வெள்ளி, நவம்பர் 15, 2013


இலங்கையில் சனல் 4- ன் இயக்குனர் கல்லாம் மேக்ரோ-வை கொலை செய்ய அரசின் சதி அம்பலம் வீடியோ 

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதால் பல்வேறு நாட்டிலிருந்தும் தொலைக்காட்சி சேனல்கள் இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ளன. இதில் முக்கியமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்-4, இலங்கையின் இனவெறி செயல்களை உலகறிய செய்த சேனல். இந்த சேனல் அலைவரிசைக்கு தடைவிதித்தால் மேலும் பெரிய பிரச்சனை எழும் என்பதால் இலங்கை அரசு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
லண்டனில் இருந்து கொண்டே இலங்கைக்கு பெரிய
பொல்லு கொடுத்து அடி வாங்க போகும் இலங்கை ஜனாதிபதி 
பொதுநலவாய மாநாடு நடத்தி தன்மீதான குற்றச் சாட்டுகளை மறைக்கலாம் அல்லது மறுக்கலாம் என கனவு கண்ட மஹிந்த பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதை ஆரம்பிகிறது .வந்திருந்த அனைத்து தலைவர்களும் ஊடகங் களும் வடக்கு நோக்கி செல்வதையே முக்கிய நோக்காக கொண்டுள்ளன . அரசோ தனது கட்டுபாட்டை இழந்து  தவிக்கிறது  இங்கிலாந்து பிரதமர்  ஒருவர் 48 வருடங்களின் பின்னர் விஷயம் போன கமரூன் தமிழரின் நலன்புரி நிலையத்தின் சிறிய தகர கொட்டகைகளில் காண பாடும் கா ட்சிகள் அவரின் மனித காருண்யத்தை விளக்குகின்றன தான் எதற்காக போகிறேன் என்று சொன்னவர் செய்து காட் டுகிறார் சிறிய நாட்டின் ஜனாதிபதி மகிந்த பெரியபலமான நாடான  இங்கிலாத்தில் இறங்க முடியாத நிலை.பெரிய நாடான இங்கிலாந்தின் பிரதமர் தகர கொட்டகையில் என்ன வித்தியாசம் 

யாழில் பொலிசார் கிறிஸ்தவப் பாதிரியார்களைத் தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள்

போலிசாரின் தடை உடைத்து ஓடும் வானில் பிரித்தானியப் பிரதமரிடம்! மகஜர் வழங்கிய அனந்தி..

யாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து அதனை முன்னணியில் நின்று நடத்தியவர் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன்.
பிரி. பிரதமர் வருகையை எதிர்த்து சிங்களவர்கள் சுன்னாகத்தில் போராட்டம்!- மாவிட்டபுரம் போராட்ட மக்களை சந்திக்காமல் பிரதமர் கொழும்பு திரும்பினார்
சுன்னாகம் பகுதியில் சிங்கள மக்களால் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் அந்த நிகழ்வுடன் மீளவும் கொழும்பு திரும்பியுள்ளார்.
சனல்- 4 ஊடகவியலாளர்களையே கண்ணீல் மல்க வைத்தது மக்களின் அழுகுரல்! சர்வதேச விசாரணை தேவையென்கிறார் ரவிகரன்
தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய உறவுகளைத் தொலைத்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றமாகும். இச்சம்பவம் உட்பட தமிழர்கள் மேல் புரியப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் சுயாதீன சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ச
பிரித்தானிய பிரதமர் கமரூன் யாழ். நலன்புரி நிலையத்திர்கு விஜயம். - ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார்
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
 பிரத்தானிய பிரதமர் உதயனுக்கு விஜயம்
யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தார்.
தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரும் கையொப்பங்கள் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சிடம் கையளிப்பு
 [ சண்தவராசா ]
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு எதிராக பக்கச் சார்பற்ற நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திச் சேகரிக்கப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய படிவங்கள் வியாழன் பிற்பகல் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

ஜெயலலிதா மற்றும் விஜயதாரணியை அசிங்கமாக திட்டிய தமிழ்தாசன் கைது

சத்தியம் டிவியில் சத்யம் சாத்தியம் என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக சில தினங்களுக்கு முன் விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதாரணியும், பாஜக சார்பில்
போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மக்கள் மீது கழிவொயில், கல்வீச்சு தாக்குதல்: இராணுவத்தினர் அட்டகாசம்
வலி.வடக்கில் மேற்கொள்ளப்படும் நில மீட்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கென யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட மக்கள் மீது இராணுவத்தினர் ஒயில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு பல இடங்களில் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
23வது பொதுநலவாய மாநாடு அங்குரார்ப்பணம்!: நாட்டின் மனித உரிமையுடன் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: ஜனாதிபதி
பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் 23வது மாநாட்டை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
விசேட விமானத்தில் யாழ். சென்ற பிரி. பிரதமர் கமரூன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார்
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் யாழ்ப்பாணத்திற்கு சற்று முன்னர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம் - அனைத்துலக பிரசன்னத்தின் முன் கண்ணீர் மல்க காத்திருந்த மக்கள் மீது காட்டுமிராண்டித்தனம்!

அனைத்துலககத்தின் பிரச்சன்னத்தை வெளியேற்றி விட்டு சாட்சியமற்ற போரினை தமிழர்கள் மீது நடத்திய சிங்களம், தற்போது அனைத்துலகத்தின் பிரசன்னத்தின் முன்னேயே தமிழர்கள் மீதான காட்டுமிராண்டித்தனத்தை யாழ் மண்ணில் காட்டியுள்ளது.
வடக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை நிறுத்துங்கள்! எச்சரிக்கும் இராணுவம்
இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் தமிழர்களை ஆத்திரமடைய செய்துள்ளதாக சர்வதேச செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
கே.பியிடம் விசாரணை நடத்த இலங்கையிடம் உத்தியோகபூர்வ பதிலை எதிர்பார்த்திருக்கும் சி.பி.ஐ!- இந்துஸ்தான் டைம்ஸ்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடனான தொடர்புகள் பற்றி கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் முறையான விசாரணைகளை நடத்த இந்திய மத்திய விசாரணை பிரிவினர் (சி.பி.ஐ) இலங்கையின் உத்தியோகபூர்வமான பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ்
எனது தனிப்பட்ட பார்வையில் நல்ல  கவி வீச்சு ,கரு ப்பொருள்,  கோர்ப்பு ,பொருள் கூறல் ,பா வம் ,காலத்துக்கு ஏற்ற படைப்பு போன்ற அம்சங்கள் இருந்தும் எனக்கு பிடிக்காத ஊடக நாகரீகம் குறைவாக இருக்கிறது.விதிவிலக்காக இந்த கவிஞனின் ஆற்றலுக்கு மதிப்பளித்து சேர்த்துக் கொள்கிறேன் 

முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!

ஆக்கம்: அ.பகீரதன்

இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?

படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?

அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?

முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?

பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா

அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ

பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே

முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை

வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை

நன்றி.
அ.பகீரதன்

மனித உரிமை மீறல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும்: கொமன்வெல்த் நாடுகளுக்கு வலியுறுத்து
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
இலங்கையில் பாலியல் வன்கொடுமை! இராணுவத்தினர் மீது குறித்து விசாரணை நடத்த பிரிட்டன் வலியுறுத்தல்
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் வலியுறுத்தியுள்ளார்.
நவநீதம்பிள்ளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம்
இலங்கையின் மொழி உரிமைகள் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மனப்பூர்வமான ஈடுபாட்டை பாராட்டி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு
வடக்கு மாகாணத் தேர்தலுக்கு பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் அதிகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  நேற்று  வியாழக்கிழமை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.