புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2012


விஜேந்தர் 3-3, 5-7, 5-7 என்ற கணக்கில் தோல்வி
குத்துச்சண்டை ஆண்கள் மிடில் வெயிட் பிரிவில் (75 கிலோ) இந்திய வீரர் விஜேந்தர் உஸ்பெகிஸ்தான் வீரர் அப்பாஸ் அதோவுடன் மோதினார்.

‘வரூம்‌ ஆனா‌ வரா‌து…’ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌
துணை குடியரசுத் தலைவராக 11ந் தேதி பதவி ஏற்கிறார் ஹமீது அன்சாரி
தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் அமீத் அன்சாரியின் பதவிக் காலம் வருகிற 10-ந்தேதியோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்தது.

கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள்! இலங்கை தூதருக்கு ராம்விலாஸ் பாஸ்வான் பதிலடி!
டெசோ மாநாட்டில் தான் பங்கேற்பதை தடுக்க டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் முயற்சித்ததாக கூறிய ராம்விலாஸ்பாஸ்வான், எதுவாக இருந்தாலும் கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று பதில் அளித்துவிட்டதாக தெரிவித்தார். 
இலங்கைக்கு எதிரான 20-20 போட்டி: இந்தியா வெற்றி
இலங்கைக்கு எதிரான 20-20 போட்டியில் 39 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முத-ல் விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது. இலங்கை அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன் எடுத்தது. 

நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியது?
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், அமெரிக்காவும் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு கோரியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி

இலங்கையில் தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி சென்னையில் விவாதம்!
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. 

வல்வெட்டித்துறையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டைச் சுற்றியிருந்த இராணுவத்தினர் வெளியேற்றம்
வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டின் அருகில் இராணுவத்தினர் அமைத்திருந்த இராணுவ முகாமைவிட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

பிள்ளையான் கட்சியின் இணைப்புச் செயலாளர் செல்வேந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவு
கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பு செயலாளராகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிருவாகச் செயலாளராகவும் பணிபுரிந்த திரு.அ.செல்வேந்திரன் தமிழரசுக் கட்சியின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்.

தமிழ்நாடு அகதிமுகாமிலிருந்து 46 பேர் நாடு திரும்பினர்
இலங்கையில் இடம்பெற்ற யுத்த சூழலின் காரணமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாகச் சென்று திருச்சியில் தங்கியிருந்த அகதிகளில் 46 பேர் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ: விக்ரமின் சம்பளம் ரூ.15 கோடி
ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள ஐ படத்தில் நடிக்க சியான் விக்ரம் ரூ.15 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது
தாண்டவம் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் சியான் நடிக்கிறார்.
(வீடியோ இணைப்பு) 

சிங்கள மக்களுக்கு எதிராக விரலை கூட நீட்டாத உத்தமர்கள் புலிகள் - தா.பாண்டியன் அதிற்சியில் இந்திய ஊடகம்

யுத்தம் நடந்த காலத்தில் எமது இந்திய கம்மினிஸ் கட்சியும் சரி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி கொழும்பு மீது குண்டு போட்டு அழிக்க வேண்டும் என சிந்திக்கவும் இல்லை செயற்படுத்தவும் இல்லை குறிப்பாக புலிகள் விரல் கூட நீட்டாத உத்தம உலக போராட்ட அமைப்பு என்பதில் மாற்றமில்லை என இந்திய
அடித்துத் துன்புறுத்தி மண்டை உடைந்த நிலையில் மனைவியைப் பூட்டி வைத்திருந்தார் கணவன்; வீட்டுக்கு வந்து தையல் போட்டார் ஆஸ்பத்திரி தொழிலாளி இருவரும் தற்போது மறியலில்; எழுவைதீவில் சம்பவம்

ஒருவார காலமாக வீட்டில் வைத்து மனைவியை அடித்துத் துன்புறுத்திய கணவன், மனைவிக்கு மண்டை உடைந்த போதும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாது வைத்தியசாலைத் தொழிலாளி ஒருவரை அழைத்து வந்து அவர் மூலமாக மருந்து கட்டி தையலும் போட்டு
தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு
தமிழ்நாடு - திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வறண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று  மீட்கப்பட்டுள்ளனர். 
எஞ்சியுள்ள புலிகளால் இலங்கைக்கு ஆபத்து அச்சப்படுகிறார் கோத்தபாய

விடுதலைப் புலிகளின் எச்சங்கள் இன்னுமிருக்கின்றன என் பதை நாம் அறிவோம். எஞ்சியுள்ள இந்தச் சக்திகள் இன்னும் இலங்கைக்கு வெளியே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்தார். 
வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சாய்னா நேவால் சீன வீராங்கனை வாங் ஜின்னை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை சாய்னா 18-21 என்ற கணக்கில் இழந்தார்.
 இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது
குத்துச்சண்டை பெண்கள் பிளை (51 கிலோ) பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம், துனிசியா வீராங்கனை ரஹாலியை எதிர்கொண்டார். இதில் மேரிகோம் 15-6 என துனிசியா வீராங்கனை ரஹாலியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

வவுனியாவில் 8 வயது சிறுமி கிணற்றில் விழுந்து பலி
நேற்று மாலை கிணற்றில் விழுந்த குறித்த சிறுமியை மீட்ட அயலவர்கள், வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வவுனியா, சமயபுரம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் 8 வயது சிறுமி தவறி விழுந்து
ஒலிம்பிக் வட்டு எறிதல்: இந்திய வீரர் முதலிடம் பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி
லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தடகளப்போட்டியில் வட்டு எறிதல் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வட்டு எறிதலில் இந்திய வீரர் விகாஸ் கவுடா முதலிடம் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
போராட்டக்காரர்களுடன் இணைந்தார் சிரியா பிரதமர்: ஜனாதிபதிக்கு பலத்த அடி
ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமானதில் இருந்து, அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற மிக உயர் பிரமுகர் ரியாட் ஹிஜாப் ஆவார்.
சிரியா பிரதமர் ரியாட் ஹிஜாப் அரசாங்கத்திலிருந்து விலகி, போராட்டக்காரர்களுடன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மனைவியை அடித்து காயப்படுத்திய கணவன்! சிகிச்சையளித்த தகுதியில்லாத ஆஸ்பத்திரி தொழிலாளி!- இருவரும் விளக்கமறியலில்
ஒருவார காலமாக வீட்டில் வைத்து மனைவியை அடித்துத் துன்புறுத்திய கொடூர கணவன் ஒருவர்., மனைவிக்கு மண்டை உடைந்த போதும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாது வைத்தியசாலைத் தொழிலாளி ஒருவரை அழைத்து வந்து அவர் மூலமாக மருந்து கட்டி தையலும் போட்டு தொடர்ந்தும் வீட்டிலேயே தடுத்து வைத்திருந்துள்ளார்.

அஷ்ரப் காலத்து தீர்வுகள் இப்போது செல்லுபடியாகுமா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஷ்ரபுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், தற்போதைய முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு விடயமாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...

அம்பாறையில் விநாயகர் விக்கிரகத்தை பௌத்த விகாரைக்கு அடாவடியாகக் கொண்டு சென்ற பிக்கு
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது.இவ்வாலயம் அண்மையில் கும்பாபிசேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த

சீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்ம​ணி
சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள்இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில்

புகையிரத மலசலகூடத்தில் பெண் மீது துஷ்பிரயோகம்! மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றின் மலசலகூடத்தில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் கீழ் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
292493_248128718639710_1040341189_n.jpg

ad

ad