புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2012


இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. 
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன் குவித்தது. ஷேவாக் 117, காம்பீர் 45, தெண்டுல்கர் 13, கோலி 19 ரன்னும் எடுத்தனர். புஜாரா 98 ரன்னுடனும், யுவராஜ் சிங் 24 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.


வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்பு: ஐ.நா.சபை கூட்டத்தில் தமிழில் பேசிய ஜி.கே.மணி
ஜெனிவா ஐ.நா.சபை மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்திலும், லண்டனில் நடைபெற்ற அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் உலகத்தமிழர் மாநாட்டிலும் கலந்து கொண்டு திரும்பிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தோல்வி அடைந்ததற்கு சி.ஏ.ஜி.தான் காரணம்: கபில் சிபல் குற்றச்சாட்டு
சமீபத்தில் நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்கள் நடந்த இந்த ஏலத்தில் ரூ.9407 கோடிக்கு மட்டுமே அலைக்கற்றை ஏலம் போனது. ஏற்கனவே

கசிந்துள்ள ஐ.நா அறிக்கையின் படி 80,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் !
ஐ.நா செயலாளர் நாயகத்தால், இலங்கையில் போர் நடைபெற்றவேளை ஐ.நா காத்திரமான முடிவுகளை எடுக்கவில்லையா என ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக் குழு 128 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கை ஒன்றை நேற்றைய தினம்

தருமபுரி கலவரத்துக்கு தமிழக அரசே பொறுப்பு! ராமதாசுக்கும் ஒரு வேண்டுகோள்! திருமாவளவன் பேட்டி!
கடந்த 07.11.2012 அன்று கலப்பு திருமணம் காரணமாக, தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடந்த கலவரத்தில் 268 வீடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 

தொழில் அதிபரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி
 
2003-ம் ஆண்டு திரை உலகில் காலடி பதித்த நடிகை பூஜா காந்தி, ஏராளமான கன்னட படங்களில் நடித்ததன் மூலம் கன்னட திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இரட்டை சதம் அடித்தார் புஜாரா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடித்த முதல் இரட்டை சதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை சதம் அடித்த 17வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் புஜாரா. அகமதாபாத் போட்டியில் 374 பந்துகளில் 21 பவுண்டரி விளாசி இரட்டை சதத்தை எட்டினார்

ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர வேண்டும்! கி.வீரமணி வலியுறுத்தல்!
UNO வுக்கு அழுத்தம் கொடுத்து, ராஜபக்சேவை குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
புதுக்காட்டில் வாகன விபத்து யாழ். மறைமாவட்ட குரு பலி
யாழ்ப்பாணம் புதுக்காட்டு சந்திப்பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ். மறைமாவட்ட குருவான கே. லக்மன் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய இவர்
சம்பூர் பாதுகாப்பு வலயம் தொடர்பான மனு குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் அரசாங்கம் தனது விளக்கத்தை அளிக்கவேண்டுமென்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய சென்றடைந்த அகதிகள் படகில் இருந்து சடலம் மீட்பு
நேற்று கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்த இந்த அகதிப் படகில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்பாவி மக்களைக் கொன்றுதான் போர் முடிவுக்கு வந்தது என்ற உண்மையை ஐ.நா பகிரங்கப்படுத்தியுள்ளது: மனோ கணேசன்
இலங்கையில் 40, 000க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை பலி கொடுத்து, இன்னொரு பெருந்தொகையினரை காணாமல் போகச்செய்துதான், இலங்கை அரசாங்கம் புலிகளை ஒழித்தது என்ற உண்மை ஐநாவின் உள்ளக அறிக்கை இன்று பகிரங்கப்படுத்தியுள்ளது

ஐ.நாவின் உள்ளக அறிக்கை: அடுத்த கட்ட நடவடிக்கையை ஆராய மற்றுமொரு குழுவை நியமிக்கிறார் பான் கீ மூன்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த சார்ள்ஸ் பெற்றியின் அறிக்கை, பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா ஆதரிக்கும்: நாராயணசாமி
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது மத்திய இணையமைச்சர் நாராயணசாமி இதனை தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா அதனை மீண்டும் ஆதரிக்கும் என இந்தியா தெரிவித்துள்ளது.
ராஜபக்‌ஷவைப் படுகொலை செய்வதற்காக 7 கோடி ரூபா தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரிடம்கேட்ட இராசலிங்கம் மதனி என்ற பெண் புலிச் சந்தேகநபர்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவைப் படுகொலை செய்வதற்காக 7 கோடி ரூபா தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரிடம் இராசலிங்கம் மதனி என்ற பெண் புலிச் சந்தேகநபர் கேட்டுள்ளதாக கேகாலை மேல் நீதிமன்றத்தில் பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் - காசா உக்கிர மோதல்

ஹமாஸ் இராணுவ தளபதி உட்பட 13 பலஸ்தீனர் பலி


பதில் தாக்குதலில் 3 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர்: ஐ.நா. அவசர கூட்டம்: இஸ்ரேலுக்கான தூதுவரை அழைத்தது எகிப்து

இஸ்ரேல் - காசாவுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் வான் தாக்குதலில் காசாவில் 13 பேர் கொல்லப்பட்டதோடு காசாவிலிருந்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் மூன்று இஸ்ரேலியர் பலியாகினர்.

ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தர தீர்வுகாண அரசுக்கு ஆதரவு வழங்க தயார்

* தமிழர் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டால் எந்த நாடும் தலையிடுவதை விரும்பமாட்டோம்
* 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியம்
ஐக்கிய இலங்கைக்குள் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கம்

பாதுகாப்பு தருமாறு தமிழக அரசிடம் நடிகர் விஜய் கோரிக்கை
தங்களது வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோரி நடிகர் விஜய் மற்றும் கலைப்புலி தாணு மனு கொடுத்துள்ளனர்.நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள துப்பாக்கித் திரைப்படம்

 சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களிலிருந்து கோத்தாட் ஊடாக இத்தாலி மற்றும் திச்சினோ மாநிலத்திற்கு செல்லும் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஊரி மாநிலத்தில் உள்ள கோத்தாட் பகுதியில் மலை உடைந்து பாரிய கல் ஒன்று அந்த மலை அருகாக செல்லும் புகையிரத பாதையில் விழுந்துள்ளது. இதனால் புகையிரத பாதை சேதமடைந்துள்ளதுடன் சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களிலிருந்து

FULL SCORE CARD
India 323/4 (90.0 ov)
England
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வலுவான நிலையில் இந்தியா
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இஸ்லாமிய புது வருடப் பிறப்பு நாளை மறுதினம் : பிறைக்குழு அறிவிப்பு
ஹிஜ்ரி 1434ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தின் தலைப் பிறை இன்று நாட்டின் எப்பாகத்திலும் தென்படவில்லை. இதனால் துல்ஹஜ் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை மறுதினம் சனிக்கிழமை முஹர்ரம் மாதம் ஆரம்பிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழு அறிவித்துள்ளது.இதேவேளை ஸபர் மாதத்தின் தலைப் பிறைப் பார்க்கும் நாள் (முஹர்ரம் பிறை 29) டிசம்பர் 15 ஆம் திகதியாகும்.முஹர்ரம் மாதத்தின் தலைப் பிறை தீர்மானிக்கும் பிறைக் குழு மாநாடு இன்று மஃ ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஹமீதியா மண்டபத்தில் நடை பெற்றது. இதன் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையை, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.(அறிக்கை இணைப்பு)
இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சில் இருந்து அதிர்வுக்கு நேரடி அச்சுறுத்தல்

விளம்பரம்

ad

ad