ஜனாதிபதி அரசியல் அமைப்பினை மீறி செயற்பட்டுவிட்டார். அவர் குற்றவாளி என்பது இப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
-
5 டிச., 2018
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர நடவடிக்கை
இஎதிர்வரும் 2019 மார்ச் மாதம் நடக்கவிருக்கிற ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையை சர்வதேச குற்றவியல்
தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது கூட்டம் மீண்டும் வெள்ளிக்கிழமைக்கு
கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை
வவுணதீவில் வவுணதீவில் காவல் துறையினரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள்
நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
ரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சிக்கு எத்தகைய நிபந்தனையின் கீழ் ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழு நேற்றுக் கூடி ஆராய்ந்தபோதும் அதில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தற்காலிகமாக இணைக்கவேண்டும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களையும் உடன் வழங்கவேண்டும் என்பன உட்பட 5 நிபந்தனைகளை நிறைவேற்ற ரணில் இணங்கினால் மட்டுமே அவருக்கு ஆதரவளிக்கக் கூட்டமைப்பு இணங்க வேண்டும் என்று ரெலோ அமைப்பின் செயலாளர் ந.சிறிகாந்தா வலியுறுத்தியிருந்தார். அது பற்றிப் பேசுவதற்காகக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழு உடன் கூட்டப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து உயர் மட்டக் குழு கூட்டப்பட்டபோதும் அதில் இது தொடர்பில் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை, நாளைமறுதினம் 7ஆம் திகதி மீண்டும் கூடி இது பற்றி விவாதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டதாகக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும் முடிவை ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எடுத்திருந்தது. ரெலோ அமைப்பின் செயலர் ந.சிறிகாந்தா இதனைக் கடுமையாக எதிர்த்திருந்தார். இப்படிப்பட்டதொரு முக்கியமான கொள்கை முடிவை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எடுக்கக்கூடாது என்றும் அதனை கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவே எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று மாலை 5.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரையில் கூட்டம் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும், ஆர்.ராகவனும், ரெலோ சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ந.சிறிகாந்தா, வினோநோதராதலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் பங்கேற்றனர். கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் நடைபெற்ற சம்பவங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ரெலோ அமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தால் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அது அமையவேண்டும் என்று வலியுறுத்தியது. அவற்றுள் மிகச் சிலவற்றை முயற்சிப்பதற்கு எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தர் இணங்கினார் என்றும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டிய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறும் ரெலோ அமைப்பு அழுத்தமாகக் கோரியுள்ளது. நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னர் அதைப் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எந்தவொரு முடிவுகளும் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மீண்டும் சந்தித்துப் பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சிக்கு எத்தகைய நிபந்தனையின் கீழ் ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த்
கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பு
கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)