புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013


தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும்
நிலை உருவாகும் :  திருமாவளவன் ஆவேசம்

மக்களவையில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசினார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




     ""ஹலோ தலைவரே... நம்ம நக்கீரன்தான் அட்டைப்படத்தில் 2ஜி-நெருங்கும் க்ளைமாக்ஸ்னு போட்டு விரிவா கட்டுரை வெளியிட்டது. இப்ப அதற்கான நிலவரங்கள் சீரியஸா  போய்க் கிட்டிருக்குதே.
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனித்தனியாக வலியுறுத்திப் போராட்டங்களை நடத்திவருவதை இந்திய அரசு அலட்சியப்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசில் பங்கெடுத்துள்ள தி.மு.க.வின் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டமும், டெல்லி டெசோ  கருத்தரங்கமும் இந்திய அரசால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா  என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், உடல்நிலை குன்றியுள்ள நிலையிலும் தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர், கலைஞரை நேரில் சந்தித்து, "இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்தியாவின் நிலைப்பாடு மாறாவிட்டால் நாம் ஒரு முடிவெடுத்தாக வேண்டியதுதான்' என்று வலியுறுத்தியுள்ளார். அதை கவனமாகக் கேட்ட கலைஞர் அதன்பின் தென்சென்னை மா.செ. ஜெ.அன்பழகனிடம் முற்றுகைப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தச் சொன்னார். தி.மு.க.வுடன் விடுதலைசிறுத்தைகள் கட்சியினரும் தி.க.வினரும் இணைய, பாலச்சந்திரன் படம் போட்ட பதாகைகளுடன் அணிதிரளவேண்டும் என்ற உத்தரவு, போராட்டத்திற்கு முதல்நாளே கட்சியினருக்கு இடப்பட்டது. டெசோ கருத்தரங்கிலும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும், அதன்பிறகும் இந்தியாவின் நிலைமாறாவிட்டால், மத்திய அமைச்சரவையிலிருந்து  தி.மு.க வெளியேறுவது என்றும் ஆலோசனையில் முடிவாகியுள்ளதாம்.



          "இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு இரட்டை முகம்- இரட்டை நாக்கு என்று உங்கள் தமிழக அரசியல்வாதிகள் விமர்சிக்கிறார்கள். ஆனால், இந்தியாவுக்கு ஒரே முகம்தான்- ஒரே நாக்குதான். அது எப்போதும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இருக்கும்' என்கிறார்கள்
தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் தினமும் கனவில் வருகிறான்: கோர்ட்டில் அபுஜிண்டால் அலறல்
மும்பை தாக்குதல் சதி திட்டம் தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த அபுஜிண்டால் சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு பிடிபட்டான். அவனை அரபிய அரசு இந்தியாவிடம்
என்னை தொடுவது கூட இல்லை, கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறாரே... ஒரு பெண்ணின் பரிதாப தற்கொலை!

தனது கணவர் தன்னிடம் அன்பு காட்டாமல், எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரே கதி என்று கிடந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

மறைந்த வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேசிற்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் இலங்கை அமைச்சர்கள் அந்நாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா ஆகியோர் வெனிசுலாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக்குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்


இலங்கைத் தமிழர் விவகாரத்தில், தி.மு.க.வை காங்கிரஸ் வஞ்சித்து விட்டது என்று மாநிலங்களவையில், தி.மு.க. எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை நடந்த விவாதத்தின் போது, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு பேசுகையில்,

ஆசிய தடகளப் போட்டி சென்னையிலிருந்து கொழும்புக்கு மாற்றம் 

தமிழகத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் இடம்பெறவிருந்த ஆசிய தடகளப் போட்டி கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஊடகங்களை அணுகிய முறை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு பணிப்புரை விடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபைக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலான கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் 3ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

ராஜபக்சேதான் முள்ளிவாய்க்காலை அழிக்கும்படி உத்தரவிட்டார் - ஜெய சூர்யா

முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக் கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான்

'வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்...


வடக்கு - கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவுகளால் வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.



காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றுகூடி தமது சோகங்களை வெளிப்படுத்தவிருந்த ஜனநாயக ரீதியிலான போராட்ட நிகழ்வை அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கான அரங்கு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையில் காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை


யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் தூக்கில் தொங்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் குறித்த சடலத்தை இன்று புதன்கிழமை காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.


சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு


சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையைச்


ஜனாதிபதி ராஜபக்ஷவை கண்டித்து ஆர்ப்பாட்டம் : ஒருவர் தீக்குளிக்க முயற்சி

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டித்தும்

தலிபான்களால் சிறைபிடிக்கப்பட்ட 17 ஆப்கானிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலை தூக்கியுள்ளதோடு அரசுப் படையினருக்கு எதிராக திடீர் தாக்குதலில் ஈடுபட்டு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

ரொறன்ரோவில் இலங்கை தூதரகம் நோக்கிய கண்டனப் பேரணி! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு
பாலச்சந்திரன் படுகொலையினை கண்டித்தும் சிங்களப் படையின் இன அழிப்பு, பாலியல் வல்லுறவு ஆகியவற்றை கண்டித்து மகிந்த ராஜபக்சவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக்கோரி கடந்த திங்களன்று கனடா ரொறன்ரோவில் உள்ள  இலங்கைத் தூதரகம் நோக்கிய கண்டனப் பேரணி நடைபெற்றது.

ad

ad