வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோதராதலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி.விக்கேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிகாந்தா, வீ.ஆனந்தசங்கரி, ரி.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற 8 வேட்பாளர்களின் அறிமுகமும் இடம்பெறவுள்ளது.
பிரச்சாரப்பிரிவு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
பிரச்சாரப்பிரிவு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு