படையினரால் கொல்லப்பட்ட மூவரது சடலங்களும் அனுராதபுரவில் சிறிலங்கா அரசால் அடக்கம் |
நெடுங்கேணிக்குத் தெற்கே வெடிவைத்தகல்லு என்ற இடத்தில் சிறிலங்காப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரதும் சடலங்கள் இன்று அனுராதபுர மயானத்தில் |
-
12 ஏப்., 2014
நெடுங்கேணியில் கொல்லப்பட்ட தேவிகன் அனுராதபுர, கொலன்னாவ தாக்குதல்களில் பங்கெடுத்த வான்புலி
நெடுங்கேணியில் நேற்று நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக சிறிலங்காப் படையினரால் அறிவிக்கப்பட்ட மூன்று பேரில், தேவிகன் என்பவர், விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பின் முக்கியமான விமானி என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். நெடுங்கேணிக்குத் தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற இடத்தில், நேற்று அதிகாலையில். நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறி, கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரையும் சிறிலங்காப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னர் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் வான்புலிகளின் விமானியான தேவிகன், 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட அனுராதபுர வான்படைத்தளம் மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் குதம் என்பனவற்றின் மீதான வான் தாக்குதல்களில் பங்கெடுத்தவர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். 1995ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்ட ராதா படையணியைச் சேர்ந்த கரும்புலியான தேவிகன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இருந்தவர். போரின் முடிவில் இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற இவர், பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து அண்மையில் சிறிலங்கா திரும்பியிருந்த்தாகவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஏனைய இருவரான கோபி மற்றும் அப்பன் ஆகியொர், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கோபி போரின் முடிவில் சிறிலங்காப் படையினரால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர், சவூதி அரேபியாவுக்குச் சென்று சாரதியாகப் பணியாற்றியவர் என்றும், அங்கிருந்த ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று திரும்பியவர் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றைய தேடுதல் நடவடிக்கைக்காக சுமார் 2000 சிறிலங்காப் படையினர் நெடுங்கேணிக்குத் தெற்கிலுள்ள காட்டுப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. |
புத்தாண்டில் வடமேல் மாகாணத்தில் புதிய சொகுசுப் பேருந்து
பொது நலவாய மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்பது கோடி ரூபா பெறுமதிமிக்க ஆறு சொகுசு பஸ்கள் வடமேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சித்திரைப் புத்தாண்டை
வெடி பொருட்களுடன் கைதானவர்களுக்கு நீதி மன்றில் பிணை
மன்னார் சவுத்பார் கடற்கரைப் பகுதியில் 52 டைனமைட் வெடி பொருட்களுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த
விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார்
முன்னாள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் விஜயகாந் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி எனும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.இன்றைய கட்சி அறிமுக விழாவில் கருத்து
காணாமல் போன மலேசிய விமானத்தின் துணை விமானி புறப்பட்ட 1 மணித்தியாலத்தில் அவசர அழைப்பு
மலேசிய விமானம் பீஜிங் நோக்கி பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு மேற்கொண்டார் என்றும், அதன் பின்னரே ராடர் பதிவிலிருந்து விமானம்
கோபி உள்ளிட்ட மூவரின் கொலை குறித்து ஐ.நா கேள்வி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து நேற்றையதினம் கோபி உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய
பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர சுகாதார உத்தியோகத்தர்கள்
தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டிருந்த குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் நாளை முதல் வழமையான தங்களின் கடமைகளில் ஈடுபடவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்க ஜானதிபதி பிரதிநிதி ரம்போசாவை சந்தித்த பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு
இலங்கை விவகாரங்களை கையாளும் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ரம்போசாவைத் ஜோகன்ஸ்பேர்க்கில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட
Pungudutivu Welfare Association (PWA) proudly present Charity film Show on Saturday 12th April 2014.
Date: Saturday 12/04/2014
Time: 5 pm (prompt)
Place: Harrow Safari Cinema,
Station Rd, Harrow, HA1 2TU
Time: 5 pm (prompt)
Place: Harrow Safari Cinema,
Station Rd, Harrow, HA1 2TU
There will be a screening of a brand new film "Panivillum Malarvanam" made by a team closely involved with Pungudutivu youths in India.
All proceeds from the film will be donated to Sarvothayam a local charity in Pungudutivu.
Please show your support by attending and encourage others to come!
Organised by,
Pungudutivu Welfare Association Youth Forum UK.
Pungudutivu Welfare Association Youth Forum UK.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)