புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

          25 வது மணநாள் வாழ்த்து 
          தவச்செல்வம் -பவானி 
                      ( புங்குடுதீவு 7/8-சுவிட்சர்லாந்து )
இல்லற வாழ்வில் இனிதே இணைந்து 
சொல்லொணா சுகத்தினில் சீராய் திளைத்து 
வெள்ளி விழ காணும் செல்வங்களை 
உள்ளம் குளிர உவந்திட வாழ்த்துவோம் 

இன்று 18.00மணியளவில் தவச்செல்வம் பவானி (உமாதேவி ) இல்லறத்தில் இணைந்த 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றனர் . 
Hotel Sonne .Herzogenbuchsee 

சமூக சேவை அமைப்புக்கள்


சமூக சேவை அமைப்புக்கள்



மடத்துவெளி சனசமூக நிலையம்
ஊரதீவு சனசமூக நிலையம்
வல்லன் சனசமூக நிலையம்
நாசரேத் சனசமூக நிலையம்
பாரதி சனசமூக நிலையம்
பெருங்காடு சனசமூக நிலையம்
சிவலைபிட்டி சனசமூக நிலையம்
இருபிட்டி சனசமூக நிலையம்
ஐங்கரன் சனசமூக நிலையம்
காந்தி சனசமூக நிலையம்
ஊரதீவு கி.மு.சங்கம்
வல்லன் கி.மு.சங்கம்
ஆலடி கி.மு.சங்கம்
பெருங்காடு கி.மு.சங்கம்
ஊரதீவு அறிவகம்
வட இலங்கை சர்வோதயம்
புங்குடுதீவு இளைஞர் சங்கம்
ஊரதீவு இளம் தமிழர் மன்றம்
சர்வோதயம்(புங்குடுதீவு கிழக்கு;)
மக்கள் சேவா சங்கம்
புங்குடுதீவு நலன்புரி சங்கம்
இந்து இளைஞர் ஒன்றியம்
யாழ் மாவட்ட இந்து இளைஞர் இணையம் (அயோத்தியா;)
திவ்விய ஜீவன சங்கம்
சைவ சேவா சங்கம் (வேதாகம பாடசாலை;)
சப்த தீவு இந்து மகா சபை
தல்லையபற்று சனசமூக நிலையம்
புனித சேவியர் சனசமூக நிலையம்
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்  ஆரம்பாகிய இனவழிப்பு நாள் 
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்  
ஆரம்பாகிய இனவழிப்பு நாள் நிகழ்வில்   சுமார்  500   மக்கள்  கலந்து கொண்டனர் .இளையோர் அமைப்ப சேர்ந்தோர் மற்றும் பலரும்  ஜெர்மன் ,பிரஞ்சு ,இத்தாலி ,தமிழ் மொழிகளில் நினைவு சுமந்த உரைகளை  ஆற்றினர்  . தேசியத்தலைவர் ,தமிழீழம் பொறிக்கபட்ட ஒரு பிராங்க் தபால்தலைகள்  வெளியிடப்பட்டன மேலதிக் விபர பின்னர் தரவுள்ளோம் .

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்: தேர்தல் ஆணையம் வெளியீடு
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை, இந்திய தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
அ.தி.மு.க. - 1,79,83,168 (44.3 சதவீதம்)

தி.மு.க. - 95,75,850 (23.6)

பா.ஜனதா - 22,22,090 (5.5)

தே.மு.தி.க. - 20,79,392 (5.1)

பா.ம.க. - 18,04,812 (4.4)

காங்கிரஸ் - 17,51,123 (4.3)

ம.தி.மு.க. - 14,17,535 (3.5)

சுயேச்சைகள் - 8,66,509 (2.1)

விடுதலை சிறுத்தைகள் - 6,06,110 (1.5)

புதிய தமிழகம் - 2,62,812 (0.6)

மனிதநேய மக்கள் கட்சி - 2,36,679 (0.6)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2,05,896 (0.5)

ஆம் ஆத்மி - 2,03,175 (0.5)

இந்திய கம்யூ. - 2,19,866 (0.5)

மார்க்சிஸ்ட் கம்யூ. - 2,20,614 (0.5)

பகுஜன் சமாஜ் - 1,55,964 (0.4)

நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) 5,82,062 (1.4)

பெரிய ஆலயங்கள் 
------------------------
ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்
மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம்
மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்
வல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம்
வல்லன் இலுபெண்ணை நாச்சிமார் கோவில்
வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில்
கோரியாவடி நாயம்மா கோவில்
ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி அம்மன் கோவில் (கண்ணகி அம்மன்;)
கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்
தல்லையபற்று முருகமூர்த்தி கோவில்
சந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில்
கந்தசாமி கோவில்
குறிகட்டுவான் மனோன்மணி அம்பால் கோவில் (பேச்சியம்மன் )
ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்;)
ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயம் வீரகத்தி விநாயகர் ஆலயம் -அரியநாயகன்புலம்
பெரியபுலம் வீரகத்தி விநாயகர் கோவில்
பெருங்காடு புரட்டஸ்தாந்து தேவஸ்தானம்
புனித சவேரியார் கோவில்
புனித அந்தோனியார் ஆலயம்

ஆலயங்கள்(சிறியவை


ஊரதீவு காளி கோவில்
கேரதீவு ஐயனார் கோவில்
ஊரதீவு ஞான வைரவ கோவில்
ஊரதீவு முருகமூர்த்தி கோவில்வரதீவு வைரவர் கோவில்
மடத்துவெளி தூண்டி வைரவர் கோவில்
மடத்துவெளி கடற்கரை வைரவர் கோவில்
காத்தவராயர் கோவில்
வயல்வெளி முருகன் 
கோவில்சாட்டி வீரகத்தி விநாயகர் கோவில்
நாச்சிமார் கோவில்
புதையடி வைரவர் கோவில்
சங்குவேலி ஐயனார் கோவில்
தெங்குதிடல் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில்
வீராமலை வைரவ நாதர் கோவில்
வீராமலை துர்க்கை அம்மன் கோவில்
கோரியாவடி நாயன்மார் கோவில்
$வீராமலை முருகன் கோவில்
மலையடி நாயன்மார் கோவில்
போக்கத்தை மாரியம்மன் கோவில்
இத்தியடி நாச்சிமார் கோவில்
பெரிய கிராய் கோவில்குறுந்தடி வைரவர் கோவில்
ஆதி விநாயகர் கோவில்
நடுவுதுருத்தி பெத்தப்பர் கோவில்
நாயனார் கோவில்
அனுமார் கோவில்
ஆலடி வைரவர் கோவில்
கொம்மாபிட்டி பிள்ளையார் கோவில் 
மருதடி விநாயகர்கோவில்
 பட்டையர் அம்மன் கோவில்
 மானாவெள்ளை ஐயனார் கோவில்


நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து
பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா கூறியிருப்பதாவது: 



அத்வானியிடம் ஆசி பெற்ற நரேந்திர மோடி ( படங்கள் )

 
தேநீர்க்கடையில் இருந்து பிரதமர் நாற்காலி வரை - மோடி கடந்த பாதை 
news
ரீக்கடையில் வேலை செய்தவரா, இந்த நாட்டின் பிரதமர் பதவிக்கு வருவது? என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அந்த ஒற்றை அஸ்திரத்தை ஒவ்வொரு மேடையிலும் பிரயோகித்து, மக்களின் அன்பையும்,
பணடதரிப்பில் 300 ஆடுகள் வேள்வியில் பலி 
அஞ்சலிக்கத் தடை ;இலங்கையின் புதிய சட்டமா?-டெனிஸ்வரன் கேள்வி 
news
 கடந்த கால இறுதி போரின் போது மக்களின் இருப்புக்கள் மீது கொத்துக் கொத்தாக வீசப்பட்ட குண்டு மழையினால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எமக்கென்ன தடை என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்
நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக்கொன்று பழி தீர்த்த கிராம மக்கள் 
news
நைஜீரியாவில் கடந்த மாதம் பாடசாலை  மாணவர்களை கடத்தி சென்ற ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் குழுவை சேர்ந்த 200 தீவரவாதிகளை வடகிழக்கு நைஜீரியா பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து வெட்டிச் சரித்துள்ளனர்.
தடைகளை மீறி முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு அகவணக்கம் 
 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று அகவணக்கம் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால்

ஊடகவியலாளர்கள்

  • தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
  • வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை(பிரான்ஸ்)
  • நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை (வீரகேசரி,தினகரன்)
  • துரை.ரவி - -வானொலி பத்திரிகை (கனடா)
  • எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா)
  • சிவ-சந்திரபாலன்- பத்திரிகை,வானொலி-IBC,TRT,தொலைகாட்சி-TRT,விளையாட்டுத்துறை,இணையம்(சுவிஸ்)
  • அ.சண்முகநாதன்(கலைஞன்-TV1.கனடா)
  • தா.பாலகணசன்-வானொலி,தொலைகாட்சி, (பிரான்ஸ்-TTN )
  • ஆர்.ஆர்.பிரபா -வானொலி,தொலைகாட்சி(கனடா -TVI)
  • தி.மோகன் - வானொலி TRT,தொலைகாட்சி-TRT (பிரான்ஸ்)
  • சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (நெதர்லாந்து )
  • சண்-ரவி - இணையம் -மை கதிரவன் (சுவிஸ்)
  • எஸ்.ஸ்ரீ குகன் - இணையம் -லங்காஸ்ரீ (சுவிஸ்)
  • எஸ். கருணைலிங்கம்(GTV-Europe)
  • க.சதிபன்(வலம்புரி-பத்திரிகை)
  • சொ.ஞானலிங்கம்(ரஞ்சன்)(மின்னூடகம்)

மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் தான் காரணம்: தமிழருவி மணியன்
காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
நரேந்திர மோடிக்கான ஆதரவலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் 30 ஆண்டுகளுக்குப் பின்பு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி ஆச்சரியப்படும் அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளன. போலி மதச்சார்பின்மையும் சாதிய அழிவுச் சக்திகளும் இத்தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன. 

தமிழகத்தில் 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்
10தொகுதியில்  தேமுதிக.பாமக 3 , மதிமுக 2

தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் கட்சி இடம் பெற்றது. இதில் பா.ஜனதா கன்னியாகுமரி தொகுதியிலும், பா.ம.க.

இறந்த பின்னரும் வாக்கு சீட்டில் இடம்பெற்று வென்று சாதனை படைத்த பெண் 

ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான இவர், ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இந்த
உலக அளவில் மாபெரும் சக்திகளாக திகழும் மோடி, ஜெயலலிதா: நடிகர் விஜய் வாழ்த்து
இந்திய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தேர்தலில் சாதனை புரிந்துள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை
யார் இந்த நரேந்திர மோடி 
செப்டம்பர் 17,1950ம் ஆண்டு பாம்போ பிரெஸிடன்ஸியில் (தற்போதைய குஜராத்) பிறந்தவர், நாட்டின் மிக உயரிய பதவியான பிரதம மந்திரி என்ற அந்தஸ்திற்கு வரவிருக்கும் இவர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது. யார் இந்த நரேந்திர தாமோதர்தாசு மோடி?



திர்பார்த்ததை அடைந்துவிட்டது பா.ஜ.க. தலைநகரில் உற்சாகத்துக்கு குறைவேயில்லை. அதனால்தான், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல்நாளே லட்டு தயாரிக்கும் வேலை, திருமலை திருப்பதியை விடவும் தீவிரமாக நடந்து


வாக்கு எண்ணும்  முன் நடந்த சுவாரஸ்யமான  நிகழ்வுகளில் தொகுப்பு 

தமிழக  நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், ,பா.ஜ.க. கூட்டணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தமுள்ள 39 தொகுதிகளில்





""ஹலோ தலைவரே...  இந்தியாவின் புதிய பிரதமரா, வேறெந்த கட்சியின் ஆதரவும் இல் லாமல் பதவியேற்கப் போகிறார் மோடி. எம்.பி. தேர்தல் முடிவுகள் இப்படி புரட்டிப் போட்டுடுச்சே….  தமிழ்நாட்டில்
தமிழகத்தில் 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்
தமிழகத்தில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39
தேவேகவுடா வெற்றி: குமாரசாமி தோல்வி
ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் 5–வது தடவையாக தேவேகவுடா வெற்றி பெற்றார்.
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும்,
டெல்லி விமான நிலையத்தில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: கட்சி அலுவலகம் வரை பேரணி
டெல்லி விமான நிலையத்தில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையொட்டி
எனது வாழ்க்கையும், ஆட்சியும் திறந்த புத்தகம் போன்றது: மன்மோகன் சிங் உரை
 


பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ள பிரதமர் மன்மோகன் சிங், நாட்டு மக்களுக்கு பிரிவு உபச்சார உரையாற்றினார்.
நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு மகிந்த நடத்திய மூன்றரை மணி நேரப் போராட்டம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான நரேந்திர மோடிக்கு சிறிலங்கா அதிபர்
ஐதேகவினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா?தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை 
சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக, ஐதேகவினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுலாக்கும்படி மோடி அரசை நாம் வலியுறுத்த வேண்டும்!- மனோ கணேசன்
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள், 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யுங்கள், தமிழ் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற போர்வையில் சீன
யாழ்ப்பாணம் அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் 54வது ஆண்டு விழா-பா.உ.ஸ்ரீதரன் பிரதம விருந்தினர் 
யாழ்ப்பாணம் அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் 54வது ஆண்டு விழா கடந்த 13ம், 14ம் நாட்களில் அரியாலையில் சனசமுக நிலையத்தின் தலைவர் த.பிரதீபன் தலைமையில்

டென்மார்க் தலைநகரில் நடைபெற்ற கண்டனப் பேரணி
எமது தாயக பூமியில் சிங்களப் பேரினவாதம் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் கலாசார,
ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின் நாடளாவிய ரீதியிலான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன இன்றைய தினமின சிங்களப் பத்திரிகைக்கு அளித்துள்ள விசேட

மோடிக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வெற்றியைப் பெற்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.

திரைப்பட கலைஞர்கள்




திரைப்பட கலைஞர்கள்
வி.சி.குகநாதன் .--------இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா
சி.சண்முகம் ----------சிங்கள திரைப்பட கதாசிரியர்
எம்.உதயகுமார் ----------ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள்
குங்குமம் ,மாமியார் வீடு(இந்தியா;)
ஜீவா நாவுக்கரசன் -----கதைவசன கர்த்தா -சமுதாயம் (ஈழத்து திரைப்படம்;)
எ.வீ.எம்.வாசகம் ------ஒளிப்பதிவாளர் -ரன் முது தூவ ,வாடைக்காற்று
சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் -தயாரிப்பாளர் .இந்தியா
பொன். ஆரூரன் -----தயாரிப்பாளர் .சிங்களம் .சந்துனி,நாகன்யா,லீடர்(மனோன் சினி;)
எஸ்.எம்.தனபாலன்.---கனடா திரைப்படம் .கரையை தொடாத அலைகள்

க .செல்வரத்தினம் ஆசிரியர்



கலைஞர் செல்வம் .க .செல்வரத்தினம் ஆசிரியர்
___________________________________________________
புங்குடுதீவில் ஆரம்ப கால நாடக துறையை ஆராய்ச்சி செய்ய புறப்பட்டால் நிச்சயமாக நாடகக் காவலர்களாக இருவரை சிகரமிட வேண்டும் .அவர்கள் சிவசாமி ஆசிரியர் அவர்களும் செல்வரத்தினம் ஆசிரியர்களும் ஆவார்கள். 

புங்குடுதீவு இருபிட்டி கிராமத்தில்கனகசபை நாகம்மா தம்பதிக்கு  பிறந்த இந்த பெருமகன் ஆரம்பக் கலவியை புன்குடுதேவிலும் உயர்கல்வியை சாவகச்சேரி ட்ரிபேக் கல்லூரியிலும் கற்றுத் தேறினார் .இந்தக் காலத்தில் இவர் முதலாவது சாதனை படிக்கட்டில் காலடி எடுத்து வைத்து எம்மண்ணின் பெருமையை முழு இலங்கையும் அறிய வைத்தார் .ஆம் ஆண்டில் அந்த பெருமையான நிகழ்வு நடைபெற்றது .அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அந்த இளைஞனின் பேச்சு வானொலியில் ஒலி பரப்பானது .கல்வியை முடித்து கொண்டவர் ஆசிரயர் பதவியை பெரும் வரையில் புங்குடுதீவு மண்ணில் பல துறைகளில் முழுமையாக ஈடுபடுத்த தொடங்கினார் .அதன் பலனாக தன்னை ஒத்த வயது இளைஞர்களை ஒன்று திரட்டி நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் கலை கலாசார சமய பற்றுள்ளவர்களாகவும் உருவாக்கினார்.அதன் பலனாக சிறந்த நாடகத்துறை இலக்கியத்துறை பரிமாணங்களை மண்ணிலே வளர்க்கப் புறப்பட்டார்.கிரமாங்களின் சமூக விழிப்பு ணர்வு ,எழுச்சி ,மாற்றம் ,புதுமை என்று காணும் வழி நோக்கி தனது நாடக கலை திறனை பயன்படுத்தினார்.அந்த முயற்சியில் பல நாடகங்களை எழுதி இயக்கி தானும் நடித்து புதிய பாதையை உருவாக்கி கொடுத்தார்.புங்குடுதீவு மட்டுமல்ல்ல யாழ்ப்பாணம் கொழும்பு சாவகச்சேரி வன்னி போன்ற பகுதிகளிலும் இந்த நாடகப் புரட்சியை செவ்வனே செய்தார்.முன்னாள் பாரளுமற்ற உறுப்பினரும் சாதி ஒழிப்பு அ     வழிப்போராட்ட விற்பன்னரான வீ.என்.நவரத்தினம் அவர்களும்இவரது நாடகத்தில் நடித்திருந்தார்.அந்த நாடக விழாவில் பங்கு பற்றிய தந்தை செல்வா அவர்கள் இவரின் திறமையை கண்டு வியந்து கலைஞர் செல்வம் என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்தார் . 
உரிய காலத்தில்  புங்குடுதீவு கிழக்கு பதினோராம் வட்டாரத்தில் திருமண பந்தத்தில் தன்னை இனைத்துக்  கொண்டார் .நான்கு பெண்பிள்ளைகளையும் இரு ஆண்மகனையும் குடும்பத்தில் கொண்ட இவர் இவர்களை நல்ல கல்வி சமூக சேவை ஈடுபாட்டோடு வளர்த்தெடுத்து புகலிடம் நோக்கி வாழ்வை அமைத்துக்  கொடுத்திருந்தார்.இவரது புத்திரன் செல்வரத்தினம் சுரேஷ் அவர்கள் இவரது வழியிலே ஆன்மிகம் கலை இசை இலக்கியம் பொதுப்பணி என்று எல்லாத்துறையிலும் சிறப்பாக விளங்கி வருகிறார்.இவர் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்.இவரது சகோதரரான அரியரத்தினம் தாயகத்தில் ஆசிரியராகவும் வட்டார கல்வி அதிகாரியாகவும் பனி புரிந்து பிரான்சில் புகலிடம் கண்டு கலை இலக்கிய சமய ஊருக்கான தொண்டு என சிறப்புற்றுள்ளார் .இவரது தங்கை திருமதி பூங்கோதை அவர்களும் இவர்களுக்கு நிகராகவே கலை இலக்கியம் நாடகம் பொதுப்பணி என சிறந்தோங்கி கனடாவில் வாழ்கிறார் .இவர்கள் மூவருமே புங்குடுதீவு மண்ணின் உலக அமைப்புகளில் முன்னணி பங்கினை ஆற்றுவதும் குறிப்பிடத்தக்கது 
செல்வரத்தினம் அவர்கள் ஆசிரியப் பணியை மேற்கொள்ளும் காலத்தில் தனது மாணவர்களை தமிழ் இலக்கியம் கலை நாடகம் என எல்லாத் துறைகளிலும்  ஊக்குவித்து பல போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகளை பெற காரணமாக இருந்தார் . புங்குடுதீவு மண்ணில் பல சமூக சீர்திருத்த நாடகங்களை எழுதி இயக்கி நடித்து புரட்சிகர மற்றதை கிராமத்திலே உருவாக்கிய பெருமை கொண்டவர் .இவரது நாடகங்களில்  எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் புதிய அரங்கியல் யுக்திகள் உருவாகியிருந்தன .எமது பண்டைத் தமிழரின் அறிய கலையான சாஸ்திரக் கலைய கூட ஐயம்திரிபற கற்று தேறி இருந்தார் . ஆங்கிலத்தில் சிறந்த புலமை கொண்ட இந்த இலக்கிய வாதி புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக தொடங்கி அங்கேயே அதிபராகி உயர்ந்தார் . மாங்குளம் மக வித்தியாலயத்தில் கடமை புரிந்த காலத்தில் அந்த பகுதி மக்களிடையேயும் தனது கைவந்த கலைகளான இலக்கிய நாடகத்துறையை புகுத்தி அந்த கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திய பெருமை பெற்றவர் ஒட்டு மொத்தமாக தமிழ் இலக்கியம் கலை நாடகம் பேச்சாற்றல் சாஸ்திரம் ஆங்கில புலமை சமய பண்ணி என அனைத்து துறை விற்பன்னராக வாழ்ந்து குறைந்த ஆயுளிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.இவரது இயக்கத்தில் உருவான பிணம் பேசுகிறது என்ற நாடகம் மிகவும் பிரசித்தாமானது. புங்குடுதீவு மண் இவரை என்றும் நினைவில் வைத்திருக்கும் .

20 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் காங்கிரஸ் பூஜ்ஜியம்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
அவை வருமாறு:–
தமிழ்நாடு, கோவா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், டெல்லி, இமாச்சலபிரதேசம், ஜம்மு–காஷ்மீர், சிக்கிம், திரிபுரா, நாகலாந்து, ஆந்திரா, லட்சத்தீவு, சண்டிகார், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையூ, தத்ராநகர் ஹவேலி.

கலைஞர் உதயகுமார்



இலங்கைத் தமிழ் நாடக உலக வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர் கலாபூஷணம்.கலைஞர் உதயகுமார்ஈழத் தமிழ் நாடக உலகில் கோலோச்சிய நட்சத்திரங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர். 72 வயதான, இப்போதும் மகிழ்ச்சியாக தொழில் செய்து கொண்டிருக்கும் உதயகுமார் 13 வயதில் நடிப்புலகுக்கு வந்து கடினமான முட்பாதைகளில் கலைத்தாகத்துடன் நடைபயின்று நாடக, சினிமா உலகில் கொடி கட்டிப் பரந்தவர். இப்போதும் இவர் சிந்தனை நாடகம் நடிப்பு என்றுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இவரது வாழ்க்கை ஈழத்து நாடக உலகுடன் ஒட்டிச்சென்றிருப்பதால், இவரது வாழ்க்கை பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. இவர், தான் நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாகக் கூறுவது நடிப்பல்ல என்பதைப் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.



‘எங்கள் ஊரில் புங்க மரம் அதிகமாகக் காணப்படும். அதனால் தான் எங்க ஊரை புங்குடுதீவு என்று அழைத்தார்கள். என் அப்பா பெயர் பிலிப். அம்மா பெயர் எலிஸபெத்.

எட்டு வயசு வரைக்கும் நான் புங்குடுதீவில்தான் இருந்தேன். எனது ஆரம்ப கல்வி புங்குடிதீவில்தான் ஆரம்பித்தது. முதல் முதலாக நான் பாடசாலைக்கு சொன்றது இன்றும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. அக்கா லெயொனிதான் என்னைப் பாடசாலைக்கு அழைத்து போனா. அங்கே போன எனக்கு அது புது இடமாகஇருப்பதால் அங்கு இருக்க பிடிக்கவில்லை. அக்காவுடன் வந்து விட அழுது அடம்பிடித்தேன். அப்போது அந்த பள்ளியின் ஆசிரியையாக இருந்த ரெஜினா என்னை பிரம்பை காட்டி மிரட்டி வகுப்பில் அமர வைத்தார்.
முத்துராமன் செல்லசாமி இருவருக்கும் மத்தியில் உதயகுமார்.



அதற்கு பிறகு அக்கா போயிட்டா. நான் என் வீட்டையும், என் பெற்றோர் அக்கா சுகோதரர்களையும் நினைத்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தேன். இனிமேல் அவர்களைப் பார்க்க முடியாதோ என்ற பயம் எனக்கு. பிறகு பள்ளி வாழ்க்கை இனிக்கத் தொடங்கியது.


எனது நண்பர்களான சாமிநாதன், விக்டர், பாலந்த, திருச்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து பாடசாலைக்கு பக்கத்திலிருந்த எலும்புருக்கி பூவை பறித்து சாப்பிடுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்...” என்று தனது பள்ளி வாழ்க்கையைப் பற்றி மேலும் கூறத் தொடங்கினார் உதயகுமார்.

“குருவியை பிடித்து பொரித்து சாப்பிடுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். குருவி பிடிக்க முதல் நாளே கண்ணி செய்து வைத்து விடுவோம். மாட்டு வால் மயிரை பிடுங்கி எடுத்து அதில் முடிச்சு போட்டி சுருக்கு கயிறு செய்வோம். அதை ஈக்கில் குச்சியில் கட்டி வைத்துக் கொள்வோம்.

இது தான் நாங்கள் தயாரிக்கும் கண்ணி. அந்தக் காலத்தில் இப்போது போல் நைலான் கயிறு இல்லை. அதனால் தான் மாட்டு வால் மயிரை பிடுங்கி சுறுக்கி கயிறு செய்தோம். செய்த கண்ணியை ஸ்கூல் பேக்கில் வைத்து எடுத்துக் கொண்டு போய் வழியில் எங்காவது மறைத்து வைத்து விடுவோம். ஸ்கூல் முடிந்து வரும்போது குருவி வேட்டையை தொடங்கிடுவோம்.
உதயகுமார் (இரண்டாவது), ஏ.எஸ். ராஜா மற்றும் கிங்ஸ்லி செல்லையா, அமர்ந்திருப்பவர்களில் வலது பக்கம் மஞ்சள் குங்குமம் தயாரிப்பாளர் சுந்தரேச ஷர்மா.


நாங்கள் விரும்பிப் பிடிப்பது ஆள்காட்டி குருவிதான். நாங்கள் வைக்கும் கண்ணியில் ஏமாளியாக மாட்டிக் கொள்வதும் அந்தக் குருவிதான். பிடித்த குருவிகளை உரித்து மசால பொடி, உப்புத்தூள் தூவி பொரித்தெடுத்து சாப்பிடுவது எனக்கு பொழுதுபோக்கு. நொட்டான்குருவி என்ற ஒரு பையன் எங்கள் ஊரில் இருந்தான். அவனின் நிஜப்பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. அவன் எங்களோடு குருவி வேட்டைக்கு வருவான்.

நொட்டான் குருவியை அவன் தேடிப்பிடித்து வேட்டையாடுவதால் அவனுக்கு நொட்டான் குருவி என்று பெயர். புங்குடுதீவு கடலில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து போகலாம். முழங்கால் அளவுதான் தண்ணீர் இருக்கும்.


அங்கே நடந்து சென்றால் நிறைய பாறைகள் இருக்கும். அதன் இடுக்குகளில் விலாமீன், கலவாய், கருவாய் போன்ற மீன்கள் இருக்கும். அங்கே வலைப்போட்டு மீன்களை பிடிப்போம். அதற்கு பார்வலைதல் என்று சொல்லுவார்கள்.

இதில் கலவாய் மீனில் ஒடியல் மா போட்டு கூழ் காய்ச்சி சாப்பிடுவோம். ரொம்பவும் ருசியாக இருக்கும். கடல் தண்ணீருக்குள் இருக்கும் கடல் தாமரையை குத்தி எடுத்து சாப்பிவோடும்.

அப்புறம் கடலில் கிடைக்கும் தாலங்காயை எடுத்து அவித்து சாப்பிடவேண்டும். இப்படியான புங்குடு தீவு உணவுகளை சாப்பிட்டு வளர்ந்ததால் தான் நான் இன்னும் இளமையாகவே இருக்கிறேன்” என்று நெஞ்சு நிமித்துகிறார் கலைஞர் உதயகுமார்.

சின்ன வயதிலேயே ரொம்பவும் யோசித்துக் கொண்டிருப்பாராம். அப்படி பாடசாலையில் தீவிரமாக இவர் யோசிக்கும் போது நடந்த சம்பவத்தை விபரிக்கிறார்.

“புங்குடுதீவு தமிழ்பாடசாலையில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் வகுப்பில் ஏதோ ஒரு யோசனையில் நான் ஆழ்ந்திருந்த போது ரெஜீனா டீச்சர் என்னருகில் வந்து ‘ஆதாம், ஏவளைத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நான் ‘ஆதாமைத் தெரியும், வரும் வழியில் தான் புல் வெட்டிக் கொண்டிருக்கிறார். என்று பதில் சென்னதும் வகுப்பே சிரிப்பில் ஆழ்ந்தது. எனக்கு அப்போது தான் விசயமே புரிந்தது! ஆசிரியை கேட்டதோ முதல் மனிதன் ஆதாமை! உணர்ந்ததும்-வெட்கத்தால் கூனிக் குறுகி விட்டேன். என்னுடைய நிஜப் பெயர் மைக்கல். வீட்டுல என்னை மைக் என்றுதான் கூப்பிடுவார்கள்.

அப்பா கொழும்பு துறைமுகத்தில் வேலை செய்தார். மாதத்திற்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவார். அதனால் அப்பாவுடன் எனக்கு நெருக்கமில்லை. எனக்கு எல்லாமே அம்மாதான். அம்மாவின் சேலை முந்தானையை பிடித்துக் கொண்டுதான் செல்வேன். அம்மாவின் கட்டளைக்கு கட்டுப்பட்டுத்தான் என் முதல் காதலை துறந்து விட்டு அம்மா சுட்டிக்காட்டிய பெண்ணை மணந்தேன் என்று தனது முதல் காதலை நினைத்து கவலைப்படும் உதயகுமார், அந்த நி¨வுகளுக்கு எம்மை அழைத்துச் செல்கிறார். கொழும்பு ரட்ணம் வீதியில் நாங்கள் வசித்து வந்தோம். எங்கள் வீட்டுக்கு ஒரு நாலு வீடு தள்ளித்தான் என் கனவு கன்னியின் வீடு. அவளின் பெயர் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் பாடசாலை விட்டு வரும்போது வாசலில் நிற்பா.


என்னையே பார்த்துக் கொண்டிருப்பா. நானும் பார்ப்பேன் அவளின் கண்கள் ஏதோதோ பேசும். நாட்கள் செல்லச் செல்ல அவள் அந்த பாதையோரத்தில் உள்ள தண்ணீர் குழாயடிக்கு வந்து நான் வரும் சமயத்தில் குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருப்பா. எனக்கு அவ்விடத்தில் வரும்போதுதான் தாகம் எடுக்கும்! ஆரம்பத்தில் அவளிடம் தண்ணீர் வாங்கி குடிக்கும் போது கைகள் நடுங்கின. பிறகு அது பழகி விட்டது. அதற்கு பிறகு நான் வரும்போது அவள் தண்ணீர் குடத்துடன் எனக்கு தண்ணீர் கொடுக்க ஆயத்தமாக இருப்பா! அவள் குடத்திலிருந்து தண்ணீரை கீழே ஊற்ற நான் குனிந்து இரண்டு கைகளையும் குவித்து நீர் பருகுவேன். அந்தத் தண்ணீர் அவ்வளவு ருசி. அவ்வளவு ருசியான தண்ணீரைப் பின்னர் அருந்தியதே இல்லை.

சும்மாவா சொன்னான் கவிஞன், பஞ்சு மிட்டாய் ஐந்து ரூபாய்; நீ பாதி தின்று தந்ததால் லட்சம் ரூபாய் என்று. பிறகு அம்மாவுக்கு இந்த விடயம் தெரிய வர என்னை அவசரமாக மன்னாருக்கு அழைத்துச் சென்றார். அங்கே எனக்கும் பஞ்சமணி என்ற பெண்னுக்கும் திருமணப் பதிவு நடைபெற்றது.

அம்மா சொன்னதால் நான் மறுக்காது பதிவுத் திருமணத்திற்கு சம்மதித்தேன். அதன் பிறகு குழாயடிக் கன்னியை நான் காணவில்லை. அவளுக்கு விசயம் தெரிந்து விட்டிருக்க வேண்டும். அதனால்தான் அவள் என்னைப் பார்ப்பதை தவிர்த்து விட்டாள் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது.

இப்போது அவள் எங்கே யிருக்கிறாளோ...! பெருமூச்சு விடுகிறார் உதயகுமார். புங் குடு தீவிலிருந்து கொழும்பு வந்ததும் விவேகானந்த மேட்டிலுள்ள சென் அந்தனீஸ் பாடசாலையில்தான் படித் தேன். பந்து விளையாடுவ தற்காக நண்பர்களுடன் சேர் ந்து கொண்டு ஜிந்துபிட்டி மைதானத்திற்கு செல்வேன். அப்படிப்போகும் போது அங்கே ஜிந்துபிட்டி சந்தி யில், மனோரஞ்சித கான சபாவில் நாடகம் ஒத்திகை நடந்து கொண்டிருக்கும். கே.பி. ராஜேந்திர மாஸ் டர்தான் கலைஞர்களை இயக்கி கொண்டிருப்பார்.

நான் அந்த அறையின் கதவு ஓரத்தில் நின்று வேடி க்கை பார்த்துக் கெண்டிருப் பேன். அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் வரப்பிரகாசம் என்ற கலைஞர் எண்ணப் பார்த்து, ‘நீ நல்ல வடிவாகத்தான் இருக்கிற.... நாடகத்தில் நடிக் கிறியா?’ என்றார். நானும் உடனே சம்மதித்து விட் டேன். அதன் பிறகு எனது நாடக பயணம் தொடர்ந் தது” என்று சொல்லும் உதயகுமார் தம்மோடு நடித்த சக நடிகர்கள் தொடர்பான ஞாபகத்தையும் பதிவு செய்கிறார்.

‘தமிழகத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆரம்பத்தில் இங்கேதான் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள எலிஸ்டொப் பிளேசில் ஒரு லொண்டரி இருந்தது. அங்கே எடு பிடி வேலை செய்து கொண்டிருந்தார் சந்திரன். லொன்றிக்கு எதிரே உள்ள பாய்வீட்டில் மோகன் என்பவர் வேலை செய்தார். இவர் ஒரு நாடக கலைஞரும் கூட. அவர்தான் சந்திரனுக்கு மூன்று வேளையும் சாப்பாடு தருவார். அதை சாப்பிட்டுவிட்டு அந்த லொண்டரியிலேயே தங்கிவிடுவார். அப்போதுதான் எனக்கு சந்திரன் பழக்கமானார். பிறகு சந்திரன் சிங்கள சினிமாவின் ஒளிப்பதிவாளராக இருந்த லெனின் மொராயஸ்சின் உதவியோடு விஜயா ஸ்டுயோவில் லைட் போயாக வேலை செய்தார். சந்திரனும் நானும் நடித்த ‘கலிங்கத்து கைதி’ நாடகம் புத்தளம் நுரைச்சோலையில் மேடையேறியது. அப்போது நடந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.
தன் சகோதரியுடன்


நாடகத்தில் நான் ராஜ குருவாகவும், சந்திரன் சிஷ் யனாகவும் நடித்தோம். ஒரு காட்சியில் நான் சிஷ்ய னைப் பார்த்து ‘சிஷ்யா! நமது அரண்மனைக்குள் எதிரிகள் ஊடுருவி இரு க்கிறார்கள்” என்றேன்.

அத ற்கு சந்திரன் ‘அப்படியா குருவே! எந்த ரூமில் அவர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லுங்கள் அவர்களை பினிஷ் பன்னி விடுகிறேன்” என்றார் சரித்திர நாடக வசனத்தில் ஆங்கிலம் கலந்து விட்டதை உணர்ந்த நான் நிலைமையை சமாளிக்க சாதுரியமாக “ஆங்கிலயர்கள் நம் அரண்மனைக்குள் அடிக்கடி வந்து பேவதால் நீயும் தமிழோடு ஆங்கிலம் பேச கற்றுக் கொண்டயா?” என்று இட்டுக் கட்டினேன். நாடகம் முடிந்ததும் ராஜேந்திரன் மாஸ்டருக்கு ஆத்திரம் தாங் காமல் எஸ்.எஸ். சந்திரனுக்கு பிரம்பால் விளாசித் தள்ளி னார். ‘எப்படி சார் என்னு டைய சமாளிப்பு? என்று நான் புத்திசாலி தனமாக பேசியதாக நினைத்து மாஸ்டரிடம் கேட்டேன். மாஸ்டருக்கு ஆத்திரம் மேலும் அதிகமாகியது.

அவனுக்குத்தான் அறி வில்லை எண்டா உனக்கு எங்கேடா போச்சு புத்தி? இந்த கதை நடந்தாக சொல் லப்படும் காலத்தில் வெள் ளக்காரன் எங்கேடா இந்தி யாவிற்குள் வந்தான்?’ என் றார் அன்றிரவு எஸ்.எஸ். சந் திரனை அறைக்கு வெளியே போட்டு கதவைச் சாத்திவிட் டார். பாவம் சந்திரன்! அன் றிரவு முழுவதும் அறைக்கு வெளியேதான் படுத்திருந்தார்.

சிறிது காலத்தின் பின் அவர் இந்தியாவுக்கு சென்று விட்டார். ஒரு நாள் சந்திரன் எனக்கு போஸ்காட் அனுப் பியிருந்தார். அதில் மெரினா பீச்சில் நான் கடலை விற்கி றேன். உங்களுக்கு அனுப் பியிருக்கும் போஸ்ட் காட் செலவில் இங்கே ஒரு வேளை சாப்பாடு சாப்பிட லாம். எப்படியாவது நான் முன்னுக்கு வருவேன்’ என்று நம்பிக்கையோடு எழுதியிருந்தார். எஸ்.எஸ். சந்திரனை கொழும்பு லொண்டரியில் சந்திக்க போகும் போதெல் லாம் நீதிமன்றத்துக்கு பக்கத் திலிருந்த இக்பால் ஹோட் டலில் ஆட்டுக்கால் சூப் பானோடு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந் தேன். இப்போது அந்த ஹோட்டல் லொண்டரி, என்று எதையுமே அங்கு காணமுடியவில்லை. காலம் வேமாக ஓடிக் கொண்டிருக் கிறது என்பது மட்டும் புரிகிறது” என்கிறார் கலைஞர் உதயகுமார்.

திருமணம் எங்கே நடை பெற்றது? என்று கேட்டோம்.

“1964ல் தான் எனது திரு மணம் நடைபெற்றது. அப் போது எனக்கு இருபத்தி நான்கு வயது. புங்குடுதீவு புனித சவோரியார் ஆலய த்தில் பாதர் ஸ்டீபன் தலை மையில் நடைபெற்றது. ஊர்ப் பெரியவர்கள் வந்திரு ந்தார்கள். யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இருந்த ஞானம் ஸ்டூடியோ வில்தான் திருமண போட்டோ எடுத்தோம். அந்த ஸ்டு டியோ இப்போ இருக்கி றதோ தெரியாது. மன்னார் பன்றிவிரிச்சான் தான் என் மனைவியின் ஊர். இங்கே அதிகமானோர் வேட்டைக்கு போய் காட்டு விலங்குகளை கொண்டு வந்து சமைத்து சாப்பிடுவார்கள். ஒரு நாள் எனது மனைவி காட்டுக் கோழி என்று சொல்லி தந்த இறைச்சியை சாப்பிட்டேன்.

ரொம்பவும் சுவையாக இரு ந்தது. அதன் பிறகு எனக்கு வேட்டையாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பன்றிவிரிச்சானில் வேட் டைக்காரர்களாக இருந்த செல்லையா, மார்சலின், சின்னதம்பி, யோசப் ஆகியோருடன் சேர்ந்து நானும் வேட்டைக்கு போனேன். அப்போது விவ சாய நிலம் உள்ளவங்களு க்கு அரச அனுமதியோடு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. அப் போது துப்பாக்கி ஒன்றை 250 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். மன்னார் கச்சேரிக்கு பக்கத்திலுள்ள அயன் ஸ்டோரில்தான் தோட்டா வாங்குவோம்.

ஒரு தோட்ட முப்பத்தைந்து சதம். ஒரு நாள் நானே காட்டுக் கோழியை வேட்டையாடி என் மனைவியிடம் சமைக்கச் சொன்னேன். ஆனால் ருசியில் சிறிது மாற்றம் இருந்தது. அப்போதுதான் என் மனைவி, ‘நீங்கள் அன்றைக்கு சாப்பிட்டது உடும்பு இறைச்சி. காட்டுக் கோழி என்று சொல்லி சாப்பிட வைத்தேன். உடும்பு என்றால் நீங்கள் சாப்பிட மாட்டீங்களே? என்றாள் என்னிடம். என்று அனுபவங்களை அவிழ்த்து விட்டவர் இன்னொரு தகவலையும் எடுத்து வைத்தார்.

“சின்ன வயதில் எனக்கு சுகமில்லாமல் போனால் வீட்டுக்கு வைத்தியர் வருவார். அவர் பெயர் (சிறிதுநேரம் யோசித்து விட்டு) இலுவல் சேட் பரியாரியார். அவரை எனக்கு நல்லாத் தெரியும் மருந்து பெட்டியுடன் சைக்கிளில் தான் வருவார். அவரோட உயரம் ஆறு அடி இருக்கும் இதேபோல் புங்குடுதீவில் ரொம்பவும் பெயர் பெற்றவர், சண்டியன் சண்முகநாதன் அவரை நான் கண்டதே இல்லை. கேள்வி பட்டிருக்கிறேன். அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைச்சேன். ஆனால் கைகூடவில்லை. பிறகு நான் கொழும்புக்கு வந்து விட்டேன். புங்குடுதீவு வாழ்க்கை முடிந்த கதையாகி விட்டது.

இங்கே கொழும்பு துறைமுகத்தில் நான் வேலை பார்த்த போது கம்பஹா-தொம்பேயில் குடும்பத்துடன் ஒரு ஆறுவருடம் தங்கியிருந்தேன். தினமும் கொழும்பிலிருந்து வீட்டுக்கு போய் வருவேன். பின்னேரம் வேலை முடிந்து தொம்பேக்கு போய் இறங்கும் போது இரவு பத்து மணியாகிவிடும். எனக்கு தினமும் மது அருந்த வேண்டும்.

அந்த சந்தியில் ஒரு குடிசை வீட்டில் புஞ்சி நோனா என்ற அம்மா மது விற்று வந்தாள். வழமையாக அங்கே சென்று ஒரு கிளாஸ் போட்டுவிட்டுதான் மேலே நடப்பேன். அந்த அம்மாவின் மகனான சோமசந்திர எனக்கு நண்பரானார். அதன் பிறகு அர்த்த ராத்திரியில் அந்த குடிசைக்கு சென்றாலும் எனக்காக அங்கே ஒரு கிளாஸ் மது இருக்கும். இப்போது அக்குடிசையை அங்கே காணவில்லை. புஞ்சி நோனாவும், சரத் சந்திரவும் எங்கே போனார்களோ தெரியவில்லை” என்கிறார்.

வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்கள்?

“நீர்கொழும்பு முத்துலிங்கம், கிங்ஸ்லி செல்லையா என்கிறார் கலைஞர் உதயகுமார். கடவுள் நம்பிக்கை- எப்படி என்றதும் நம்ம குல தெய்வம் மகா விஷ்ணு என்றார். அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மைக்கல் உதயகுமாராகி, இப்போது குல தெய்வம் மகாவிஷ்ணுவாகி....

வாழ்க்கையை நீங்கள் அப்படி பார்க்கிaர்கள் உதயகுமார்?

திரும்பிப் பார்க்கும்போது நினைவாக இருக்கிறது. ஆரம்பத்தில் என்னுடன் கலைப்பயணத்தில் பலர் வந்தார்கள். இப்போது இவர்களில் பலர் இல்லை. அனாலும் நான் வெறுமை யாககஇல்லை. கலைச் சேவை பசுமையாக இருக்கி றது. பல சிரமங்களுக்கு மத்தியில் பல வேலைக ளைச் செய்து முடித்திருக் கிறேன். பாரதியார் காலத்தில் எத்தனைப் பேருக்கு பாரதி யைத் தெரியும்? ஆனால் இன்று தமிழ் வீரியத்தின் மங்காதச் சின்னம் அவர். இதுபோல் நானும் எனக்கு பின்னர் வாழ்வேன் என்ற நம்பிக்கை திரும்பவும் என க்கு நிறைவைத் தருகிறது.....

புங்குடுதீவின் வரலாறு


புங்குடுதீவின் வரலாறு

இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.
பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.

தல்லையப்பற்று முருகமூர்த்தி தேவஸ்தானம்


சங்கர மூர்த்தி முருகமூர்த்தி தேவஸ்தானம்

இயற்கை எழில் நிறைந்த இலங்கையின் சரித்திரப் பெருமை பெற்ற யாழ் குடாநாட்டின் சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு எனும் கிராமம் உள்ளது. அங்கே பல அறிஞர்களும் சைவப் பெருங்குடி மக்களும்
முள் தைக்கின்ற மலர்கள் !
(சர்மிளா தர்மசீலன்)
பிஞ்சுக் கை வியர்வை சிந்தினால்
அமிழ்ந்து மூச்சுத் திணறும் பூமி .
வலி ஒலி கேட்கிறது

ad

ad