பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 11 வயது பிக்கு! விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம்
Sri Lanka PoliceSri Lanka Police Investigation
1 மணி நேரம் முன்
11 வயதுடைய பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயாகல கொகரதெனிய விகாரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் விகாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு முதல் குறித்த பிக்கு, விகாராதிபதி மற்றும் இரண்டு தேரர்களால் அவர்களது அறைகளில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த பிக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பயாகல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் உபாந்த டி சில்வா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.