புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2016

மொழியாற்றல் அற்றவரா மஹிந்த? சர்வதேசத்தை ஏமாற்றியமை அம்பலம்

ஹிந்த ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்த சந்தர்ப்பத்தில் எழுதி வைத்த எதனையும் பார்க்காமல் சிங்களத்தில் உரையாற்றுவதற்கும், தெரியாத தமிழ்

மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து மௌனம்! நிபந்தனைகளுக்கு இலங்கை சம்மதம்?


ஐ. நா. மனித உரிமை ஆணையத்தின் நிகழ்கால கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விவகாரம் விவாதிக்கப்படாமல் இருக்க இருதரப்பு

நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி சென்னை கோட்டையில் கால்நடைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் எப்போதும் போல வருகைப் பதிவேடு இன்றும் (மார்ச் - 3, 2016) களை கட்டிக் கொண்டிருந்தது. தேடி வந்தவர்களைப் பார்த்து பேசி அனுப்பி விட்டு சாப்பிட மேசை முன் மந்திரி டி.கே.எம். சின்னையா அமர்ந்த போது பகல் 2.30 மணி. செய்தித் துறையிலிருந்து பேசிய ஒரு குரல், "சார், சானலை மாத்தாமல், 'அம்மா', டி.வி. சானலை பாருங்க" என்றது. அப்போதுதான் மந்திரி சின்னையாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. முதல் செய்தியாக, 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு' என்றது டி.வி. அறிவிப்பு. அடுத்த கவளத்துக்கு இடைவெளி விட்டு விட்டு டி.வி.யையே பார்த்துக் கொண்டிருந்த சின்னையா, கலக்கத்துடன் எழுந்து கையைக் கழுவ, அதே நிமிடத்தில் அவரை மந்திரி பதவியிலிருந்தும் நீக்கி தலைமை 'கை' கழுவியிருந்த செய்தி டி.வி.யில் திரும்பத் திரும்ப கேட்க ஆரம்பித்தது. சாப்பாட்டை ஓரந்தள்ளி விட்டு, அறையை விட்டு எழுந்த முன்னாள் மந்திரியாகிப்போன சின்னையா, அரசுக் கார் சாவியை உதவியாளரிடம் ஒப்படைத்து விட்டு, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட இன்னொரு காரில் அங்கிருந்து உடனடியாகக் கிளம்பி விட்டார். சின்னையாவைப் பார்க்க அங்கிருந்த செய்தியாளர்கள் வருவதற்குள் அவரது கார் பட்டினப் பாக்கத்தை தொட்டு விட்டது. யார், இந்த சின்னையா ? அதிமுக மந்திரி சபையில் அசைக்க முடியாத (அதாவது மாற்ற முடியாத) சக்தியாக கடைசி வரை இருந்த 11 மந்திரிகளில் ஒருவர். இப்போது அந்த எண்ணிக்கை 11-ல் இருந்து 10 ஆக சுருங்கி விட்டது... (முதன்முதலில் காலி செய்யப்பட்ட மந்திரி சீட் இசக்கிப் பாண்டியனுக்குரியது, இப்போது கடைசி (?!) மந்திரி 'சீட்' டாக காலியாகியிருப்பது சின்னையாவுக்குரியது) இன்னும் மந்திரிகளின் பட்டியல் சுருங்கலாம், அல்லது ஒரு நாள் என்றளவிலாவது யாராவது திடீர் மந்திரி ஆகலாம் அது தனிக்கதை. அதிமுகவின் முன்னோடிகளில் ஒருவரான முனு ஆதியை தெரியாத கட்சிக்காரர்கள் இருக்க முடியாது. அவருடைய அக்கா மகன்தான் டி.கே.எம். சின்னையா. 1988-89 களில் பெரிதாய் கட்சியில் வெடித்த ஜா. அணி, ஜெ. அணி என்ற போராட்ட காலங்களில் ஜெ.வுக்கு ஆதரவாக களம் இறங்கியவர் முனுஆதி. அவருடைய அக்கா மகன் என்ற அடையாளமும், அதே அளவு விசுவாசத்தையும் காட்டக் கூடிய வாய்ப்பும் ஒருநாள் சின்னையாவுக்கு வந்தது. மாவட்டச் செயலாளராக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி.யிடம் வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரும் கட்சியில் சீனியர் என்ற முறையில் சின்னையா பெயரோடு மூவர் பெயரை தலைமைக்கு அனுப்பி வைத்தார். அதில் கடைசியாக இருந்த பெயரான டி.கே.எம்.சின்னையாவை வேட்பாளராக 'டிக்' அடித்தார் ஜெயலலிதா. தேர்தலும் வந்தது, சின்னையாவும் வென்றார். வெற்றி அறிவிப்புக்கு முன்னதாக, தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தில் செலவிட்டது போக, எஞ்சியதை அப்படியே கொண்டுபோய் ஜெயலலிதாவிடம் கொடுத்தார். "ஓட்டு வீட்டில் இருந்தாலும், உங்கள் நேர்மை மாளிகை போல் பிரமாண்டமாக இருக்கிறது" என்று வாழ்த்தி அனுப்பிய ஜெயலலிதா முதல்வரானார், சின்னையாவும் மந்திரியானார். சின்னையாவின் மனமென்னும் அந்த மாளிகைதான் வாழ்த்தி மகிழ்ந்த அதே ஜெயலலிதாவால் இப்போது இடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவு காஞ்சி மாவட்டம் என்றால் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் எம்.பி.யாக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன். இவருடைய உதவியாளர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வெளியான வீடியோ இவரைக் கட்சிப் பதவியிலிருந்து காலி செய்தது. கடந்த ஐந்தாண்டில் 'சிட்லப்பாக்கம்' என்ற பெயரே காஞ்சி மாவட்ட அதிமுகவில் இல்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட சிட்லப்பாக்கத்தாரை பிப்ரவரி 29- ம்தேதி சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. அன்றே சிட்லப்பாக்கத்துக்கு ரீ- என்ட்ரீ இருக்கும் என்று கோட்டை ஏரியாவில் சலசலப்பு ஓடியது. ஜெ.வின் எண்ணவோட்டம் பைபாசில் போனதால் அது சின்னையாவின் பொறுப்பையும் காலி செய்து, அவரது கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் காலி செய்துள்ளது. அத்தோடும் நிற்கவில்லை, வேகம்... காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன் பதவியையும் காலி செய்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஜெ சந்திப்பின்போதே காஞ்சி மாவட்டத்துக்கான புதிய நிர்வாகிகள் லிஸ்டை ஜெ. கேட்டு வாங்கிக் கொண்டு விட்டார். அதில், தன்னுடைய கட்சி பொறுப்பு போனபோது, பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தண்டரை மனோகரன் இடத்துக்கு வேறு பெயரை எழுதிக் கொடுத்திருந்தார் ராஜேந்திரன். இது மொத்தமும் ஒன்றாக, ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக தற்காலிக நியமனத்தில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனை உட்கார வைத்திருக்கிறது. திருப்பத்தை விதைத்த காஞ்சி மகளிர் மாநாடு நால்வர் அணியில் முக்கியமான ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகிய மந்திரிகளை, காஞ்சி மகளிரணி மாநாட்டில் பங்கேற்க தலைமையில் இருந்து சிக்னல் கொடுக்க வில்லை. மந்திரிகள் எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருக்குத்தான் அங்கு போகும்படி உத்தரவு. அதிலும், வேண்டா வெறுப்பாக அங்கே அனுப்பி வைக்கப்பட்டவர் மந்திரி வைத்திலிங்கம். முதல்வர் ஜெயலலிதாவின் "குட்-புக்" கிலிருந்தவர் மந்திரி வைத்திலிங்கம். ஓ.பி.எஸ். மீதான கோபம்தான், மீனவரணி ரமேஷ், வேளச்சேரி அசோக் எம்.எல்.ஏ. மற்றும் தேனி, திண்டுக்கல் நகர செயலாளர்கள் இருவர் நீக்கமும் என்பது நேற்றைய தகவல். இன்றும் அதன் தொடர்ச்சியாகத்தான் தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலன் நீக்கமும் நடந்திருக்கிறது. சின்னையாவை ஏன் காலி செய்தார் ஜெ. ? 'அதெல்லாம் சரி, டி.கே.எம். சின்னையா யாருடைய ஆதரவாளரும் இல்லையே... அவரை ஏன் நீக்கினார்கள்?' என்றால், 'அவரும், தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலனும் நகமும், சதையுமாக இருக்கிறவர்கள். இங்கே அடிச்சா, அங்கே வலிக்கும் என்ற ஸ்டைல் நீக்கம் இது' என்று பதில் வருகிறது. அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் எம். கூத்தன் அந்த இடத்துக்கு போஸ்டிங் செய்யப்பட்டிருக்கிறார். புதுக்கோட்டை விஜயபாஸ்கர் நீக்கம் ஏன் ? மந்திரி வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பவர், புதுக்கோட்டை விஜயபாஸ்கர். ஏற்கனவே பதவி பறிப்புக்கு ஆளாகி ரீ- என்ட்ரீ ஆனவர் மந்திரி விஜயபாஸ்கர். தற்போது இவரை லேசாக 'டச்' செய்வது போல் புதுக்கோட்டை மா.செ. பதவியை மட்டும் பறித்து அங்கே பி.கே.வைரமுத்துவை மா.செ.வாக போஸ்டிங் போட்டிருக்கிறார்கள். விஜயபாஸ்கர் நீக்கத்துக்கு கட்சி வட்டாரத்தில், இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. "டி.கே.வைரமுத்து சார்ந்த சமூகத்தை குறிப்பிட்டு விஜயபாஸ்கர் ஏளனம் பேசியதாக சில மாதங்களுக்கு முன்பு மாவட்டத்தில் பிரச்னை வெடித்தது. அப்போது, விஜயபாஸ்கரை எதிர்த்து குறிப்பிட்ட சமூகத்தினர் சாலை மறியல், போராட்டம் என்று நடத்தினர். அந்தநேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விஜயபாஸ்கர், இது சிலரின் திட்டமிட்ட சூழ்ச்சி, அதில் என்னை சிக்க வைக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். அமைச்சர் பதவியில் ரி-என்ட்ரியாகி இருந்த புதிதில் மறுபடியும் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து தூக்காமல் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. தற்போது, வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியாக இருந்ததாலேயே விஜயபாஸ்கர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை கட்சிக்கான மாவட்டச் செயலாளர்கள் உள்ள கணக்கில் 50 மாவட்டங்கள் உள்ளன. அதில், திருவள்ளூர், வேலூர், காஞ்சி, விழுப்புரம், தேனி, சென்னை மற்றும் கடலூர் உள்பட பத்து மண்டலங்களுக்கு ஓ.பி.எஸ். பொறுப்பில் இருக்கிறார். தொடர்ந்து நீக்கப்படுகிறவர்களும் அவருடைய பொறுப்பு எல்லைக்குள் இருப்பவர்களே. ஓ.பி.எஸ்.சை அடுத்து வைத்திலிங்கமும் முதல்வரின் களையெடுப்பு பட்டியலில் இருக்கிறவர் என்பது நேற்றுவரை அரசல் புரசலாக இருந்தது, இன்று வெளிப்படையாக வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதாவது இந்த களையெடுப்பின் ஸ்டைலே அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்... அவர்கள் ஆதரவாளர்கள்தான் காலியாவார்கள். அந்த வகையில் 16 மந்திரிகள் இவர்கள் லைனில் இருப்பதாக தகவல். ஒருவரை இன்று பகல் முழுமையாக 'ஸ்கேன்' செய்து முடித்து விட்டுதான் லேசாக 'டச்' கொடுத்திருக்கிறார்களாம். இன்னைக்கு ராத்திரி யாருக்கெல்லாம் தூக்கம் போகப்போகுதோ....?


செ
ன்னை கோட்டையில் கால்நடைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் எப்போதும் போல வருகைப் பதிவேடு இன்றும் (மார்ச் - 3, 2016) களை கட்டிக் கொண்டிருந்தது. தேடி வந்தவர்களைப் பார்த்து பேசி அனுப்பி விட்டு சாப்பிட மேசை முன் மந்திரி டி.கே.எம். சின்னையா அமர்ந்த போது பகல் 2.30 மணி.

செய்தித் துறையிலிருந்து பேசிய ஒரு குரல், "சார், சானலை மாத்தாமல், 'அம்மா', டி.வி. சானலை பாருங்க" என்றது. அப்போதுதான் மந்திரி சின்னையாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. முதல் செய்தியாக, 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு' என்றது டி.வி. அறிவிப்பு. 

ஜெயா ஏன் ஜெயிக்கிறார்? - ஒரே ஒரு கடிதம்... அத்தனை கட்சிகளுக்கும் 'செக்'!

ஜெயா ஏன் ஜெயிக்கிறார்? - ஒரே ஒரு கடிதம்... அத்தனை கட்சிகளுக்கும் 'செக்'!

னாதிபதி ஆணைக்குழு முன் கோத்தபாய இன்றும் ஆஜரானார்


ரக்னா லங்கா நிறுவனத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் சம்பந்தமாக சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் பாரிய ஊழல், மோசடிகள்
குனிந்தது போதும்...பொங்கி எழு தலைவா! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஓபிஎஸ்?
அதிமுக-வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதால் தனி கட்சியை தொடங்க அவரது ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
7பேர் விடுதலை விவகாரம் : ராகுல்காந்தி கருத்து

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் விஜயகாந்த்!
திமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், தேமுதிகவுக்கு 59 சீட் தருவதற்கு திமுக ஒத்துக் கொண்டதாகவும் பேஸ்புக்,
7 தமிழரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் 
முடிவை ஏற்று மத்திய அரசே ஒப்புதல் தருக: வேல்முருகன்
 
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’ராஜிவ் வழக்கில் கால் நூற்றாண்டுகாலமாக சிறையில்வாடுகிற
7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் 
உச்சநீதிமன்ற உத்தரவு 
பின்பற்றப்படும் : ராஜ்நாத் சிங் 

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துப் பேசினார்.
7 பேரை விடுவிக்க காங்கிரஸ் எதிர்ப்பு

7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது காங்கிரஸ்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு இணக்கம்!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை

ad

ad