புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2014

வன்னியில் பொதுமக்களை தாக்கவில்லையாம் 
இறுதிப் போரின்போது பொது மக்கள் காயமடைந்தபோதும், அவர்களைத் திட்டமிட்டு இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
மகிந்த போர்க் குற்றவாளி : மாதுலுவாவே சோபித தேரர் 
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக குற்றஞ் சாட்டிவரும் நிலையில் இது வரை அதை கடும்போக்காளர்கள் மறுத்து வந்தனர்.
சிறிலங்காவை துரத்தும் போர்க்குற்றங்கள் 
சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர் என சர்வதேச ஊடகமான அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனிவா பிரேரணை தீவிர ஆய்வில் டில்லி; அமைச்சரவையில் கருத்துக் கேட்கிறது காங்கிரஸ் 
ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித  உரிமைகள் சபையின் 25 ஆவது  கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள  கடுமையான பிரேரணை

தில்லியில் ரிங்ரோடு பைபாஸ் அமைத்ததில் ரூ.184 கோடி ஊழல்

2010ஆம் ஆண்டு ஷீலா தீட்சித் ஆட்சி காலத்தில் காமன்வெல்த் போட்டிகளுக்காக ரிங்ரோடு பைபாஸ் சாலை அமைத்ததில் ரூ.184 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள்

முதல் டெஸ்ட் : 3ம் நாள் முடிவில் இந்தியா 87/1

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 25 ஓவர்களில் 1
சிறிலங்கா மீது அதிக அழுத்தம் கொடுத்தால் எதிர்விளைவுகளே ஏற்படும் – ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை

பொறுப்புக்கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் அதிக அழுத்தங்களை கொடுத்தால், அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 
கூட்டமைப்பின் வலுவான குழுவை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டும் – வலியுறுத்துகிறார் ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவானதொரு குழுவை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்
அனைத்துலக போர்க்குற்ற விசாரணை – பொறுப்பில் இருந்து நழுவுகிறார் பான் கீ மூன்
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான அனைத்துலக விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டியது உறுப்பு நாடுகளினது விவகாரமே என்று, ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். 
பாஜக மாநாடு : வைகோ வாழ்த்து
சென்னையில் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக மாநாடு இன்று நடக்கிறது. மாநாடு வெற்றி பெற ம.தி.மு.க., வின் சார்பில் வாழ்த்துவதாக வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாடெங்கும்
இன்டர்நெட்டில் என் பெயரில் மோசடி: சிம்பு அறிக்கை
நடிகர்கள், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி அக்கவுண்ட்களை மர்ம நபர்கள் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றிய செய்தி மற்றும் படங்களை அதில் போட்டு வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்தும் உரையாடுகிறார்கள்
யாழில் வாள்களுடன் வந்த இராணுவத்தினர் கைது
யாழ்.தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வாள்கள் மற்றும் இராணுவச் சீருடையுடன் இருந்த 4 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெனிவா செல்லும் குழுவை ஜனாதிபதியே தீர்மானிப்பார்!- லலித் வீரதுங்
இலங்கை சார்பில் ஜெனிவா செல்லும் தூதுக் குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று அவரது செயலாளர் லலித் வீரதுங்க நேற்றுத் தெரிவித்துள்ளார்நேற்றுக் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பூசா இராணுவ முகாமுக்குள் நுழைந்து சரணடைந்தவர்களை தேடிய அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் ராப்பின் சாதுரியம்

கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள  இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை வந்திருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான அமெரிக்க குழுவினர், காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.
இதன்போது, பூசா தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர்கள் திடீரென


ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
இன்று வெள்ளிக்கிழமை  இரவு 8.30 மணியளவிலேயே தொலைபேசியூடாக சிங்கள மொழியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
 யாழில் காசோலை மோசடி அதிகரிப்பு; கடந்தவாரத்தில் மட்டும் 44 இலட்சம் ரூபா மோசடி 
யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரம் களவு, காசோலை மோசடி போன்ற 16 சம்பவங்களில் 99 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
யாழில் உள்ள மசாஜ் நிலையங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பு; எஸ்.எஸ்.பி 
யாழ்.மாவட்டத்தில் விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக செயற்பட்டு வரும் மசாஜ் நிலையங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் டவுள்யூ.பி.விமலசேன தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணிக்கு 467 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 467 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருப்பு வாக்குகளுக்காக மோதலில் ஈடுபடவேண்டாம்

தேர்தல் விதிமுறைகளை மதித்து நடக்குமாறு அறிவுறுத்தல்

மனித உரிமைகள் என்பது அரசியல் ஆயுதம் அல்ல

வேறு எவரினதும் தேவைகளுக்காக ஆராய்ந்து பார்க்காமல் சட்டங்களை இயற்ற முடியாது
மனித உரிமைகள் விடயத்தில் பல்வேறு சர்வதேச உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த இலங்கை உடன்பட்டுள்ள அதேசமயம், இலங்கை தொடர்பான நீதிமுறை அதிகாரம் அந்த நாட்டுக்குரியதே தவிர வெளிநாட்டு அல்லது வெளிவாரி நீதிமன்றத்துக்குரியதல்ல என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மனித உரிமை என்ற விடயத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும்

பதாகைகள் ஏந்தி, சபையில் ஐ. தே. க. எதிர்ப்பு நடவடிக்கை

18 ஆம் திகதிக்கு பாராளுமன்றம் ஒத்திவைப்பு
மின்சாரம் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவர இருந்த நிலையில் ஐ. தே.
எதிர்ப்பு கோஷம்  : நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய கெஜ்ரிவால்
டெல்லியில்,  முதல்&மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆட்டோ டிரைவர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சில டிரைவர்கள், கெஜ்ரிவால் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக ஆத்திரத்துடன்
ரெக்சியன் கொலை சம்பவத்தின் பிரதான சாட்சியாளருக்கு கொலை அச்சுறுத்தல்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரெக்சியன் கொலை சம்பவத்தின் பிரதான சாட்சியாக உள்ள ரெயீனா கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன

ad

ad