தமிழகத்தின் மின் நிலைமையைப் பற்றி உயரதி காரிகளுடன் ஆய்வு நடத்திய முதல்வர் ஜெயலலிதா, "தமிழகத்தில் உயரழுத்த மின் நுகர்வோருக்கான கட்டுப் பாடுகள் அனைத்தும் தளர்த் தப்படுகிறது. ஜூன் 1 முதல் மின் வெட்டு இருக்காது' என்று தெரிவித்தார்.
அப்பாடா... என்று மக்களும் தொழில் முனைவோ ரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், ஜூன் 1 முதல் மின்வெட்டு நீக்கப்பட்டதா? இல்லை. அன்றைய தினம்தான் சென்னை நீங்கலாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்தது. நொந்துபோன மக்கள், இரவு நேரங்களில் தூக்கமின்றி வீதியில் நிற்கும் அவல நிலைக்கு