புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2023

கொழும்பில் தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக் கூட்டம்! [Sunday 2023-12-31 16:00]

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் பத்தாம் திகதி அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து மத்திய செயற்குழுக் கூட்டமொன்றும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் பத்தாம் திகதி அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மத்திய செயற்குழுக் கூட்டமொன்றும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பொதுஜன பெரமுனவில் பிளவுபட்ட புதிய அரசியல் கூட்டணி நாளை உதயம் : நாட்டை நேசிக்கும் தலைவரை ஜனாதிபதியாக்குவோம் - அநுர பிரியதர்ஷன யாப்பா

www.pungudutivuswiss.com
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் புதிய மாற்று அரசியல் கூட்டணி நாளை

29 டிச., 2023

யாழ். திரும்பிய கில்மிஷாவுக்கு அமோக வரவேற்ப

www.pungudutivuswiss.com

ஸீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப போட்டி நிகழ்ச்சியில், வெற்றியீட்டிய, கில்மிஷா இன்று சென்னையில்  இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய போது, பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று சென்னையில் இருந்து பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார்.

ஸீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப போட்டி நிகழ்ச்சியில், வெற்றியீட்டிய, கில்மிஷா இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய போது, பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று சென்னையில் இருந்து பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார்

விஜயகாந்த் மறைவுக்கு சுமந்திரன், சாணக்கியன் இரங்கல்

www.pungudutivuswiss.com


தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மறைவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மறைவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

www.pungudutivuswiss.com



இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும்,  விவகாரம் தொடர்பாக பேசப்பட்டபோது யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே தர்க்கம் ஏற்பட்டது.

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும், விவகாரம் தொடர்பாக பேசப்பட்டபோது யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே தர்க்கம் ஏற்பட்டது.

25 டிச., 2023

காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கும்

www.pungudutivuswiss.com


இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டு கொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை நம்புவோம் என யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டு கொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை நம்புவோம் என யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்

ரிரான் அலசுக்கு கத்தோலிக்க திருச்சபை சவால்! - வலுக்கிறது மோதல்.

www.pungudutivuswiss.com


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் குண்டர் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. அருட்தந்தை சிறில் காமினி தொடர்புடைய விபத்து குறித்து பேராயருக்கு நெருங்கிய ஒருவர் அவருடன் தொலைபேசியில் உரையாடியதாக அவர் தெரிவித்துள்ளமை முற்றிலும் பொய்யாகும் என்று பேராயர் இல்லத்தின் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் குண்டர் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. அருட்தந்தை சிறில் காமினி தொடர்புடைய விபத்து குறித்து பேராயருக்கு நெருங்கிய ஒருவர் அவருடன் தொலைபேசியில் உரையாடியதாக அவர் தெரிவித்துள்ளமை முற்றிலும் பொய்யாகும் என்று பேராயர் இல்லத்தின் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார்

23 டிச., 2023

14 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாளை கலந்துரையாடல்

www.pungudutivuswiss.com


28 ஆண்டு காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளினதும் மனிதாபிமான விடுதலையை வலியுறுத்தி பொதுவெளியூடாக ஜனாதிபதியிடம் அனைவரும் இணைந்து பொது வேண்டுகோளினை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

28 ஆண்டு காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளினதும் மனிதாபிமான விடுதலையை வலியுறுத்தி பொதுவெளியூடாக ஜனாதிபதியிடம் அனைவரும் இணைந்து பொது வேண்டுகோளினை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

பொது வேட்பாளராகப் போட்டியிடத் தயார்!- விக்னேஸ்வரன் தெரிவிப்பு.

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினேன் சரிவராது என தோன்றியதால் விலகினேன் என  தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினேன் சரிவராது என தோன்றியதால் விலகினேன் என தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கின் முன்னாள் முதல்வர் மரணம்

www.pungudutivuswiss.com


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இன்று காலை மரணமானார்.  சுகயீனமுற்று தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் மரணமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இன்று காலை மரணமானார். சுகயீனமுற்று தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் மரணமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

21 டிச., 2023

புதிய இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா கொழும்பு வந்தார்

www.pungudutivuswiss.com


இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானுகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று கொழும்பை வந்தடைந்தார்.

இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானுகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று கொழும்பை வந்தடைந்தார்.

வாக்குறுதியை மீறிய ஜனாதிபதியை சந்திக்கமாட்டேன்! - விக்கி அறிவிப்பு.

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் எம்.பிக்களை இன்று சந்திக்கிறார் ரணில்! [Thursday 2023-12-21 06:00]

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வடக்கில் சிக்கிய போதைப் பொருட்கள்! - அதிர்ச்சித் தகவல்கள்.

www.pungudutivuswiss.com


வடக்கில் போதைப்பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களின் தொகுப்பு இது.

வடக்கில் போதைப்பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களின் தொகுப்பு இது.

ரணிலுக்கே ஆதரவு- மொட்டு அமைச்சர் திடீர் அறிவிப்பு

www.pungudutivuswiss.com


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவேன் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
 நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவேன் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்

20 டிச., 2023

ஜெனிவா பொறிமுறை செயலிழக்கின்றதா? - அலன் கீனன் கேள்வி

www.pungudutivuswiss.com


உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் வழங்குகின்ற அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்திறன்மிக்க கண்காணிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் எனவும், அது நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் வழங்குகின்ற அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்திறன்மிக்க கண்காணிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் எனவும், அது நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளா

இனப்படுகொலையாளி மகிந்தவுடன் சந்திப்பு - கனடிய தமிழ் சமூகம் கடும் சீற்றம்! [Tuesday 2023-12-19 18:00]

www.pungudutivuswiss.com
கனேடிய தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளமை குறித்து கனடா தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் ஏமாற்றமும் சீற்றமும் வெளியிட்டுள்ளனர் என  தமிழ் கார்டியன் தெரிவித்துள்ளது.

கனேடிய தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளமை குறித்து கனடா தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் ஏமாற்றமும் சீற்றமும் வெளியிட்டுள்ளனர் என தமிழ் கார்டியன் தெரிவித்துள்ளது

உலகத் தமிழர் பேரவை மகிந்தவைச் சந்தித்தது குறித்து ஹரி ஆனந்தசங்கரி அதிருப்தி!

www.pungudutivuswiss.com


உலகத் தமிழர் பேரவையும், கனடிய தமிழ்க் காங்கிரஸூம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்ததையிட்டு நான் கடும் அதிருப்தி கொண்டுள்ளேன் என்று கனடிய சுதேச உறவுகளின் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி  தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவையும், கனடிய தமிழ்க் காங்கிரஸூம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்ததையிட்டு நான் கடும் அதிருப்தி கொண்டுள்ளேன் என்று கனடிய சுதேச உறவுகளின் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ருத்தித்துறையில் கொட்டித் தீர்த்த 146 மில்லி மீட்டர் கனமழை! - பல பகுதிகள் வெள்ளத்தில்.

www.pungudutivuswiss.com

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், இலங்கையில் அதிகபட்ச மழை வீழ்ச்சி பருத்தித்துறையில் பதிவாகியுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், இலங்கையில் அதிகபட்ச மழை வீழ்ச்சி பருத்தித்துறையில் பதிவாகியுள்ளது

19 டிச., 2023

கப்பல்கள் மீதான ஹுதிகளின் தாக்குதல்களும் ஹுதிகளைத் தாக்கத் தயாராகும் அமெரிக்காவும்

www.pungudutivuswiss.com

யாழ். குடாநாட்டில் இரவிரவாக கொட்டித் தீர்த்த மழை

www.pungudutivuswiss.com

வடக்கில் தொடர்ந்து அமழை பெய்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடும் மழை பெய்துள்ளது. இரவிரவாக மழை கொட்டிக் கொண்டிருந்தது. இன்று காலை 6.30 தொடக்கம் 7.30 வரை மிக கனமழை பெய்துள்ளது. இதனால் வீதிகள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் தொடர்ந்து அமழை பெய்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடும் மழை பெய்துள்ளது. இரவிரவாக மழை கொட்டிக் கொண்டிருந்தது. இன்று காலை 6.30 தொடக்கம் 7.30 வரை மிக கனமழை பெய்துள்ளது. இதனால் வீதிகள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் தாக்குதலால் அதிரும் காசா: 1000 பேரை சிறைப்பிடித்த இஸ்ரேல்! [Monday 2023-12-18 16:00]

www.pungudutivuswiss.com

இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருவதுடன் , ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி ஆயிரம் பேரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச் சென்றுள்லதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், இஸ்ரேல் தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை.

இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருவதுடன் , ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி ஆயிரம் பேரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச் சென்றுள்லதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், இஸ்ரேல் தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை

கனடாவில் டெஸ்லா கார்களில் ஏற்பட்டுள்ள கோளாறு

www.pungudutivuswiss.com

கனடாவில் பயன்படுத்தப்படும் பிரபல கார்களில் ஒன்றான டெஸ்லா கார்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 193000 டெஸ்லா ரக கார்கள் மீள அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய போக்குவரத்து திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கனடாவில் பயன்படுத்தப்படும் பிரபல கார்களில் ஒன்றான டெஸ்லா கார்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 193000 டெஸ்லா ரக கார்கள் மீள அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய போக்குவரத்து திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது

தரமற்ற மருந்து இறக்குமதி - சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

www.pungudutivuswiss.com


சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்

நாடு முழுவதும் ஒரே நாளில் தேடுதல் - 2121 பேர் கைது

www.pungudutivuswiss.com

நாட்டில் நேற்று நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 2020 ஆண்களும், 101 பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்று நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 2020 ஆண்களும், 101 பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்! [Monday 2023-12-18 17:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு  திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்

18 டிச., 2023

நாட்டை வங்குரோத்தாக்கிய எடுபிடிகள் மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர்

www.pungudutivuswiss.com


நாட்டையே வங்குரோத்தாக்கிய ஜனாதிபதியின் எடுபிடிகள் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக பெறுமதி சேர் வரியை (வற்) அதிகரித்து   மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் என்றும்,7 மூளைகளை கொண்டவர்கள் என நாட்டையே வங்குரோத்தாக்கிய காக்கைகளுக்கு மைனாக்களும் மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர் எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

நாட்டையே வங்குரோத்தாக்கிய ஜனாதிபதியின் எடுபிடிகள் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக பெறுமதி சேர் வரியை (வற்) அதிகரித்து மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் என்றும்,7 மூளைகளை கொண்டவர்கள் என நாட்டையே வங்குரோத்தாக்கிய காக்கைகளுக்கு மைனாக்களும் மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர் எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினா

காலத்தைக் கடத்த முனைகிறது அரசாங்கம்!- 3 நாடுகளின் தூதுவர்களுக்கு தமிழ் எம்.பிக்கள் எடுத்துரைப்பு. [Monday 2023-12-18 06:00] உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்து அமுலாக்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதானது காலத்தைக் கடத்தும் செயலாகும் என்று வடக்கு தமிழ் பிரதிநிதிகள் ஜப்பான், தென்னாபரிக்கா,மற்றும் சுவிட்சர்லாந்து இராஜதந்திரிகளிடத்தில் நேரடியாக எடுத்துரைத்துள்ளனர்

www.pungudutivuswiss.com



உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்து அமுலாக்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதானது காலத்தைக் கடத்தும் செயலாகும் என்று வடக்கு தமிழ் பிரதிநிதிகள் ஜப்பான், தென்னாபரிக்கா,மற்றும் சுவிட்சர்லாந்து இராஜதந்திரிகளிடத்தில் நேரடியாக எடுத்துரைத்துள்ளனர்.

உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்து அமுலாக்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதானது காலத்தைக் கடத்தும் செயலாகும் என்று வடக்கு தமிழ் பிரதிநிதிகள் ஜப்பான், தென்னாபரிக்கா,மற்றும் சுவிட்சர்லாந்து இராஜதந்திரிகளிடத்தில் நேரடியாக எடுத்துரைத்துள்ளன

17 டிச., 2023

தமிழர் தாயகம் எரிந்து கொண்டிருக்கும் போது உலகத் தமிழர் பேரவை பிடில் வாசிக்கின்றதா?

www.pungudutivuswiss.com

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை நோக்கமாகக் கொண்டு செயற்படும் பல அமைப்புகள் மத்தியில், குளோபல் தமிழ் ஃபோரம் (GTF) எனப்படும் உலகத் தமிழர் பேரவை  (உ.த.பே) வெவ்வேறு புத்த அமைப்புக்களைச் சேர்ந்த மூத்த புத்த பிக்குகள் கொண்ட இலங்கைக்கான “சிறந்த இலங்கை சங்க மன்றத்தை” சந்தித்ததானது, பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை நோக்கமாகக் கொண்டு செயற்படும் பல அமைப்புகள் மத்தியில், குளோபல் தமிழ் ஃபோரம் (GTF) எனப்படும் உலகத் தமிழர் பேரவை (உ.த.பே) வெவ்வேறு புத்த அமைப்புக்களைச் சேர்ந்த மூத்த புத்த பிக்குகள் கொண்ட இலங்கைக்கான “சிறந்த இலங்கை சங்க மன்றத்தை” சந்தித்ததானது, பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

முல்லைத்தீவில் குளங்கள் அனைத்தும் நிரம்பின- பல கிராமங்கள் வெள்ளத்தில்

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக  அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் கதவுகளிலிருந்து நீர் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் கதவுகளிலிருந்து நீர் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது.

மன்னாரில் வெள்ள அபாய எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com


மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால்  பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது

16 டிச., 2023

கொட்டித் தீர்த்த கடும் மழை - கிளிநொச்சியில் வெள்ளம்

www.pungudutivuswiss.com
கிளிநொச்சியில் நேற்று  பெய்த கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் வியாழக்கிழமை  கடும் மழை பெய்தது. இதனால், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் வியாழக்கிழமை கடும் மழை பெய்தது. இதனால், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

15 டிச., 2023

இலக்கு நிறைவடையும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது - புடின்

www.pungudutivuswiss.com

குருநாகல் முன்னாள் நகர முதல்வருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை

www.pungudutivuswiss.com


குருநாகல் முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்ததாக குறித்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குருநாகல் முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்ததாக குறித்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது

இலங்கை சிங்கள நாடும் அல்ல, தமிழ் நாடும் அல்ல! - என்கிறார் மனோ

www.pungudutivuswiss.com


இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும்.  சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் எனதமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் எனதமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் புதைகுழி மனித எச்சங்கள் யாழ்ப்பாணத்தில் பகுப்பாய்வு

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த தகவலை சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த தகவலை சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்

உலகத் தமிழர் பேரவையின் முயற்சிகளை தோற்கடிப்போம்

www.pungudutivuswiss.com

புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக் கொண்டு ஒரு அரசாங்கமே செய்ய முடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக் கொண்டு ஒரு அரசாங்கமே செய்ய முடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்

இமயமலைப் பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்பு இல்லையாம்! - சொல்கிறார் சுமந்திரன்

www.pungudutivuswiss.com


இமயமலை பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இமயமலை பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் நாளை வரை தொடரப் போகும் கனமழை! - வெள்ள அபாயம்.

www.pungudutivuswiss.com



வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே தோன்றியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் கன மழையானது எதிர்வரும் 16.12.2023 வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே தோன்றியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் கன மழையானது எதிர்வரும் 16.12.2023 வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா!

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்துள்ளார்.

14 டிச., 2023

இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை

www.pungudutivuswiss.com

'இமயமலை பிரகடனம்' என ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஜனாதிபத

www.pungudutivuswiss.com

இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முகவர்களாக செயற்படும் உலக தமிழர் பேரவை என்ற தமிழ் துரோக அமைப்பை கொண்டு 'இமயமலை பிரகடனம்' என்ற ஏமாற்று நாடகத்தை ஜனாதிபதி அரங்கேற்றுகிறார். இது முற்றிலும் அயோக்கியத்தனமானது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முகவர்களாக செயற்படும் உலக தமிழர் பேரவை என்ற தமிழ் துரோக அமைப்பை கொண்டு 'இமயமலை பிரகடனம்' என்ற ஏமாற்று நாடகத்தை ஜனாதிபதி அரங்கேற்றுகிறார். இது முற்றிலும் அயோக்கியத்தனமானது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்

அமெரிக்க காங்கிரசில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் யோசனை முன்வைப்பு

www.pungudutivuswiss.com


இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று, அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று, அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது

சுவிஸில் வெளிநாட்டவர்கள் கூடுதல் தகமைகளை கொண்டுள்ளனர்

www.pungudutivuswiss.com

13 டிச., 2023

நெல்லியடியில் மருமகனால் தாக்கப்பட்ட மாமனார் மரணம்! [Wednesday 2023-12-13 15:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார்.  கரவெட்டி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நேசராசா அன்ரன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார். கரவெட்டி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நேசராசா அன்ரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பந்தனிடம் இமயமலைப் பிரகடனம்!

www.pungudutivuswiss.com


ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைக் காண்பதில் பௌத்த தேரர்கள், அனைத்து அரசியல் தரப்பினர், பொதுமக்களை மையப்படுத்திய உலகத் தமிழர் பேரவையினரின் முயற்சியானது தாமதமாக முக்கெடுக்கப்படடுவதாக இருந்தாலும் அது வெற்றிபெறுவதிலேயே தமிழர்களினதும் ஒட்டுமொத்த நாட்டினதும் எதிர்காலம் தங்கிள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைக் காண்பதில் பௌத்த தேரர்கள், அனைத்து அரசியல் தரப்பினர், பொதுமக்களை மையப்படுத்திய உலகத் தமிழர் பேரவையினரின் முயற்சியானது தாமதமாக முக்கெடுக்கப்படடுவதாக இருந்தாலும் அது வெற்றிபெறுவதிலேயே தமிழர்களினதும் ஒட்டுமொத்த நாட்டினதும் எதிர்காலம் தங்கிள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்

உலக தமிழர் பேரவையின் சந்திப்புகள் - பிரித்தானிய தமிழர் பேரவை அதிர்ச்சி! [

www.pungudutivuswiss.com


உலக தமிழர் பேரவை இலங்கையின் சிரேஸ்ட பௌத்த மதகுருமார்களை சந்தித்தமை இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழ் மக்கள் இழந்து கொண்டிருக்கின்ற  அவர்களின் அபிலாசைகளை அடைவதற்காக நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு தீவிரமாக பாடுபடும் அமைப்புகளிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

உலக தமிழர் பேரவை இலங்கையின் சிரேஸ்ட பௌத்த மதகுருமார்களை சந்தித்தமை இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழ் மக்கள் இழந்து கொண்டிருக்கின்ற அவர்களின் அபிலாசைகளை அடைவதற்காக நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு தீவிரமாக பாடுபடும் அமைப்புகளிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

யாழ். ரில்கோ விடுதியில் DJ Night என்ற பெயரில் மீண்டும் களியாட்ட நிகழ்வு!

www.pungudutivuswiss.com

சுவிஸ் பயணத்தை ரத்து செய்த ஈரானிய ஜனாதிபதி

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில்உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தை .

www.pungudutivuswiss.com

சுவிஸில் வாகன காப்புறுதி கட்டணம் உயர்வு

www.pungudutivuswiss.com

12 டிச., 2023

தொப்புள் கொடி உறவுகளே .தோள்  முட்டும் வெள்ளம் 
தோள்  கொடுக்க  ரஜனி, கமல், விஜய் வந்தார்களா ?
----------------------------------------------------------------------------------
உறவுகளே சிந்தியுங்கள் ,. இந்த  பெரிய நடிகர்கள் எல்லாம்  உழுது நீர் இறைத்து  சோற்றுக்குள் நின்று நாற்று நாட்டு  விவசாயம் செய்தா  கோடீஸ்வரர் ஆனார்கள்   உங்கள்  பணத்தில் கோடி கோடியாக சம்பாதித்து கால் மேல் கால் போட்டு  அனுபவிக்கிறார்கள் .நீங்கள் அவர்களை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள் .எத்தனை தலைமுறைக்கும் இருந்து கொண்டே சாப்பிடும் அளவுக்கு சொத்துக்களை  குவித்து வைத்திருக்கிறார்கள்,எப்பொழுதாவது  இப்போது போன்ற பேரிடர்களில்  வெளியில் இரங்கி வந்து  மக்களை  பார்த்தார்களா  என்ன நடக்குது என்று  கவனித்தார்களா  ஒருசாதமாவது  ஈகம் செய்தார்களா நலம் விசாரித்தார்களா  மக்கள் எக்கேடு  ஆவது கேடடா நமக்கென்ன என்று  தங்களை  மாளிகையை விட்டு  எட்டிக்கூட பார்க்கவில்லை 
உறவுகளே சினிமா  என்பது ஒரு பொழுதுபோக்கு . அதனை உங்கள் வாழ்க்கையாக  நினைக்காதீர்கள்,  100  120 கோடி என்று ஒரு படத்துக்கு வாங்கு  நடிகர்கள்  உங்களுக்கு   ஒருசதம் கூட உதவவில்லை . ஏன்  வெளியே வந்து நிலைமையை  கவனிக்க கூட இல்லை ,இவறிகளையா நீங்கள் தலையில்  தூக்கி வைத்து  கொண்டாடுகிறீர்கள் .வேண்டாம் விட்டு விடுங்கள் இனியாவது உங்கள் வாழ்க்கையை  நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் . சினிமாவையும் அரசியலையும்  நம்பி ஏமாறாதீர்கள்  சிந்தியுங்கள் 

அமெரிக்காவை எச்சரித்த ஜெலென்ஸ்கி

www.pungudutivuswiss.com

உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா தவறினால் புடினின் கனவு நனவாகும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்லைனில் பரப்பப்பட்ட வீடியோ ஒன்றில் தோன்றிய விளாடிமிர் புடின் (Vladimir Putin), 'ரஷ்யா வலுவாக வளரும்போது உக்ரைன் பலவீனமடையும்' என தெரிவித்தார்.

உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா தவறினால் புடினின் கனவு நனவாகும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்லைனில் பரப்பப்பட்ட வீடியோ ஒன்றில் தோன்றிய விளாடிமிர் புடின் (Vladimir Putin), 'ரஷ்யா வலுவாக வளரும்போது உக்ரைன் பலவீனமடையும்' என தெரிவித்தார்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : தமிழ் இளைஞன் வெட்டிக் கொலை

www.pungudutivuswiss.com
குருணாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலெஸ்ஸ பகுதியில் நேற்று
இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருளுடன் யாழ்.பல்கலை மாணவன் கைது

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் "டிஜே நைற்"க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்

www.pungudutivuswiss.com

செட்டிக்குளத்தில் சிங்களக் குடியேற்றங்களுக்கு துணைபோகிறதா ஐ.நா?

www.pungudutivuswiss.com


மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதென்ற போர்வையின் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது.  இந்த திட்டத்தினால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக் குடும்பங்கள் தமது காணிகளை  இழக்கின்றார்கள் என்ற  பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்விக இடமான வவுனியா  செட்டிகுளம் பகுதியில் கப்பாச்சி என்ற பிரதேசத்தில் காணிகளை வழங்கும் ஏற்பாடு நடக்கின்றது என தமிழ் தேசியமக்கள் முன்னணியின் எம்.பி  செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதென்ற போர்வையின் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தினால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக் குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றார்கள் என்ற பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்விக இடமான வவுனியா செட்டிகுளம் பகுதியில் கப்பாச்சி என்ற பிரதேசத்தில் காணிகளை வழங்கும் ஏற்பாடு நடக்கின்றது என தமிழ் தேசியமக்கள் முன்னணியின் எம்.பி செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 100 கைதிகள் தப்பியோட்டம்

www.pungudutivuswiss.com


கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து 100 வரையான கைதிகள் நேற்று தப்பிச் சென்றுள்ளனர்.  அவர்களில் 21 கைதிகள் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனையோரை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து 100 வரையான கைதிகள் நேற்று தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் 21 கைதிகள் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் கூட்டமைப்பினருக்கும் இடையில் விசேட சந்திப்பு

www.pungudutivuswiss.com
உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

பிணைக் கைதிகள் உயிருடன் வெளியேறமாட்டார்கள்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை

www.pungudutivuswiss.com

எங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிணை கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தில் 240 பாலஸ்தீன கைதிகளுக்கு மாற்றாக இதுவரை 80 இஸ்ரேலியர் உட்பட 105 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.

எங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிணை கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தில் 240 பாலஸ்தீன கைதிகளுக்கு மாற்றாக இதுவரை 80 இஸ்ரேலியர் உட்பட 105 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது

11 டிச., 2023

ரணில்- ராஜபக்ச அரசுக்கு வெள்ளையடிக்கிறதா உலகத் தமிழர் பேரவை? [Monday 2023-12-11 06:00]

www.pungudutivuswiss.com


உலகத் தமிழர் பேரவையின் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், பௌத்த பீடங்களின் பிக்குமாரையும் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தையும் நல்லை ஆதினத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

உலகத் தமிழர் பேரவையின் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், பௌத்த பீடங்களின் பிக்குமாரையும் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தையும் நல்லை ஆதினத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

எனது ஆதரவு கட்சி அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிப்பு: விசாரணைகளை மேற்கொள்ளுமாறு

www.pungudutivuswiss.com

வலி. மேற்கு கரையோர சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்! Top News [Sunday 2023-12-10 19:00]

www.pungudutivuswiss.com
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

உலகத் தமிழர் பேரவையின் நகர்வு - குத்துவிளக்கு எதிர்ப்பு!

www.pungudutivuswiss.com

தனி நபர்கள் தமக்குள்  பொறுப்பற்ற பிரகடனங்களை  உருவாக்கி  அவற்றை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக முன்மொழிய முற்படுவது கண்டனத்திற்குரியது.   உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த ஒரு சிலர்  பௌத்த பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப் படுத்து முகமாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தனி நபர்கள் தமக்குள் பொறுப்பற்ற பிரகடனங்களை உருவாக்கி அவற்றை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக முன்மொழிய முற்படுவது கண்டனத்திற்குரியது. உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த ஒரு சிலர் பௌத்த பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப் படுத்து முகமாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

10 டிச., 2023

நீங்கள் யார் என்றே தெரியவில்லை! - உலகத் தமிழர் பேரவையினருக்கு “செருப்படி” கொடுத்த ஆறு. திருமுருகன். Top News

www.pungudutivuswiss.com


தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு  தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாத நிலை காணப்படுவதாக தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாத நிலை காணப்படுவதாக தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்

7 டிச., 2023

விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதற்கு சாணக்கியனுக்கு உரிமையில்லை

www.pungudutivuswiss.com


விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்

கடந்த ஆண்டு 1890 பிக்குகள் துறவறத்தை துறந்தனர்! [Thursday 2023-12-07 07:00]

www.pungudutivuswiss.com


குருந்தூர் மலை விவகாரத்தை பேசி முரண்பாட்டை தூண்டி விடுபவர்கள், கடந்த ஆண்டு மாத்திரம் 1890 பிக்குகள் துறவறத்தை துறந்து விட்டு சென்றுள்ளதை அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளதென  ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் எம்.பி.யுமான  பாட்டலி சம்பிக்க தெரிவித்தார்.

குருந்தூர் மலை விவகாரத்தை பேசி முரண்பாட்டை தூண்டி விடுபவர்கள், கடந்த ஆண்டு மாத்திரம் 1890 பிக்குகள் துறவறத்தை துறந்து விட்டு சென்றுள்ளதை அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளதென ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் எம்.பி.யுமான பாட்டலி சம்பிக்க தெரிவித்தார்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவோம்

www.pungudutivuswiss.com

அடுத்த தேர்தல் வரும் வரையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளோம். அடுத்த வருடம்  ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாயின் கட்சி என்ற ரீதியில் நாம் தயாராகவே இருக்கிறோம். வெற்றி பெறும் மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவோம்  என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.








6 டிச., 2023

இலங்கையில் சர்வதேச சமூகம் கூட்டு தோல்வி! - பிரிட்டன் எம்.பி விளாசல்

www.pungudutivuswiss.com


இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவமயமாக்கல் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனல் இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத்தினதும் கூட்டு தோல்வி என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவமயமாக்கல் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனல் இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத்தினதும் கூட்டு தோல்வி என தெரிவித்துள்ளார்

சுமந்திரனிடம் பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய விஜேதாச

www.pungudutivuswiss.com



“ஒரு வழக்கு விடயத்தைப் பற்றி பேசுவது சரியல்ல என்பதை நீதி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். மிகக் கீழ்த்தரமான முறையில் அவர் பாராளுமன்றத்தில் தவறான கருத்துக்களை முன்வைத்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.” என 
நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ஒரு வழக்கு விடயத்தைப் பற்றி பேசுவது சரியல்ல என்பதை நீதி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். மிகக் கீழ்த்தரமான முறையில் அவர் பாராளுமன்றத்தில் தவறான கருத்துக்களை முன்வைத்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.” என நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்

பிரமிக்க வைக்கும் கல்ஃப் ரயில்வே – முழுமையான தகவல்கள்!

www.pungudutivuswiss.com

5 டிச., 2023

நைஜீரியாவில் தவறுதலாக நடத்திய தாக்குதலில் 85 பொதுமக்கள் பலி

www.pungudutivuswiss.com

தெற்கு காஸாவிற்குள் நுழையும் இஸ்ரேல் படைகள், தீவிரமடையும் மனிதாபிமானச் சிக்கல்

www.pungudutivuswiss.com
காஸாவின் டெய்ர் அல் பலாவில் நடந்த தாக்குதலில் உறவினர்களை இழந்த

மொட்டின் வரவுசெலவுத் திட்டத்தை மொட்டு உறுப்பினர்களே தோற்கடிப்பு

www.pungudutivuswiss.com


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு சின்னம்) தலைவர் முன்வைத்த பட்ஜெட் யோசனையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இணைந்து தோற்கடித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு சின்னம்) தலைவர் முன்வைத்த பட்ஜெட் யோசனையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இணைந்து தோற்கடித்துள்ளனர்

பிரிட்டன் நாடாளுமன்றில் இன்று இலங்கை குறித்த விவாதம்! - அவசரமாக ஆவணத்தை அனுப்பியது அரசாங்கம். [Tuesday 2023-12-05 18:00]

www.pungudutivuswiss.com

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில்  பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால்  நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என  தெரிவிக்கும் ஆவணமொன்றை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என தெரிவிக்கும் ஆவணமொன்றை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையால் நுரையீரல், இதய வால்வு கிருமி தொற்றுகள் அதிகரிப்பு

www.pungudutivuswiss.com
அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது

வீதி மறியல் போராட்டத்துடன் தொடர்பில்லை! - யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒன்றியம் அறிவிப்பு.

www.pungudutivuswiss.com

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் ஏ9 வீதியை மறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், கிளிநொச்சி வளாக சிங்கள - தமிழ் மாணவர்கள் என்ற பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் ஏ9 வீதியை மறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், கிளிநொச்சி வளாக சிங்கள - தமிழ் மாணவர்கள் என்ற பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்

தமிழ் இளைஞர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குகிறது இராணுவம்

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன, இப்பிரதேசங்களில் இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் அமுல்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன, இப்பிரதேசங்களில் இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் அமுல்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

யொஹானியைப் போல ரிசியுதன், சாருதன்,அகிலத்திருநாயகியையும் கௌரவியுங்கள்!

www.pungudutivuswiss.com

பாடகி யொஹானியை கௌரவித்ததை போன்று மாணவன் ரிசியுதன், சாருதன் மற்றும் 72 வயது வீராங்கனை அகிலத் திருநாயகி ஆகியோரை கௌரவித்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விளையாட்டுத்துறை அமைச்சிடம் வலியுறுத்தினார்.

பாடகி யொஹானியை கௌரவித்ததை போன்று மாணவன் ரிசியுதன், சாருதன் மற்றும் 72 வயது வீராங்கனை அகிலத் திருநாயகி ஆகியோரை கௌரவித்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விளையாட்டுத்துறை அமைச்சிடம் வலியுறுத்தினார்

4 டிச., 2023

கிளிநொச்சி வளாகத்தில் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது சிங்களப் பேரினவாதம்!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஏ- 9 வீதியை மறித்துக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஏ- 9 வீதியை மறித்துக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது

வங்கிகளின் 8000 கோடி ரூபாவை ஏப்பம் விட்ட 10 வர்த்தகர்கள்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் உள்ள 10 உயர்மட்ட வர்த்தகர்கள் இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர்களின் பெயர்களை வெளியிடுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள 10 உயர்மட்ட வர்த்தகர்கள் இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர்களின் பெயர்களை வெளியிடுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தை விட்டு விலகுகிறது மிக்ஜாம் புயல்

www.pungudutivuswiss.com


தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, ​நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில்  365  கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, ​நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுவிசில் இருந்து 3 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

www.pungudutivuswiss.com


சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட  3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

ad

ad