புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2022

தடைசெய்யப்பட்ட பொருட்களை விமான நிலையத்தின் ஊடாக கொண்டு வரவேண்டாம் : இலங்கை சுங்கத்தின் அதிரடி அறிவிப்பு-

www.pungudutivuswiss.com

இலங்கை மீது ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் கண்டனம்!

www.pungudutivuswiss.com
இலங்கையில் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதிலும், பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் அரசாங்க  குறைகளைக் கூறுவதைத் தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தினை நீடித்தமை மற்றும் மீண்டும் மீண்டும்

ரணில் ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

www.pungudutivuswiss.com
இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தனது நிர்வாகம் மேற்கொள்வதை

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி!

இலங்கையில் 16 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தயாராகி வருகிறது. தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரை

வவுனியாவில் மற்றுமொரு கோவிட் மரணம்!

www.pungudutivuswiss.com

வவுனியாவில் மீண்டும் கோவிட் தொற்று காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு இன்று(9) மரணமடைந்துள்ளார். குறித்த நபர் மூச்சு திணறல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் மீண்டும் கோவிட் தொற்று காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு இன்று(9) மரணமடைந்துள்ளார். குறித்த நபர் மூச்சு திணறல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

WelcomeWelcome ரணிலை சந்திக்க ஜே.வி.பி மறுப்பு!

www.pungudutivuswiss.com

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. உத்தேச சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று(09) மாலை இடம்பெறவிருந்தது.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. உத்தேச சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று(09) மாலை இடம்பெறவிருந்தது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்ல தடை!

www.pungudutivuswiss.com

இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு சதொச ஊழியர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தியதன் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு சதொச ஊழியர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தியதன் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

கொழும்பில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

www.pungudutivuswiss.com

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகளத்தின் 123ஆவது நாளான இன்றும் மக்கள் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோட்டா கோ கம பகுதியில் பெருமளவான தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டிருந்தாலும், ஒரு சில கூடாரங்கள் அகற்றப்படாமலே இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிலையில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் போராட்ட மேடைப்பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகளத்தின் 123ஆவது நாளான இன்றும் மக்கள் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோட்டா கோ கம பகுதியில் பெருமளவான தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டிருந்தாலும், ஒரு சில கூடாரங்கள் அகற்றப்படாமலே இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிலையில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் போராட்ட மேடைப்பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது

ad

ad