர்மலிங்கம், சண்முகலிங்கம்(அதிபர்) மற்றும் சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற கமலரெத்தினம் தனிநாயகம்(ஆசிரியர்- கனடா) அவர்களின் சகலியும்,
கலைசெல்வி, அனு, மனோ, காயத்திரி, சுதர்சன், விபிதா, திவாகரன், ரதீஸ், கிசோத், றஜீவன், பிராசாந், அஜிதா, சரண்யா, ஆதவன், லக்கீசன், தர்சிகன், கவிசா, விதுஸ், தரணிகா, றக்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுசா, சாருயா, தனுசன், கீர்த்தனன், சங்கீதன், கவிநயன், சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக Highland Funeral Home (3280, Sheppard Ave East, Warden And Sheppard) என்னும் இடத்தில் 20-02-2013 புதன்கிழமை மாலை 5:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்ட்டு, 21-02-2013 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் 11:00 மணிவரை அதே மண்டபத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலா — பிரான்ஸ்
தொலைபேசி: +33777803645
விஜயகுமார் — இலங்கை
தொலைபேசி: +94245680452
துதி — ஜெர்மனி
தொலைபேசி: +49607138290
வசந்தன் — கனடா
தொலைபேசி: +14167397273
சியாமளா — கனடா
தொலைபேசி: +14164296225
சிவா — பிரான்ஸ்
தொலைபேசி: +33140371470
இந்திரன் — கனடா
தொலைபேசி: +14164237584
ரவி — கனடா
தொலைபேசி: +14164292473
செல்லிடப்பேசி:+16776000083
** இந்

ஆறுமுகம் கண்ணையா pung 7

திரு ஆறுமுகம் கண்ணையா
தோற்றம் : 1 யூலை 1944 — மறைவு : 13 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்
Broadcasted by Lankasri FM
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கண்ணையா அவர்கள் 13-02-2013 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜேந்திரா(கனடா), விஜயமாலா(மாலா-லண்டன்), விஜயமாலினி(விஜிதா-லண்டன்), விஜயரஜனி(இந்தியா), மயூரன்(இந்தியா) ஆகியோரின் அருமை தந்தையும்,
கனடாவில் வசிக்கும் வல்லிபுரம்(ஆசிரியர்)அருளம்மா, காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
வைத்தியலிங்கம்(கிராமசேவகர்), லட்சுமி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
காலஞ்சென்ற தனலட்சுமி, நல்லையா ஆகியோரின் மைத்துனரும்,
தயானந்தி(கனடா), ஜீவதாஸ்(லண்டன்), சுரேஸ்குமார்(லண்டன்), அருண்பிரகாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
அஷ்மிகா, வர்ஷன், நிகாஷ், கீர்த்தனா, விதுர்ஜனா, ஹரிப்பிரியன், ஹரிசுதன், யதுர்ஸன், தன்சிகா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோன்மணி(மனைவி) — இந்தியா
செல்லிடப்பேசி: +919940474372
விஜேந்திரா(மகன்) — கனடா
தொலைபேசி: +14167249468
மாலா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442034414459
அருண்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659601216

** இந்த அறி

ad

ad