-
14 செப்., 2013
தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதல்
சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி ஒடியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காயடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில் நாவற்குழியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டவர்கள் மீதே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஸோர் (வயது-24), மற்றும் நுணாவில் கிழக்கைச் சேர்ந்த ஆர்.றஜிந்தன் (வயது-19) ஆகியோரே காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் மேலும்
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை கோரும் யோசனை முன்வைக்கப்பட உள்ளது?
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனை ஒன்று ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச விசாரணையை கோரும் இந்த யோசனை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த யோசனையுடன் சம்பந்தப்பட்ட சில விடயங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்க உள்ள வாய்மொழி மூலமான அறிக்கையில் வெளியிட தயாராக இருப்பதாக தெரியவருகிறது.
அதேவேளை சர்வதேச விசாரணையை கோரும் குறித்த யோசனை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியுடன் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அதற்கு மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் பூரண ஆதரவை வழங்குவார் என்றும் ராஜதந்திர வட்டாரங்களின் அந்த தகவல்கள் கூறியுள்ளன.
இலங்கைக்கு எதிராக கடந்த மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட யோசனையின் தொடர்ச்சியாக இருந்த யோசனை முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
23 வருடங்களின் பின் யாழ்தேவி இன்று கிளிநொச்சி செல்கிறது! ஜனாதிபதியும் பயணிக்கிறார்
ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, கிளிநொச்சி ரயில் நிலையம், சுன்னாகம் உப மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும் ஜனாதிபதி அவர்கள், ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்திலும் அவர்
கிளிநொச்சியை அழிப்பதில் ஈபிடிபி கங்கணங்கட்டி அலைகிறது! அதற்கு எம் தலைமைகள் அனுமதிக்காது: பசுபதிப்பிள்ளை காட்டம்
கிளிநொச்சியின் அபிவிருத்தி என்பது பிரதானம், அதனை ஈபிடிபி தடுத்து பித்தலாட்டம் செய்கிறது. இது அரசின் பணமல்ல, உலக நாடுகளுடையது என தனது மண்ணிற்கு ஏற்பட்ட அநீதியை லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் உணர்வுடன் உச்சரிக்கிறார் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிராமசேவையாளருமான திரு.சு.பசுபதிப்பிள்ளை.
விடுதலைக்கேங்கும் மக்கள் கருத்தால் முரசறையும் போர்க்களம்!
மாவை சேனாதி அவர்களின் முகநூலில் இருந்து
முள்ளிவாய்க்காலில், தமிழ் மக்களை கொத்துக்கொத்தாய்க் கொன்று குவித்து, ஒரு இனஅழிப்பை நடத்தி முடித்த சிங்களம், அழித்துச் சிதைக்கப்பட்ட தமிழினம், சிங்களத்தின் ஆட்சியதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு, கீழ்ப்பட்டு நிற்கும் ஒரு புதியதொரு காலத்தையே எதிர்பார்த்து நின்றது.ஆனால், சிங்களத்தின்
சுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் யாழ்தேவி புகையிரதத்தின் கிளிநொச்சி வரையிலான மீள் பயணம் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 10 மணியளவில் கிளி நொச்சி 155ம் கட்டைப் பகுதியில் பரீட்சார்த்த பயணத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத்தத்தினால் முதலாவது பொதுமகன் பலியெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் காலப் பகுதிக்குள் இப்புகையிரத நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி நகரிற்கிடையிலான புகையிரதப் பாதுகாப்புப் கடவைகள் பூர்த்தியாக்கப்படாத நிலையில் பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது…..ஏற்கனவே பல கால்நடைகள் இப் பரீட்சார்த்த புகையிரதப் பயணத்தின் போது கொல்லப்பட்ட நிலையில் முதலாவது மனிதப் பலியெடுப்பு இன்று நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர் கிளிநொச்சி தொண்டைமான் நகர் பகுதியினைச் சேர்ந்த 70 வயது முதியவரான முத்தப்பா எனத் தெரிய வருகிறது.
தம்புள்ளை பள்ளிவாசலை இடிப்பது மற்றும் அகற்றுவது சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டுவருவதாக நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவ+ப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாதென்று ஜனாதிபதி கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கல்முனையில் பகிரங்கமாக அறிவித்ததையும் அமைச்சர் ஹக்கீம்
வெற்றிலை சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், கோவில்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும், பள்ளிவாசல்களையும் உடைத்து நொறுக்கும் மதவாதத்துக்கு அளிக்கும் வாக்குகள் என்பதை மலையகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ் பேசும் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத சிறுபான்மை வாக்காளர்களும் மனதில் கொள்ள வேண்டும்.மனோ கணேசன்
வெற்றிலை என்பது நம்மை பொறுத்தவரையில் வாயில் மென்று துப்பும் வெற்று இலைதான். அதற்கு மேல் அது நமக்கு பயன்தராது.
வெற்றிலை என்பது நம்மை பொறுத்தவரையில் வாயில் மென்று துப்பும் வெற்று இலைதான். அதற்கு மேல் அது நமக்கு பயன்தராது.
அனைத்துலக விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்; சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு சிறிலங்கா உள்ளக செயல்முறைகளின் மூலம் பதிலளிக்கத் தவறினால், அனைத்துலக செயல்முறைகளை நோக்கிய அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மோடி வெற்றிபெறுவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது: ராம்ஜெத்மலானி
பாஜக பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நரேந்திர மோடிக்கு ராம்ஜெத்மலானியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். நரேந்திரமோடி வெற்றிபெறுவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. இந்தியா இழந்துவிட்ட பெருமையை மோடி மீட்டெடுப்பார் என்று கூறியுள்ளார்.
தாயக மண்ணில் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு தேசமாக நாங்கள் வாழ தீர்வு கிடைக்க வேண்டும்: சிறீதரன் எம்.பி
வடக்கு கிழக்கு இணைந்த தாயக மண்ணில் எங்கள் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, எங்களுடைய தமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு தேசமாக நாங்கள் வாழ்வதற்குரிய தீர்வு எமக்குக் கிடைக்க வேண்டும் என முட்கொம்பனில் இடம்பெற்ற தேர்தல்
யாழ்ப்பாணத்தில் தேர்தல் வன்முறைகள்! நாவற்குழியில் தமிழ் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
இன்று நாவற்குழி பகுதியில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தனது ஆதரவாளர்கள் பத்துப் பேர் மீது அடையாளம் காணப்படாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகிய பாலசுப்பிரமணியம் கஜதீபன் தெரிவித்திருக்கின்றார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் ராஜ்குமார் மீது ஜனாதிபதியின் அடியாட்கள் தாக்குதல்!
மத்திய மாகாண சபை தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமார் மீது மஸ்கெலியா நகரப்குதி ஜனாதிபதியின் ஆளென தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட
அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தலைமையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் அடங்கலான குழுவினர் வடமாகாண சபைத்தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாலை வந்திறங்கினர். நாளைமுதல் தொடர்ச்சியாக பலபகுதிகளிலும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)