$கோத்தாபய ராஜபக்ஷவை பார்த்து தமிழ் மக்கள் பயப்படவில்லை அவர் பத்து தலை இராவணன் போல வந்தாலும், தாம் அவரை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தெரிவித்துள்ளார்.
-
26 ஆக., 2019
சம்பளத்துக்கு ஆப்பு வைக்கும் டெனீஸ்வரன்
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் அமைச்சர்கள் அனந்தி சசிதரன் மற்றும் சிவனேசன் ஆகியோர் எடுத்த சம்பளங்களும் கொடுப்பனவுகளும் மாகாண திறைசேரிக்கு செல்ல ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சார்ள்ஸ் எம்.பியை எச்சரித்த அமைச்சர் ரிஷாட்
மன்னார், மறிச்சிக்கட்டி கமநல சேவை நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
தனிவழியில் பயணிக்க 57 எம்.பிக்கள் தயார்
எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிடாவிட்டால் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைக்கு தயாராக உள்ளதாகவும் தனித்த பயணத்தை ஆரம்பிக்க கட்சியின் 57 உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர் ராஜித தலைமையில் இன்றிரவு முக்கிய பேச்சு
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று இரவு முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற உள்ளது.உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
வலுக்கும் நெருக்கடி:ஐ.தே.க எம்.பி இருவர் இராஜினாமா
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.இதன்படி ஹேஷான் விதானகே மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் கண்காணிப்பு பதவியை துறந்துள்ளனர்.
வெள்ளைவான் கடத்தல்:வெல்கம பரபரப்பு வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சி காலத்தில் தன்னையும் வெள்ளை வானில் கடத்திச்செல்ல திட்டமிட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோட்டாபய இன்னும் அமெரிக்கப் பிரஜையா?வந்தது புது சர்ச்சை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ச இன்னமும் தனது அமெரிக்கக் குடியுரிமையை முற்றாக நீக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்கத் தூதரகத்தினால் அவருக்கு இறுதிக் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை என்று தூதரக அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.
ஜநா அமைதிப்படையிலிருந்து இலங்கை வெளியேற்றம்?
இராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்ததன் மூலம், ஐ.நா அமைதி காக்கும் படையணியில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை இலங்கை இழந்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)