புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2013

யாழ். யுவதிகளுடன் கொழும்பில் ரூம் போடும் வங்கியாளர்!

வடமராட்சியில் நெல்லியடி வங்கிக் கிளை முகாமையாளரின் மன்மத லீலைகள் குறித்து கலாசாரம் பேணும் இளைஞர்கள் தளத்துக்கு முறையிட்டு உள்ளார்கள்.
விடுதலைப் பேரழகு 


ஈழவேட்கையின் தீரா ஊற்றாகி,
காலவேள்வியில் சூறாவளியாகி,


உச்சரிக்கும் போதெல்லாம்
உணர்வுகள் ஒளிகொள்ளும்
ஒற்றைச் சொல்லாகி 
எமையாளும் பெருந்தகையே!

வாழ்;த்துகின்றறோம்!

முன்னவனே!
மூபத்து ஆண்டுகளுக்குள்
மூத்தகுடி அவலத்தை
உலகறியச் செய்தவனே!

போற்றுகின்றோம்!

உணர்வுகளின்
அடிமைத் தோலுரித்து
ஐநூறு ஆண்டு கடந்து
விடுதலைப் பேரழகைத்
தரிசிக்கச் செய்த தலைவா!

நீயெம்
வரலாற்றுப் பேரெழில்.

உலகம் 
புரிந்து கொள்ள முடியாத புத்தகம்.

அற்புத மேய்ப்பனே!

இரு பகல்களின்
இடையிட்ட இரவு இது.

எம் தூரத்து நட்சத்திரங்களைக் கூட
கயவர் களவாடி விட்ட காலம். 

‘ஒளி தரவெனச் சூரியன் இனி வரான்’ 
என்பதாய்ச் சூழ்ச்சிகள் சூத்திரம்
கூறுகின்றன.

கூண்டுக்கிளிகளின்
தந்திரச் சாத்திரங்களில்
சிக்கிக் கிடக்கின்றன
சின்னச் சிந்தனைகள்.

உன்னருவைப் பச்சை குத்தி
பவ்வியமாய் வலம் வருகின்றன
சில பச்சோந்திகள்.

கார்த்திகை 27இல்
நெய்விளக்கேற்றி
நெஞ்சுருகிப் பின்
உன்னுரை கேட்ட
உலகம் உயிர்திருக்குமே.

கடந்த தடங்களை அறிவாக்கி
கடக்கும் கணங்களை நேர்த்தியாக்கி
வரும்காலத்தை நெறியாக்கி
வழிகாட்டிய 
உங்கள் உரைக்கு நிகர்
உலகிலேது?

வெற்றுவெளி கண்டு
இடையிட்டு எழுந்த
சில ஒலிகள்
பிரபாகரத்தின்
‘பிரதிகள்’ ஆக முயல்கின்றன.

உன் வெள்ளாட்டு மந்தைக்குள்
உருமாறி உலா வந்த
கருப்பாடுகள் சாயம் வெளிறிச்
சாத்தான்களாகித் திரிகின்றன. 

உயிரைச் சுற்றிக்கிடக்கும்
ஒற்றைச்சொல் மந்திரமே!

முள்ளிமுனை முற்றுப்புள்ளியல்லவென,
உன் பெயர் ஓதி உயிர்த்திருக்கும்
பிள்ளைகள் அறிவர்.

தோலுக்கு வரி பூசி போலிக்குப் புலியாகி
கூலிக்கு மாரடிக்கும் கூனர் கும்பல்
கூடி முயன்றாலும்,

உன் விழியேறிய தழல்
ஒருபோதும் அணையாது. 

பிறந்தோர் உருவிலும்
பிறப்போர் கருவிலும்
இணைந்தே இருக்கும். 

விடுதலைத் தீ.

ஸ்ருதிஹாசனை தாக்கிய நபர் ஜெயிலில் கதறல்; உண்மையை மறைத்த போலீஸ்

பிரபல நடிகருடன் இரவில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசனை விடிந்ததும் காலை 9,30 மணி அளவில் அசோக் சங்கர் என்ற நபர் ஸ்ருதிஹாசனை தாக்கினார். இவர் புரோடக்சன் கம்பெனியில் எடுபிடி

ஆருஷி வழக்கு: பெற்றோருக்கு ஆயுள் தண்டனை அளித்து காசியாபாத் கோர்ட் தீர்ப்பு
 
இளம்பெண் ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுல் தல்வார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு உண்மை புலப்பட்டுவிட்டது; நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது  : வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் உலகமெல்லாம் ஜனநாயகத்தில் நீதித்துறை
கொலை, வழிப்பறி, பலாத்காரம்: 38 ரவுடிகளை கைது செய்து விசாரணை
 

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொலை, வழிப்பறி, பலாத்காரம் என கொடூரமான சம்பவங்கள் நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பெருத்த


ஆளுநர் ரோசைய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசைய்யாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வறிக்கையை ஜெயலலிதா வழங்கினார். தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு! மூவரின் தூக்குத் தண்டனை ரத்தாக வேண்டும்!- வைகோ அறிக்கை
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது, மேலும் அநீதி நிகழாமல் மூவரின் தூக்குத் தண்டனை ரத்தாக வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபாகரன் பிறந்த நாள்! யாழில் இராணுவம் குவிக்கப்பட்டு சோதனைகள் தீவிரம்!
யாழ். நகர் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் நேற்று மாலை முதல் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
மன்னாரில் பறக்கவிடப்பட்ட புலிக்கொடியால் பெரும் பரபரப்பு: கடும் சோதனை நடவடிக்கையில் இராணுவத்தினர்
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின், தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமும் சோதனை நடவடிக்கைளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு இராணுவ ஆளுநருக்கும் மாகாண சபைக்கும் முறுகல் வெடித்தது! ஆளுநரின் சர்வாதிகாரம் என குற்றச்சாட்ட
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் இராணுவ ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது.
மாவீரர்களுக்கு கரவெட்டி பிரதேச சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது! அஞ்சலி செலுத்திய விஜேநேசன் கைது
மாவீரர்களுக்கான அஞ்சலி கரவெட்டி பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை செலுத்தப்பட்டுள்ளது.அனைத்துலக பெண்கள் கொடுமை தினமான இன்று அதனை அனுஷ்டிப்பதற்கான நிகழ்வு பிரதேச சபை தவிசாளர் சு.வியாகேசு தலைமையில் கரவெட்டி பிரதேச சபை

யாழில் இருந்து வேலணைப்பாலம் ஊடாக பயணம் செய்வதில் சிரமம்!

புங்குடுதீவு வேலணைப் பாலம் கடந்த பல வருட காலமாக புனரமைக்கப்படாமலுள்ளதால் இந்தப் பாலத்தினூடாகப் போக்குவரத்துச் செய்கின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். (படங்கள்)

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சென்னை மாணவர்கள்!



 
 தமிழீழ தேசிய் தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்த நாளினை தமிழர்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் விடுதியில் மாணவர்கள் கேக் வெட்டி மாணவர்களுடன் பரிமாறி கொண்டாடியுள்ளார்கள்.
சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – குத்துக்கரணம் அடித்தது சீனா

சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று சீனா கூறியுள்ளது.
அண்மையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவகார அமைச்சின் பேச்சாளர், மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை தடுக்க முடியாது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்கள் மாவீரர் நாளை நினைவு கூருவதை தடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவீரர் நாளை நினைவு கூருவது சட்டவிரோதமானது என்று சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்து
மாவீரர்களை நினைவு கூருவதற்கு சிறிலங்கா இராணுவம் தடை

விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு சிறிலங்கா இராணுவம் தடைவிதித்துள்ளது. நாளை மாவீரர் நாள் நினைவு கூரப்படவுள்ள நிலையில், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு!
பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
<iframe width="560" height="315" src="//www.youtube.com/embed/kfO3HhWSlZU" frameborder="0" allowfullscreen></iframe>
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 59ஆவது பிறந்த நாள் நிகழ்வுகளில் தாயக, புலம்பெயர் மற்றும் தமிழக மக்கள் சிறப்புறக்கொண்டாடி வருகின்றனர்.
கேக் வெட்டி, சிற்றுண்டிகளைப் பரிமாறியும், பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்தும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்காக வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வுகள் கடந்த நள்ளிரவு 12.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் கேக் வெட்டி, சிற்றுண்டிகளைப் பரிமாறி தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
thalaivar
1481128_550416425041915_1182745309_n

ad

ad