புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2013

பரிதி இளம்வழுதிக்கு இது போதாத நேரம் :மா.சுப்பிரமணியன் 
முன்னாள் திமுக அமைச்சர் பரிதிஇளம்வழுதி ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் சேர்ந்தார்.  அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தது பற்றி
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ தி மு க பாரிய வெற்றி பெரும் என்ற கணிப்பில் தி மு க தி மு க கட்சியினர் அ தி மு க வுக்கு பாய்ச்சல் தி மு க வுக்கு பலத்த அடி .பரிதி இளம்வழுதி அதி மு க இல் இணைகிறார் 

திமுக மாஜி அமைச்சர் பரிதி இளம்வழுதி
ஜெ.,வுடன் சந்திப்பு
 


திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சென்னை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவின் கொடநாடு பயணத்தின்போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி தொலைக்காட்சி ஊடாக இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது 

கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்ற றகர் போட்டியின் போது வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பலர் வீரர்கள் காயமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதோடு மைதானத்துக்குள்ள நுழைந்த பொலிஸார் சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி தொலைக்காட்சி ஊடாக இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது 

மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு வழங்கப்பட்ட பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை 29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும்

அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 143
டி.ராஜாவுக்கு 34 வாக்குகள் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 22 வாக்குகள் திமுக வேட்பாளர் கனிமொழி 31 வாக்குகள்
வாக்குப் பதிவின்போது தமிழக சட்டமன்ற
கனிமொழிக்கு செல்லாத ஓட்டு : மேல்முறையீடு செய்ய திமுக முடிவு
ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ், தலா 2 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம்
இந்த வெற்றி தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் : டி.ராஜா
ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர்கள் மைத்ரேயன், அர்ச்சுனன், லட்சுமணன், ரத்தினவேல் மற்றும் இந்திய
திருமாவளவனுக்கு தடை நீக்கம் : இனி விழுப்புரம் மாவட்டத்திற்குள் செல்லலாம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விழுப்புரம் மாவட்டத்தில் நுழைவதற்கு உயர்நீதி மன்றம் இன்று அனுமதி அளித்தது. 
பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் கனிமொழி- ராஜா உள்பட 6 பேர் வெற்றி: தே.மு.தி.க. தோல்வி

பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் கனிமொழி- ராஜா உள்பட 6 பேர் வெற்றி: அ தி மு க அணி 5 பேரும் தி மு க அணி சார்பில் ஒருவரும் டேஹ்ரிவு தே.மு.தி.க. தோல்வி
தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபையில் உறுப்பினர்களாக இருந்த 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து புதிய 6 எம்.பிக்களை தேர்ந்து எடுப்பதற்கு இன்று தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.

தி.மு.க. சார்பில் கனிமொழி, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோர் களத்தில் இருந்தனர். 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டதால் இன்று ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதற்காக தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் உள்ள சட்டசபைக்குழுக் கூட்ட அறை வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜூனன் ஆகியோருக்கு தலா 36 வாக்குகள் கிடைத்தன. மற்றொரு அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமணனுக்கு 35 வாக்குகள் கிடைத்தன.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவுக்கு 34 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு 31 வாக்குகளும் கிடைத்தன. இந்த 6 வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 22 வாக்குகள் பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் தோல்வியடைந்தார். 

ad

ad