தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார் |
-
8 செப்., 2023
ஷானியிடம் விசாரணையை ஒப்படையுங்கள்!
பாதுகாப்பு நிலவர மீளாய்வு - அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!
தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான "பாதுகாப்பு நிலவர மீளாய்வு - 2030" என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார் |
கடவுள் தண்டனை வழங்க ஆரம்பித்து விட்டார்! [Friday 2023-09-08 09:00] |
நாங்கள் அனைவரும் டொலர்களுக்கு விருப்பமானவர்கள்தான். இங்கே ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, ஜேவிபி என்று வேறுபாடு இல்லை நாங்கள் அனைவரும் திருடர்களே. இங்கே நாம் அனைவரும் ஒரே படகில் போகின்றவர்களே என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். |
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அவர் மேலும் தெரிவிக்கையில், “சுகாதார துறை விடயத்தில் நான் சுகாதார அமைச்சரை நோக்கி விரல் நீட்டப் போவதில்லை. ஆட்சியாளர்களே இவர்களை சரியாக வழிநடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். யாராவது தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் அதனை ஜனாதிபதி செய்யவில்லை. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு நீங்கள் மீண்டும் செல்வதென்றால் இவ்வாறான குற்றச்செயல்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதியை கோருகின்றேன். வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்ய வேண்டாம். ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு ஆட்சியாளரே பொறுப்புகூற வேண்டும். இதேவேளை சனல் 4 தொடர்பில் கூறப்படுகின்றது. அதனை நான் 50 வீதமும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ராஜபக்ஷக்கள் யுத்தம் செய்ததால் அவர்களுக்கு எதிராக இவ்வாறு செய்வதாகவும் இருக்கலாம். அல்லது அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் சனல் 4 அவசியமில்லை. எவ்வாறாயினும் மேலே கடவுள் இருக்கின்றார். அவர் தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டார். அதில் ஒருவர்தான் கோட்டாபய, அவரை நாட்டை விட்டும் விரட்டினர். அதேபோன்று வீதியில் யாசகம் செய்து பணம் சேகரிப்பவர்களும் உள்ளனர்” என்றார். |