புங்குடுதீவில் மேற்கத்தைய நாடுகளின் கழக சுற்றுப் போட்டிகளை ஒத்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி
http://pungudutivualbum.blogspot.ch/2013/01/pungudutivu-sport.html 100 படங்களைக் காண இங்கே அழுத்தவும்
கடந்த தைத்திங்கள் 19,20,21 ஆம் திகதிகளில்அமரர் கஷ்மீர் மேரி ரெஜினா அவர்களின்ஞாபகார்த்தமாக புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கம்
2030 இல் பண்பட்ட மண் வளத்தை நோக்கிய புங்குடுதீவு என்னும் இலட்சியத் தலைப்பை முன்வைத்து நடத்திய இந்த இந்த மாபெரும் சுற்றுப் போட்டிகளில் இறுதியாட்டம் வரை வந்த பலம் மிக்க கழகங்களான புங்குடுதீவு காந்தி விளையாட்டுக் கழகமும் நசரேத் விளையாட்டுக் கழகமும் மோதிய போது சமநிலையில் ஆட்டம் முடிவுற பனால்டி உதை மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. அதில் காந்தி சனசமூக நிலையம் வெற்றி பெற்றுள்ளது ,எல்லாக் கழகங்களும் முறையான வண்ண வண்ண சீருடைகள் காலணிகள் என அணிந்து வந்து பங்கு பற்றியது வரலாற்றில் ஒரு பதிவை உண்டுபண்ணியது இத்தோடு கவிதை கட்டுரை பேச்சு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசில்கள் கிண்ணங்கள் வழங்கப்பட்டன, முக்கிய அனுசரனையாளரும் அறிவிப்பாளருமாக திரு .இருதயநாதன் பெஞ்சமின் பங்கு பற்றி சிறப்பித்தார் , அத்தோடு மதிப்புமிகு கிறிஸ்தவ பாதிரிமார்களும் வேலணை பிரதேச சபை செயலாளர் திருமதி மஞ்சுளா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .இந்த புங்குடுதீவு மண்ணுக்கே முத்திரை பதித்த சிறப்பான நிகழ்வுகளை நடாத்தியவர்களை நாங்கள் உளமார வாழ்த்தி நிற்கிறோம்