புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 நவ., 2013

மானிப்பாய் பரிஸ் அணி 44 ஓட்டங்களால் வெற்றி
 நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம் 2 ஆவது ஆண்டாக நடத்தும் 20 பந்து பரிமாற் றங்களைக் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் 2 ஆவது சுற்றில் 3 ஆவது போட்டி கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற

மட்டுநகரில் முஸ்லீம் நபரின் உணவு விடுதியில் விபச்சாரத் தொழில்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்புறமாகவுள்ள காத்தான்குடியை சேர்ந்த முஸ்லீம் நபரால் நடாத்தப்படும் ஹொட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு யுவதிகளை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று இரவு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.
கோத்தபாய ராஜபக்சவின் இந்திய பயணம் ரத்து.
இலங்கையில் நடைபெறஇருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பபுச் செயலர்  கோத்தபாய ராஜபக்ச தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இசைப்பிரியா கொலையால் தமிழகம் கொந்தளிப்பு!- கி.வீரமணி அறிக்கை
இலங்கை இராணுவத்தால் நடைபெற்றுள்ள இசைப்பிரியா கொலை பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தமிழக மண்ணில் ஏற்படுத்தியுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப்

கொளத்தூர்மணி கைது: வைகோ கண்டனம்

சேலத்தில் வருமான வரி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிமுக இணையதளம் சிதைப்பு

அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aiadmkallindia.org  இதனுள் அத்துமீறிய பாகிஸ்தான் இணையதள தாக்காளர்கள் ஒரு மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.
இசைப்பிரியா படுகொலை வீடியோ உண்மையானதுதான்: ப.சிதம்பரம் கண்டனம்

சனிக்கிழமை திமுக தலைவர் கலைஞரையைச் சந்திப்பதற்காக வந்திருந்த ப.சிதம்பரம், அவரை சந்தித்துவிட்டு வந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய காதலன் தற்கொலை.

இரத்தினபுரி - இரக்குவானை பகுதியில் காதலன் காதலி இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக காதலன் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இலங்கையில் கிரிக்கெட் நடைபயணம்! கிளிநொச்சியில் ஆரம்பமானது/பீ பீ சீ 
இலங்கையின் கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடைபயணம் ஒன்று வெள்ளியன்று வடக்கே கிளிநொச்சி நகரில் இருந்து தலைநகர் கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களை வெளியேற்ற நடவடிக்கை/வரலாறு திரும்புகிறது 
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் அத்துமீறி குடியேறியவர்கள் ஒருமாத காலத்துக்குள் வெளியேற வேண்டும் என்று மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
 
இசைப்பிரியாவின் கொலை ஆதாரம்! சீமான் கண்டனம்
சனல் 4 வெளியிட்டுள்ள இலங்கையின் போர்க்குற்றத்திற்கான புதிய ஆதாரமான விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை தொடர்பிலான காணொளியைப் பார்வையிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஒபாமா மனைவிக்கு பயம்! மன்மோகன் ஜெயலலிதாவிற்கு பயம்!- ஹெல உறுமய ஏளனம்!
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா மனைவிக்கு பயம், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பயம் என இலங்கை ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய ஏளனம் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆஸி. ஊடகவியலாளர்களின் கணணித் தரவுகள் இலங்கை அதிகாரிகளால் அழிப்பு
இலங்கையில் சுற்றுலா வீசாவில் வந்து கருத்தரங்கை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச ஊடக மையப் பணிப்பாளர் ஜெக்லின் பாக் மற்றும் ஜீன் வோர்திங்டன் ஆகியோரின் கணணிகளின் முழுமை தரவுகளும் இலங்கை அதிகாரிகளால் அழிக்கப்படடுள்ளன.
வெகு சிறப்பாக நடைபெற்ற சுவிஸ் எழுகை அமைப்பின் இரண்டாவது ஆண்டுவிழா
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயர்துடைக்கும் பணியில் பங்கெடுக்கும் நோக்குடன் சுவிஸ் நாட்டில் செயற்படும் ஆன்மீக, கலை, பண்பாட்டு, சமூக நிறுவனங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட எழுகை நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டுவிழா

பட்டாசு தொழிற்கூடத்தில் திடீர் தீ விபத்து 9 பேர் பலி

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தைச் சேர்ந்த முள்ளங்குடி கிராமத்தில் பல வருடங்களாக ராஜாங்கம் என்பவரின் மனைவி தனலெட்சுமி பட்டாசு தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். இவரது தொழிற்கூடத்தில் 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனா
தம்புள்ள பத்திரகாளி அம்மன் ஆலயத்தை உடைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துக! ஜனாதிபதிக்கு யோகேஸ்வரன் எம்.பி. மகஜர்
தம்புள்ள தமிழ் மக்களால் 40 வருடத்துக்கு மேலாக வழிபட்டு வந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை இடித்தவர்களை அரசாங்கம் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுடமையாக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் வழக்கு தாக்கல்!- சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் வாதத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பு
பாதுகாப்பு அமைச்சின் மூலம் 2012ம் ஆண்டு அரச உடமையாக்கப்பட்டு தமிழ்நாதம் பத்திரிகை அச்சிடும் காரியாலயமாக பயன்படுத்தப்படும் காணி  உரிமையாளர்கள் தமது காணி சட்டரீதியற்ற முறையில் அரச உடமையாக்கப்பட்டதை எதிர்த்து   மனுத் தாக்கல் செய்திருந்தனர்.