புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2011


ஈ.பி.டி.பியின் மண் அகழ்வு மோசடி- மேல் முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது!

Published on May 23, 2011-3:26 pm   ·   No Comments
வடமராட்சி கிழக்கு அம்பன் குடத்தனை மணல்காடு பகுதிகளில் சட்டவிரோதமக மண் அகழ்ந்தெடுக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாண குடிமகன் ஒருவர் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளிடமிருந்து பதிலை கோரியுள்ளது.
பதில் அறிக்கை ஜூன் மாதம் 13 ஆம் திகதி மன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 2010 இல் புவியியல் அளவை மற்றும் மண் அகழ்வு பணியகம் வெளியிட்ட சுற்று நிருபம் புஆஃஊஆஃஏஆஃ09 இன்படி, மண் அகழ்வில் ஈடுபடும் யாழ்ப்பாணம் குடிமக்கள் எவரும் கிராமசேவை உத்தியோகத்தர் ஊடாக மாவட்டச்செயலாளருக்கு தங்கள் தேவைகள் பற்றி தெரிவித்து அதற்கான அனுமதி பெற்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் யாழ். மாவட்ட செயலாளர் மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரத்தை ஈ.பி.டி.பி கட்சியின் கீழ் செயற்படும் மகேஸ்வரி நிதியம் என்ற அமைப்பிற்கு வழங்கி உள்ளது. இது அரசாங்க சுற்று நிருபத்திற்கு முரணானது என முறைப்பாட்டாளர் நீதிமன்றத்தில் செய்த தாக்கல் செய்த வழக்கில் தெரிவித்துள்ளார்.
அச்சுற்றுநிருபத்தின்படி, மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் ஒரு கியூப் மண்ணுக்கு 286
ரூபா அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மகேஸ்வரி நிதியம் ஒரு கியூப் மண்ணுக்கு 13,400 ரூபா அறவிடுகின்றது. போக்குவரத்து வசதிகளையும் மகேஸ்வரி நிதியம் செய்து கொடுப்பதால் மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு கியூப்
மண்ணுக்கும் மேலதிகமாக 19,000 ரூபா செலுத்த வேண்டியுள்ளது. மாதாந்தம் மகேஸ்வரி நிதியம் சட்டவிரோதமான முறையில் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதிப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குடிமகன் தாக்கல் செய்திருக்கும் முறைப்பாட்டில் ( முறைப்பாட்டு இலக்கம் ஊயு674ஃ2010)  யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர், நல்லூர் பிரதேச செயலாளர், மகேஸ்வரி நிதிய இணைப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் யூன் 13ஆம் திகதிக்கு முதல் முறைப்பாட்டிற்கான பதிலை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் யூன் 13ஆம் திகதிக்கு முதல் முறைப்பாட்டிற்கான பதிலை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈ.பி.டி.பியினர் மண் அகழ்வில் ஈடுபடுவதால் அக்கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய அம்பனைச்சேர்ந்த கேதீஸ்வரன் தேவராஜன் என்ற இளைஞரை அம்பன் கிராமத்தில் அவரது வீட்டில் வைத்து ஈ.பி.டி.பியினர் சுட்டுக்கொலை செய்திருந்தனர்.
Share

மட்டக்களப்பில் மீண்டும் இராசதுரையின் பிரசன்னம்!

Published on May 24, 2011-6:06 pm   ·   No Comments
நீண்டகாலமாக அரசியலில் ஈடுபடாது அஞ்ஞாதவாசம் செய்த மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை கடந்த 22 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் மட்டக்களப்புக்கு வந்துள்ளார்.
நீண்டகாலமாக மலேசியாவில் தங்கியிருந்த அவர் அண்மையில் மட்டக்களப்பு வந்துள்ளார். தற்போது மட்டக்களப்பு நகரில் தங்கியிருக்கும் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரை சந்தித்து சமகால அரசியல் நிலமைகள் குறித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி தந்தை செல்வா கொண்டிருந்த இலக்கு பற்றியும் நினைவு கூர்ந்தார்.
இதே வேளை ஆன்மீகத் தலைவர்கள் சமூகப் பிரமுகர்களைச் சந்தித்து வரும் இவர் தனது கடந்த கால அரசியல் ஆதரவாளர்களையும் சந்தித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள சர்வ மதத் தலங்களையும் தரிசித்து வரும் இவர் கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலயம், அரசடி பிள்ளையார் ஆலயம், கோட்டமுனை அவுலியா பள்ளி வாசல், புளியந்தீவு அந்தோனியார் ஆலயம் ஆகியவற்றிற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அவர் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது தொடக்கம் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் வரைக்கும் உள்ள 5தேர்தல்களிலும் வெற்றி பெற்று 33ஆண்டுகளாக மட்டக்களப்பு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
1979ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கத்துடன் இணைந்து பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சரானார்.

யாழ். மாவட்ட வாக்காளர் பட்டியிலிலிருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் பெயர்கள் நீக்கம்!

Published on May 24, 2011-5:08 pm   ·   No Comments
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயந்தவர்கள் என யாழ். மாவட்டத் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாக்காளர் பட்டியல் மீளாய்வுப் பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று தற்போது பட்டியல் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.   இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுகளின்படி சுமார் 4 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்று அங்கு வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் மரணமானவர்கள். அத்துடன் இங்கிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் பெயர்களே அதிகளவில் நீக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாடுகளில் உள்ள சுமார் 3 இலட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கொக்குத்தொடுவாய் முதல் சுண்டிக்குளம்வரை 10ஆயிரம் சிங்களவர் குடியேற்றம்!

Published on May 24, 2011-5:03 pm   ·   No Comments
கொக்குத்தொடுவாய் முதல் சுண்டிக்குளம் வரையான முல்லைத்தீவின் கரையோரங்களில் பத்தாயிரம் சிங்கள மக்களைக்  குடியமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் முன்னர் சந்தை இருந்த இடத்தில் புத்த சமய நினைவுச் சின்னங்கள் அமைத்து அவற்றை பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் காட்ட முற்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு சிங்கள மகனும் குடியிருக்காத பகுதியான ஜெயபுரத்திலுள்ள இரண்டு வீதிகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் சிறிதரன் தெரிவித்தார்.
எமது இருப்பைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளிலிருந்து தமிழ் மக்கள் விழித்தெழுந்து எமது உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபட வேண்டும்’  என்று அவர் தெரிவித்தார்.
‘தமிழ் மக்களின் காணிகளை வலிந்து வளைத்து, புத்தர் சிலைகளையும் பௌத்த நினைவுச் சின்னங்களை நிறுவியும், தமிழர்களின் இருப்பைக் கேள்விக் குறியாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்


பெருந்தொகையான கப்பல்கள், விமானங்களை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டிய புலிகள்!

E-mailஅச்சிடுகPDF
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட முன்னர் விடுதலைப்புலிகள் பெருந்தொகையான கப்பல்கள் மற்றும் விமானங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருந்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைவர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவன் தெரிவித்துள்ளார்.

நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நெடியவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளியான தகவல் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

கப்பல்கள் மற்றும் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு தமிழ் வர்த்தகர்கள் மாத்திரமன்றி தமிழ் மக்களும் உதவி செய்துள்ளதாக நெடியவன் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நெடியவனை தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசாரணைகளுக்காக நெடியவன் இலங்கையிடம் கையளிக்கப்படலாம் என அரசாங்க பேச்சாளர் ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட விடுதலைப்புலி உறுப்பினர்கள் அழிக்கப்பட்டதன் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கம் தனக்கு இருந்தாகவும், எனினும் தமிழ் மக்களின் பெருபாலானவர்கள் அது குறித்து அச்சம் அடைந்திருந்தாகவும் நெடியவன் கூறியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருவதற்கு தனக்கு விரும்பம் இருந்ததாகவும், எனினும் இலங்கையின் பாதுகாப்பு பிரிவு தன்னை கண்காணித்துக் கொண்டிருந்தமையால் இலங்கைகைக்கு வருவதற்கு அச்சமுற்றிருந்ததாகவும் நெடியவன் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக சேகரிக்கப்பட்ட நிதியை புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் அதனை பொதுமக்களின் தேவைக்காக பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நெடியவன் கூறியுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விமல் வீரவன்ச நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் மட்டுமே பங்கேற்பு
[ செவ்வாய்க்கிழமை, 24 மே 2011, 11:55.03 AM GMT ]
2600வது பௌத்த ஜயந்தி விழாவில் பங்கேற்பதற்காக கடந்தவாரம்  அமெரிக்கா சென்றிருந்த விமல் வீரவன்சவும், போர்க்குற்றவாளியும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான சவேந்திர சில்வாவும் இணைந்து ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்
இந்த ஆர்ப்பாட்டம் கடந்த 19ஆம் திகதி நியூயோர்க்கில் இடம்பெற்றது.
எனினும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா வாழ் இலங்கையர்களில் 9 பேர் மாத்திரமே கலந்துகொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஏனையோர் தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தார், உறவினர் எனவும் தெரியவந்துள்ளது.
இதனைத் தவிர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஐந்து பேர் பாலித கோஹனவுடன் சென்றிருந்த இலங்கையர்களாவர்
அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் இலங்கையர்கள் வாழ்கின்ற போதிலும், அமைச்சர் விமல் வீரவன்சவும், இலங்கை தூதரகமும் விடுத்த அழைப்பை இவர்கள் பொருட்படுத்தவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்
இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் 9 ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
பெரும் எதிர்ப்புக்களை இலங்கையில் மேற்கொண்டுவந்த மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான மிக நெருக்கமான அமைச்சர் விமல் வீரவன்சவின் இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்காவில் சோபிக்கவில்லை என அந்த அதிகாரி மேலும் கூறினார்.

நெடியவன் கைதால் மகிழ்ச்சியடையும் யாழ். அரசாங்க அதிபர்!

E-mailஅச்சிடுகPDF
தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைவர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவன் நோர்வேயில் கைது செய்யப்பட்டமை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நெடியவன் கைது செய்யப்பட்ட விடயம் மகிழ்ச்சியையும், மன ஆறுதலையும் தருகிறது. அண்மைக்காலமாக நெடியவன் மின் அஞ்சல்களின் மூலம் தனக்கு அச்சுறுத்தல்களை விடுத்துவந்ததாகவும் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல், தன்னையும் தன் குடும்பத்தையும் கொலை செய்து விடப்போவதாகவும் நெடியவன் மிரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், நெடியவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளமை தொடர்பாக யாழ். இராணுவ கட்டளைத்தளபதி ஹத்துருசிங்கவிடம் முறைப்பாடு செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி முன்னாள் கேப்டன் ஆலிவர் கானுக்கு விமானநிலையத்தில் அபராதம்

 வெளிநாட்டு ஆடைகளை வாங்கியதை மறைத்த ஜெர்மனி அணியின் முன்னாள் கேப்டன் ஆலிவர் கானுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.
 ஜெர்மனி அணியின் முன்னாள் கேப்டன் ஆலிவர் கான் சமீபத்தில் துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுற்றுப்பயணம் முடிந்து திரும்பும் போது, சுமார் 7 ஆயிரம் யூரோ மதிப்புள்ள டி-சர்ட்டுகள், பேண்டுகள், டிரவுசர்கள் போன்றவற்வை வாங்கி வந்தார். இதற்காக அவர் 2 ஆயிரத்து 119 யூரோ சுங்க வரி செலுத்த வேண்டும்.
 ஆனால் ஆலிவர் கான் தான் வாங்கிய டி -சர்ட்டுகள் போன்றவற்றை மறைத்து கொண்டு சென்றதை மியூனிச் விமானநிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டது.
 ஆலிவர்கான் கடந்த 2008ம் ஆண்டு கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.பேயர்ன்மயூனிச் அணிக்காக 557 போட்டிகளில் விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் லீக்கில் 103 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


'பிபா'தலைவர் தேர்தல்: ஜோசப் பிளேட்டர் மீண்டும் போட்டியிடுகிறார்

பிளேட்டருடன் முகமது பின் ஹமாம்
 'பிபா' தலைவருக்கான தேர்தலில் ஜோசப் பிளேட்டர் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஆசிய கால்பந்து சம்மேளனத் தலைவர் முகமது பின் ஹமாம் தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார்.
 உலக கால்பந்து சம்மேளனமான 'பிபா'வில் தொடர்ந்து 3 முறை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜோசப் பிளேட்டர் தலைவராக உள்ளார்.அதாவது 13 ஆண்டுகாலம் 216 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட உலகின் மிகப் பெரிய அமைப்பான 'பிபா'வின் தலைவராக ஜோசப் பிளேட்டர் கோலோச்சுகிறார்.அவரது பதவி காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க ஜுன் 1ந் தேதி 'பிபா' காங்கிரஸ் கூடுகிறது.தொடர்ந்து இந்த முறையும் 4வது தடவையாக ஜோசப் பிளேட்டர் தேர்தலில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஆசிய கால்பந்து சம்மேளனத் தலைவர் முகமது பின் ஹமாம் போட்டியிட முடிவு செய்துள்ளார்.தற்போது 61 வயது நிரம்பிய முகமது பின் ஹமாம் கத்தார் நாட்டை சேர்ந்தவர். வருகிற 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகத்தாரில் நடக்க உள்ளது.இந்த வாய்ப்பை கத்தார் பெறுவதற்கு முகமது பின் ஹமாம்தான் முக்கிய காரணம்.
 ஜோசப் பிளேட்டர் எதிர்த்து முகமது பின் ஹமாம் களம் இறங்கும்பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கம் எனத் தெரிகிறது. இதனால் பிளேட்டர் போட்டியை தவிர்க்க முயன்று வருகிறார்.தற்போது ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜோசப் பிளேட்டர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. குட்டி நாடான கிழக்கு தைமூருக்கு சென்ற  பிளேட்டர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிளேட்டர், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் ஆனால் இதுதான் கடைசி முறை என்றும் கூறினார்.
 தொடர்ந்து மலேசியா சென்ற அவர் அங்கு வைத்து முகமது பின் ஹமாமை சந்திக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.ஆனால் பல்வேறு காரணங்களால் அவரை சந்திக்கும் வாய்ப்பு கைகூடவில்லை. இதற்கிடையே கடந்த வெள்ளியன்று தோகாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முகமது பின் ஹமாம் 'பிபா' தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்தார்.(madathuveliyan)

திமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா

First Published : 24 May 2011 12:35:10 PM IST

Last Updated : 24 May 2011 01:07:33 PM IST
சென்னை, மே.24: திமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் திமுகவினர் அடாவடியாக சொத்துக்களை சேர்த்துள்ளனர். அவற்றை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பெட்ரோல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே சட்ட மேலவை தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டது. தற்போதும் சட்ட மேலவை தேவையில்லை. எனவே அது அமையாது என்றார் அவர்.
பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிடாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவை அரசு அமல்படுத்தும். பள்ளிகள் கேட்டுக்கொண்டால் கட்டண விவகாரத்தில் அரசு தலையிடும் என ஜெயலலிதா கூறினார்.
தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என ஜெயலலிதா தனது பேட்டியின்போது தெரிவித்தார்.வெள்ளைக்கொடி வழக்கு! நாட்டை அழித்த கருணா அமைச்சர்! புலிகளை ஒழித்த நான் சிறையில்! பொன்சேகா சாட்சியம்
[ செவ்வாய்க்கிழமை, 24 மே 2011, 01:41.56 AM GMT ]
பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தனது சொந்தங்களைக் கூடப் புறக்கணித்து விட்டு நாட்டுக்காகச் சேவைசெய்த தான் இரு தடவைகள் காயமடைந்ததாக தெரிவித்த சரத் பொன்சேகா. இருப்பினும் இப்போது தான் சிறையில் வாடுகிறார் என்றும் நாட்டை பிரித்துவிடும் நோக்கில் செயற்பட்டு வந்த கருணா அரச சுகபோகங்களை அனுபவிக்கிறார் என்றும் குறிப்பிட்டார்
நீதிபதிகள் திருமதி தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ.எம்.ரி.பி. வராவௌ மற்றும் எம்.எஸ்.ரஸீன் ஆகியோர் முன்னிலையில் மேல் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
இராணுவத்தினரிடம் சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கொல்லுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவிடம் பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டார் என தான் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விசாரணையின் போது சரத் பொன்சேகா நிராகரித்தார். அத்துடன், அப்பத்திரிகை ஆசிரியரிடம் தான் கூறியவை திரிபுபடுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டையும் அழித்து, பொதுமக்களையும் அழித்து, பொதுச்சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்திய விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தளபதியாக செயற்பட்ட கருணா  நீதிமன்றில் நிறுத்தப்படாமல் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு சுகபோகம் அனுபவிக்கின்றார். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுப் புலிகளை ஒழித்த நான் சிறைத் தண்டனை அனுபவிக்கின்றேன் என்று வருத்தமுடன் தெரிவித்தார்.
இதேநிலையில், தான் 40 வருடங்களாக பணியாற்றிய இராணுவத்தையோ, படையினரையோ, நாட்டையோ தான் ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார் .
தனது மகளை பாடசாலையில் சேர்ப்பதற்கு தேவைப்பட்ட 6000 ரூபா பணத்தை தனது தாயிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும், அந்தளவு கஷ்டங்களை எதிர்நோக்கிய போதிலும் தான் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிக்கவில்லை எனவும் பொன்சேகா விசாரணையில் சுட்டிக்காட்டினார்.
அவர் சட்சியம் அளிக்கையில் தெரிவித்தவை வருமாறு:
1983ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றேன். 1986 ஆம் ஆண்டில் எனது மூத்த மகளைப் பாடசாலையில் சேர்த்தபோது எனது தாயிடத்தில் 6ஆயிரம் ரூபா பெற்று பாடசாலை சேர்ப்பதற்கான செலவுகளுக்காகப் பயன்படுத்தினேன்.
எனது இராணுவ வாழ்வில் பணக் கஷ்டம் இருந்தாலும் பிழையான வழிகளில் தேவையான பணத்தைப் பெறவில்லை என்று இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன். கடந்த 36 வருடங்களாக இவ்வாறு வாழ்ந்த நான் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த 4 வருடங்களிலும் கூட பண மோசடியில் ஈடுபடவில்லை.1986ஆம் ஆண்டில் இராணுவப் பரீட்சை ஒன்றில் முதலாம் இடம்பெற்ற எனக்கு பங்களாதேஷ் செல்ல புலமைப்பரிசில் கிடைத்தது.
இரண்டாவது ஈழப் போரில் அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனை ஆகிய பகுதிகளுக்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமிருந்த பகுதிகளை மீட்டுக்கொண்டோம்.1986ம் ஆண்டின் செப்டெம்பர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் களமிறங்கினேன். அதன்போது காரைநகர், ஊர்காவற்றுறை, மண்டைதீவு ஆகிய பகுதிகளை புலிகளிடமிருந்து மீட்டோம். தற்போதைய பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றும் கோத்தபாய ராஜபக்ஷ அப்பகுதிக்கு கட்டளைத் தளபதியாகவும், நான் சிங்கப் படைப்பிரிவிலும் பணியாற்றினோம். மண்டைதீவை மீட்கும் பொறுப்பு அன்று மேஜர் ஜெனரல் கொப்பேகடுவவினால் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஊர்காவற்றுறையிலிருந்து மண்டை தீவுக்கு நுழைவாயில் வழியாகச் செல்லாமல் முழுப் படையினரும் களத்தில் இறங்கிப் போராடினர். அதன்போது இராணுவத்தினர் பலர் உயிரிழக்க நேரிட்டது. 
அந்த அழிவில் இருந்து காப்பாற்ற எனக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இருந்தும் நான் எனது படைகளுடன் மண்டைதீவு நுழைவாயில் வழியாக உள்நுழைந்து 40 நிமிடங்களில் முழுத்தீவையும் மீட்டெடுத்தேன். போராட்டத்தில் விடுதலைப் புலிகள் 60 பேரின் சடலங்களும் 75ற்கும் மேற்பட்ட ஆயுதங்களும் இராணுவத்தால் மீட்கப்பட்டன.
மண்டைதீவு மீட்பின்போதே புலிகளுக்கு பெரும் அடி கொடுக்கப்பட்டது. 2ஆவது ஈழப் போரில் அதிகளவான புலிகள் கொல்லப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எனது இராணுவ சீருடையையும் தாய் நாட்டையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் காட்டிக் கொடுக்கமாட்டேன்.
அதன் பின்னர் கோத்தபாய ராஜபக்ஷவின் படை அணியும் எனது படை அணியும் யாழ்ப்பாணம் சென்று யாழ். குடாநாட்டை மீட்க முயற்சி செய்தோம். அதன் போது இராணுவ வீரர்கள் பலர் பலியானார்கள். கோத்தபாய ராஜபக்ஷ  தனிப்பட்ட காரணங்களால் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். 1991ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். எனக்கும் ஓய்வு பெறச் சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் எனது மனச்சாட்சி விடவில்லை. நாட்டையும் நினைத்தேன்.2006ம் ஆண்டில் 4ஆவது ஈழப் போர் ஆரம்பமானபோது விடுதலைப் புலிகள் நவீனரக ஆயுதங்களைப் பயன்படுத்திப் போராடினர். உலகின் மிகப் பயங்கரவாத இயக்கமாக அவர்கள் பலம் பெற்றிருந்தனர்.
1991ம் ஆண்டில் எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது. அப்படியிருக்க எனது தாய் சுகவீனமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். தாயைப் பார்க்க எனக்கு ஒருதடவைதான் சந்தர்ப்பம் கிட்டியது. தாயைப் பார்த்துத் திரும்பிய 48 மணித்தியாலங்களில் எனது தாய் காலமானார் என்ற செய்தி அறியக் கிடைத்தது. 
1991ம் ஆண்டு ஆனையிறவு இராணுவ முகாமைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றத் திட்டமிட்டனர். அதன் போது முதலாவது படைப்பிரிவில் இரண்டு அதிகாரிகளை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது. அன்றிருந்த பிரிகேடியர் அதற்கான பொறுப்பை எடுக்க பின்வாங்கிய போது கட்டளைத் தளபதியாக நான் தெரிவு செய்யப்பட்டேன்.1992ம் ஆண்டு மீண்டும் பதவி உயர்வு கிடைத்தது. எனது திருமணத்தின் பின் கிடைத்த முதலாவது பதவி உயர்வு இதுவாகும். 1992ம் ஆண்டில் எனது தந்தை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாகச் சேர்க்கப்பட்டார். அவர் பக்கத்தில் நான் இருந்தேன். அதன்போது வெலிஓயாவுக்கு உடனடியாகச் செல்ல உத்தரவு கிடைத்தது. எனது தந்தையின் உயிர் பிரியும் போதும் எனக்கு அருகில் இருக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. வெலிஓயாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது எனது தந்தை காலமானார் என்ற செய்தி கிடைத்தது.  இராணுவத்துக்காகவும் தாய் நாட்டுக்காகவும் இவ்வளவு அர்ப்பணம் செய்துள்ளேன்.
1993 ம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கான  போர் நடைபெற்றது. விடுதலைப் புலிகளுக்கு பால்ராஜ் என்பவர் தலைமை தாங்கினார். ஆனையிறவு முகாமில் இருந்து சுமார் 18 கிலோ மீற்றர் உள்ள கிளாலிப் பகுதியை மீட்பதே எனது நோக்கமாக இருந்தது. அதிகாலை 5 மணியிலிருந்து போராடினோம். இராணுவத்தினர் 100 பேர் பலியாயினர். 300 பேர் வரை காயமடைந்தனர். விடுதலைப் புலிகளில் 300 பேர் பலியானதோடு பால்ராஜ் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
அந்த நடவடிக்கையின்போது முதன் முறையாக நான் காயமடைந்தேன். இரண்டு மாதங்களாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றேன். இருந்தும், முழுமையான சுகத்தைப் பெற முன்னரே களத்துக்குச் சென்றுவிட்டேன்.1994ஆம் ஆண்டில் பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்பட்டேன். 
1995ம் ஆண்டில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரே மார்க்கத்தின் ஊடாகச்சென்று தாக்குதல் மேற்கொள்ள கலந்துரையாடல் இடம்பெற்றது. அதற்கு நான் எதிர்ப்பு வெளியிட்டேன். இரண்டு முனைகளில் தாக்குதல் நடத்தும்படி யோசனை கூறினேன். இதன்படி சுமார் 30 நாள்களில் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றினோம்.
1997ம் ஆண்டில் வவுனியாவில் இருந்து படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 150 கொமாண்டோக்கள் பலியாயினர். 1998ஆம் ஆண்டில் கனகராயன்குளம், மாங்குளம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினோம். மாங்குளம் நடவடிக்கையில் இரண்டாவது முறையாகக் காயமடைந்தேன். அதன் பின்னர் கிளிநொச்சியை இழந்தோம். நான்காவது ஈழப்போரின் பின் யாழ்ப்பாணத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்தோம். அதன் பின்னர் ஜனாதிபதியைச் சந்தித்தோம். அதன்போது சிரேஷ்ட அதிகாரிகளிடம் யுத்தம் எப்போது முடிவுறும் என ஜனாதிபதி கேட்டார். சிலர் 8 வருடங்களாகும் என்றனர். ஆனால் நான் 3 வருடங்களில் முடிவுக்கு கொண்டு வரலாம் என்றேன். அதனை நான்காவது ஈழப்போரில் சாதித்துக் காட்டினேன். 
இந்த வழக்குடன் தொடர்புடைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேறு எவரை இராணுவத் தளபதியாக நியமித்திருந்தாலும் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்போம் என்று கூறியுள்ளார். அவ்வாறானால் ஏன் கடந்த 30 வருட காலமாக யுத்தத்தில் வெற்றிபெற முடியாமல் போனது? பாதுகாப்புச் செயலாளரின் கூற்று பொய்யாகிவிட்டது.
இராணுவ விநியோகப் பிரிவில் நான் சேவை புரிந்தபோது எவ்வித இலாப நோக்கத்துடனும் செயலாற்றவில்லை. அதேபோன்றே இராணுவ டெண்டர் சபைக்கும் நான் தெரிவுசெய்யப்பட்டேன். அதில் கலந்துகொள்ளவில்லை.
2005 ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இரண்டு வாரங்களில் பதவி உயர்வு வழங்குவதாகப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்னிடம் கூறினார். அதேபோன்றே 2005 ம் ஆண்டில் ஒக்டோபர்  மாதம் 5ஆம் திகதி  எனக்கு கடிதம் கிடைத்தது என்றார். இதனையடுத்து வழக்கு விசாரணை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கைப்படையினரின் மாநாட்டை புறக்கணிக்குமாறு நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 24 மே 2011, 06:47.13 AM GMT ]
இலங்கை இராணுவத்தினர் நடத்தவுள்ள யுத்த வெற்றி தொடர்பான இராணுவ மாநாட்டை நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம்
புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் இலங்கை இராணுவம் தாம்  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டமையை மறைக்க முயல்வதாக கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்;ளது.

“பயங்கரவாதம் தோற்கடிப்பு” என்ற தலைப்பில் இலங்கை அரசாங்கம் நடத்தவுள்ள இந்த மாநாட்டுக்காக 54 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது

மே 31 ஆம் திகதி முதல் ஜூன் 2 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின்போது தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்த அனுபவங்களை இலங்கைப்படையினர் ஏனைய நாட்டு இராணுவ அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கைப்படையினர், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது பொதுமக்கள் மீது எறிகனை வீச்சுக்களை நடத்தினர்.மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தினர்

இந்தநிலையில் அவற்றை மறைப்பதற்காகவே மாநாட்டை நடத்துகின்றனர். எனவே இந்தமாநாட்டில் பங்கேற்பதால் எவ்வித இராணுவ ஒழுங்கு தொடர்பான படிப்பினையையும் பெற்றுக்கொள்ளமுடியாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் நிபுணர் அறிக்கை, அமரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை என்பன இலங்கையின் படையினர் இறுதிப்போரின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொன்றமையை உறுதிப்படுத்துகின்றன.

எனினும் யுத்தத்தின் முன்னரும் முடிந்த பின்னரும் இலங்கையின் ஜனாதிபதியும் இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியவும் யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று கூறினர்

மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இரர்ணுவ நடவடிக்கையின் போது பூச்சிய நிலையிலான உயிரிழப்புகள் என்ற நோக்கம் பின்பற்றப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 .
எனினும் இவற்றை நிராகரித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணையை செய்ய சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை ஏற்படுத்தப்படவேண்டும் என்று கோரியுள்ளது.


நான் உயிரோடு உள்ளவரை இனியொரு கிளர்ச்சி ஏற்பட விடமாட்டேன்! இந்திய தொலைக்காட்சிக்கு கே.பி. பேட்டி
[ செவ்வாய்க்கிழமை, 24 மே 2011, 02:17.12 AM GMT ]
தான் உயிருடன் உள்ளவரை அதாவது தன்னைக் கொன்றுவிட்ட பின்னர்தான் இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரும் பின்னர் தன்னைத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவருமான குமரன் பத்மநாதன்.
இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த மாத ஆரம்பத்தில் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  நேற்று ஒளிபரப்பப்பட்ட அந்தப் பேட்டியில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் வருமாறு:
ஜெயலலிதா உள்பட 229 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை 16-ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 14-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டமும், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவும் நேற்று பகல் 12.30 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் கோலாகலமாக நடந்தது.

இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த சட்டமன்ற வளாகம் புதுப்பொலிவுடன் தயார்ப்படுத்தப்பட்டிருந்தது. வளாகம் மலர்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 11 மணியில் இருந்தே அ.தி.மு.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்து அமரத் தொடங்கினார்கள். புதிய எம்.எல்.ஏ.க்கள் ஆர்வத்துடன் முன்னதாகவே வந்து அமர்ந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும், எம்.எல்.ஏ.க்களும் வரத் தொடங்கினார்கள். 11.31 மணிக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் ஆகியோர் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் வந்தனர். 11.45 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்.

12.08 மணிக்கு அமைச்சர்கள் வந்து இருக்கையில் அமர்ந்தனர். 12.10 மணிக்கு தே.மு.தி.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் வந்தார். அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்சி கொடியின் நிறத்தில் சால்வைகள் அணிந்திருந்தனர். 12.13-க்கு பா.ம.க. எம்.எல்.ஏ.க்களும், 12.15-க்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வந்தனர். ஒவ்வொரு கூட்டணியினரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

சரியாக 12.24 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வந்தார். அப்போது அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அவர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் வணக்கம் தெரிவித்து ஜெயலலிதா சபையில் அமர்ந்தார்.
அடுத்த சில நொடிகளில் முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்.

சரியாக 12.30 மணிக்கு தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள செ.கு.தமிழரசன் அவைக்கு வந்தார். அவருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். அவர் அனைவருக்கும் பதில் வணக்கம் தெரிவித்தார்.
முதலில் அவர் திருக்குறளும் அதற்கான உரையும் வாசித்து அவையை தொடங்கினார். தொடர்ந்து சாலை விபத்தில் மரணம் அடைந்த அமைச்சர் மரியம் பிச்சைக்கு இரங்கல் தெரிவித்து அனைவரும் 2 மணித் துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின்னர் தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் பேசியதாவது:-

வரலாற்றுப் புகழும், பாரம்பரியமும் பெருமையும் உடைய தமிழகத்தின் 14-வது சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற, மேதினியே வியக்கும் வண்ணம் ஒரு மவுனப் புரட்சியை நடத்தி, மிகப்பெரிய மகத்தான வெற்றியைப் பெற்று, ஏழு கோடி தமிழ் மக்களின் உள்ளமெல்லாம் நிறைந்து,

அவர்தம் இல்லமெங்கும் மகிழ்ச்சிச் சுடரை ஏற்றி, பெரும்புகழ் ஈட்டியிருக்கும், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கு, அடித்தளத்து மக்களின் ஆனந்தசுவாசக் காற்று, நலிந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான முதல்-அமைச்சர் அவர்களையும், அமைச்சர் பெருமக்களையும், உறுப்பினர்களாகிய உங்கள் ஒவ்வொருவரையும் நான் அன்போடு வரவேற்கிறேன். (அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்)


மக்கள் சேவையின் மகத்தான பணிக்கு முழுமையாக அர்ப்பணித்து தமிழக மக்களின் அங்கீகாரம் பெற்றுள்ள உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். ஜனநாயக முறையில் அமைதியாக தேர்தல் நடைபெற ஒத்துழைத்த பொதுமக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 14-வது சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களாக பதவியேற்க இருக்கும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய எண்ணத்தால், உழைப்பால் தமிழக மக்களின் வாழ்விற்கும், வளத்திற்கும் மேலும், பெருமை சேர்க்க வேண்டுமென்று என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்புமிக்க இப்பேரவைக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கின்றவரையில் ஆற்ற வேண்டிய முன் அலுவல்களை நிறைவேற்றுவதற்கென என்னை இப்பேரவையின் தற்காலிகத் தலைவராக கவர்னர் நியமித்திருக்கிறார். அதற்காக கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறிவிட்டு, தொடர்ந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டிய முறைபற்றி விவரித்தார். பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள இருப்பவர்களது பெயர்களை சட்டமன்ற செயலாளர் எ.எம்.பி.ஜமாலுதீன் வாசிக்க ஒவ்வொருவராக வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

முதலாவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 12.38 மணிக்கு `கடவுளறிய' என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் பதவிப் பிரமாணத்திலும், உறுப்பினர் படிவத்திலும் கையெழுத்திட்டார். அப்போது அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அவர் பதவிப் பிரமாணம் எடுத்து முடித்ததும் அவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர். முதல்-அமைச்சரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.சண்முகவேலு ஆகியோர் பதவி ஏற்றதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 12.45 மணிக்கு புறப்பட்டு சென்றார். அவர் திருச்சியில் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சை உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றார்.

அமைச்சர்களைத் தொடர்ந்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள், முன்னாள் துணை முதல்-அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமைக் கொறடா அதன்பின்னர் தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். விழா சரியாக 3.55 மணிக்கு முடிவடைந்தது.

நேற்றைய விழாவில் மொத்தம் 229 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, துரைமுருகன் ஆகிய தி.மு.க. உறுப்பினர்களும், அமைச்சர் என்.ஆர்.சிவபதி, திருச்சி கிழக்கு மனோகரன் (அ.தி.மு.க.) ஆகியோரும் பதவி ஏற்கவில்லை. திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினரான அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணமடைந்துள்ளார்.

விழா முடிந்ததும் தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன், ``சட்டசபை அடுத்து 27-ந் தேதி காலை 9.30 மணிக்கு கூடும். அன்று சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும்'' என்று அறிவித்தார்.

விளம்பரம்

ad

ad