புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 செப்., 2012


மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் தீக்குளிப்பு! அவர் வழங்கிய பேட்டி உள்ளே.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் போஸ் மைதானத்தில் இன்று காலை ஒருவர் தீக்குளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு சேலத்தில் தீக்குளித்த 
இளைஞர்  விஜயராஜ் நக்கீரனுக்கு  பேட்டி! (வீடியோ)
ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு சேலத்தில் இளைஞர் தீக்குளிப்பு (படங்கள்)

ராஜபக்சவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அதிமுக மனு

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
செப்டம்பர் 20-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச வருகை தர உள்ளார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அரசியல் கட்சி ஒன்றில் இத்தகைய மனு கொடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


த.தே.கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் திடீர் சந்திப்பு
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இன்று காலை கொழும்பு பாக் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் திடீர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.


கிழக்கு மாகாணசபையில் யாருக்கு ஆதரவளிப்பது என நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசாங்கத்துடன் நடந்த பேச்சின் போதும் அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலஙகா முஸ்லீம் காங்கிரஷிற்கும் இடையில் இன்று கொழும்பில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக்பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.09.2012 அன்று மாலை பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி சென்னை மெரினா கடற்கரை சாலை பாரதிதாசன் சிலையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டது. இந்தப் பேரணி ராயப்பேட்டை வி.எம்.தெருவில் முடிவடைந்தது. 

போர்குற்ற விசாரணை: இலங்கை வலையில் இந்தியா விழக்கூடாது: ராமதாஸ்
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பான காலமுறை மதிப்பீட்டாய்வு விசாரணையில் இலங்கை விரிக்கும் வலையில் இந்தியா விழக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.