23 மே, 2020

புங்குடுதீவில்  கள்ளமாடு வெட்டிய மூவரை கைது செய்த போலீஸ் .தப்பியோடிய  மூவர் பிரதேசசபை அலுவலர்கள் ஆவர் 21.05.2020 வியாழன் அன்று அதிகாலையில் புங்குடுதீவு 4ம் வட்டாரப்
பகுதியில் 6 நபர் கொண்ட கும்பல் ஒன்று பசு மாட்டை திருடி இறைச்சியாக்கும் போது அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் அதனைக் கண்டு உடனடியாக ஊர்காவற்றுறை, புங்குடுதீவு பொலிஸ் பிரிவினருக்கு வழங்கிய தகவலை அடுத்து மண்டைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி S.I திரு விவேகானந்தன் தலமையில் பொலிஸ் குழுவினருடன் புங்குடுதீவு பொலிஸ் பிரிவினரும் இணைந்து அப்பகுதி பொது அமைப்புக்கள் உதவியுடன் குறித்த இடத்தில் வைத்து இறைச்சியுடன் 3நபர்களை கைது செய்தனர் அத்துடன் இறந்த மாட்டின் உடல்பாகங்களும் கைப்பற்றினர். ஏனைய 3 நபர்களும் தப்பிஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்களில் இருவர் வேலணை பிரதேச சபை புங்குடுதீவு உபஅலுவலகத்தில் பணி புரியும் அரச அலுவலர்கள் ஆவர். இவர்கள் நீண்ட காலமாக மாடுகளை திருடிஇறைச்சியாக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர் ஏனைய 3 நபர்களையும் கைது செய்ய வேண்டும். அத்துடன் அரச ஊழியரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேலணை பிரதேச சபையினரிடம் கேட்கின்றனர்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
www.pungudutivuswiss.com
மீட்கப்பட்ட வன்கூடுடன் விடுதலைப்புலிகளின் வரி சீருடையும் ஆயுதமும்
கிளிநொச்சி – முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும்
www.pungudutivuswiss.com
பாகிஸ்தானில் விமான விபத்து, 104 பேர் பலி, பலர் படுகாயம்
பாகிஸ்தானின் வர்த்தக தலைநகர் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 54 பேர்
www.pungudutivuswiss.com
கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்தாக