-
28 பிப்., 2023
யாழ்ப்பாணத்தில் கொவிட் இடைத்தங்கல் நிலைய முறைகேடு விசாரணை ஆரம்பம்! [Tuesday 2023-02-28 06:00]
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் நிலையங்களில் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சினால் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது |
பிரான்சில் காணாமல் போன தமிழர் மரணம்!
www.pungudutivuswiss.com
சில வாரங்களுக்கு முன்பு பிரான்ஸில் காணாமல் போனதாக காவல்துறையினரால் தேடப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
நான் பிரதமர் பதவியிலிருந்து விலகியது தவறு!
www.pungudutivuswiss.com
பிரதமர் பதவியை மீளப் பொறுப்பேற்கவுள்ளேன் என்று வெளிவரும் செய்தி தொடர்பில் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. நான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதே தவறு என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார் |
பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த ஜேவிபி வேட்பாளர் மரணம்
www.pungudutivuswiss.com
தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார் |
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுமா தமிழ் காங்கிரஸ்? - சீண்டுகிறார் செல்வம்.
www.pungudutivuswiss.com
மாகாணசபை முறைமையை எதிர்க்கும் தமிழ் காங்கிரஸ் கட்சி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவார்களா. அல்லது எதிர்த்து நிற்பார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் |
இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் - உலக வங்கி அறிவிப்பு!
www.pungudutivuswiss.com
இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக நாணய பரிமாற்ற வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர் வழங்குவதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான இன்டர்நஷனல் ஃபைனான்ஸ் கோர்ப்பரேஷன் அறிவித்துள்ளது |
27 பிப்., 2023
மார்ச்சுக்குள் ஐஎம்எவ் உதவி கிடைக்காவிட்டால்?
www.pungudutivuswiss.com
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் கிடைக்காவிட்டால், நாட்டின் அத்தியாவசிய செலவுகளுக்காக கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார் |
24 வார சிசுவைக் காப்பாற்றி யாழ். வைத்தியசாலை சாதனை!
www.pungudutivuswiss.com
யாழ் போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் மற்றுமொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர் "டாக்டர்.டீபாலின்" வருகையின் பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் சிகிச்சையின் பின் தாயுடன் நலமாக வீடு திரும்பியது. குறித்த சாதனையை நிகழ்த்திய மருத்துவ குழுவினருக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். |
பிரான்ஸ் காவல் துறை பிரிவில் முக்கிய பதவியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன்!
www.pungudutivuswiss.com
1,100 சிங்கள சிற்றூழியர்களை நியமிக்கிறது வடக்கு மாகாண சபை!
www.pungudutivuswiss.com
மிக்கிறது வடக்கு மாகாண சபை! [Sunday 2023-02-26 16:00] |
வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்காக தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது |
பிரதமர் பதவியில் இருந்து விலகவில்லை! - தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு
www.pungudutivuswiss.com
பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யப்போவதாக வெளியான செய்திகளும் அறிக்கைகளும் முற்றிலும் பொய்யானவை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். |
அனுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் தடை
www.pungudutivuswiss.com
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது |
நாளை தொடங்கும் ஜெனிவா கூட்டத்தொடர்- இலங்கை குறித்தும் ஆராய்வு!
www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத்தொடர நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது |
கரைத்துறைப்பற்று பிரதேச சபையை கைப்பற்ற தமிழரசு புதிய வியூகம்!
www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் ஜக்கிய தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தமிழரசுக் கட்சி போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் |
26 பிப்., 2023
உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு சட்டபூர்வமானதே
www.pungudutivuswiss.com
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்பிற்கு அமையவும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமையவும் முன்னெடுக்கப்பட்டது. தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமானதே என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது |
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை நிராகரித்தார் செல்வம்!
www.pungudutivuswiss.com
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |
ஊர்காவற்றுறையில் எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய வயது முதிர்ந்த இரண்டு பெண்களே சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர் |
25 பிப்., 2023
அனலைதீவில் கனேடிய தம்பதியினர் மீது வாள் வெட்டு ; 3 ஆயிரம் அமெரிக்க டொலர் உள்ளிட்டவையும் கொள்ளை
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பத்தினர் மீது வாள்
வெட்டு தாக்குதல் மேற்கொண்டு, 3 ஆயிரம் அமெரிக்கன் டொலர் உட்பட
அவர்களின் உடமைகளை கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது.
24 பிப்., 2023
வடக்குப் பயணம் - பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு
www.pungudutivuswiss.com
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது |
எழிலன், கந்தம்மான், கொலம்பஸ் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களுக்கு தீர்ப்பு!
www.pungudutivuswiss.com
வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கொலம்பஸ்) ஆகியோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. |
23 பிப்., 2023
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் ; இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட்டு
www.pungudutivuswiss.com
ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என
ஐபிசி பாஸ்கரனுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பாணை!
www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் அழைப்பாணை
கையளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் தொழிற்சங்கப் போராட்டம்
www.pungudutivuswiss.com
சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது |
முஸ்லிம் காங்கிரசுடன் எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடவில்லை!
www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - கரைத்துறைபற்று பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரசுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லையெனவும் சிலர் போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள் |
15 வருட சிறைவாழ்வில் இருந்து விடுதலையானார் தமிழ் அரசியல் கைதி!
www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஸ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் |
அறிவிக்காத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது? - கைவிரித்த ஜனாதிபதி
www.pungudutivuswiss.com
இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார் |
ஜெட் விங் விடுதியில் ரணிலைச் சந்தித்த விக்கி - பேசியது என்ன?
www.pungudutivuswiss.com
அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல்போனோரது குடும்பங்களின் கோரிக்கை மற்றும் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் |
22 பிப்., 2023
ஐஎம்எவ் இன் 15 நிபந்தனைகள் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ரணில்!
www.pungudutivuswiss.com
சில அரசியல் கட்சிகள், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகளை முன்வைக்காமல் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் எவருக்கும் விளையாட முடியாது எனவும் வலியுறுத்தினார் |
21 தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை
www.pungudutivuswiss.com
விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடமாகாணத்திலும் கொழும்பிலும் கைது செய்யப்பட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதி மன்றத்தினால் எதுவித குற்றசாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர் |
21 பிப்., 2023
கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பாரிய மோசடி! இலட்சக்கணக்கான பணத்தை பெறும் அதிகாரிகள்
www.pungudutivuswiss.com
கடவுச்சீட்டு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் நாளொன்றுக்கு சுமார் பத்து இலட்சம் ரூபாவை மோசடியாக பெற்று வருவதாக குடிவரவு திணைக்கள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கடவுச்சீட்டு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் நாளொன்றுக்கு சுமார் பத்து இலட்சம் ரூபாவை மோசடியாக பெற்று வருவதாக குடிவரவு திணைக்கள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
12 பிப்., 2023
197 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்!
www.pungudutivuswiss.com
வடக்கில் மீள்குடியேறவுள்ள 197 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் தலா 38,000 ரூபா காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது |
சட்டத்தரணி றெமீடியஸ் சிகிச்சை பலனின்றி மரணம்!
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார். |
10 பிப்., 2023
21 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: துருக்கி- சிரியாவில் மீட்பு பணிகள் தீவிரம் (
www.pungudutivuswiss.com
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின்
எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள்
நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும்
ளப் போட்டியில் , மொத்தமாக 503 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வருகிறார்.நேற்று நடந்த போட்டியில் அல் நாசர் - அல் வெஹ்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் ரொனால்டோ ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.தொடர்ந்து 40வது நிமிடம் , 53வது நிமிடத்தில் கோல் அடித்து ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 61வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ, அல் நாசர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைய வைத்தார். இந்த் போட்டியில் ரொனால்டோ அடித்த முதல் கோல் கிளப் போட்டிகளில் , அவரது 500வது கோல் ஆகும். ரொனால்டோ இதுவரை கிளப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும், ஜுவென்டஸ் அணிக்காக 81 கோல்களும, தற்போது அல் நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்து , மொத்தமாக 503 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
www.pungudutivuswiss.com
500 கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோகிளப் போட்டியில் , மொத்தமாக 503 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர்
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் மாலை விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்
www.pungudutivuswiss.com
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
துறைமுக நகரத்தை சீனாவிற்கு வழங்கும் போது 13 ஆவது திருத்தத்தை ஏன் அமுல்படுத்த கூடாது?
www.pungudutivuswiss.com
கொழும்பு துறைமுக நகரத்தை ஒப்பந்தத்தின் ஊடாக சீனாவிற்கு வழங்கும் போது 13 ஆவது திருத்தத்தை ஏன் அமுல்படுத்த கூடாது. என பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார் |
அரசியல் கைதியாக இருந்த மருத்துவர் சிவரூபனை விடுவித்தது நீதிமன்றம்!
www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது |
க்குகள் எரிப்பது நாட்டின் எதிர்காலத்தையே!
www.pungudutivuswiss.com
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பௌத்த பிக்குகள் எரிக்கிறார்கள், அவர்கள் எரிப்பது 13 ஆவது திருத்த நகல்களை அல்ல இந்த நாட்டின் எதிர்காலத்தை என்பதை அரச தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார் |
இதனைத்தான் பௌத்தம் உங்களுக்குப் போதித்ததா? - மகாநாயக்கர்களுக்கு விக்கி கேள்வி
www.pungudutivuswiss.com
தம்மைத்தாமே நிர்வகிப்பதற்குரிய சுதந்திரத்தை வடக்கு - கிழக்கு வாழ் தமிழ்மக்களுக்கு வழங்காமல், அவர்களை சிங்களவர்களின் காலடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள். இதனைத்தான் பௌத்தம் உங்களுக்குப் போதித்ததா? என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் 4 பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார் |
மாதன முத்தாவை போல சரத் வீரசேகர அடிமுட்டாள்! - கஜேந்திரன் சீற்றம்
www.pungudutivuswiss.com
சரத் வீரசேகர போன்ற அடிமுட்டாள்களின் அறிவுரைகளை கேட்டதாலேயே கோட்டாபய ராஜபக்ச சொந்த இன மக்களாளேயே அடித்து விரட்டப்பட்டிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். |
9 பிப்., 2023
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு - மொட்டுக்கு முரண்பாடு இல்லையாம்!
www.pungudutivuswiss.com
ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் |
நாம் 13வது திருத்தத்திற்கு எதிரானவர்கள் இல்லை! - என்கிறார் கஜேந்திரகுமார்.
www.pungudutivuswiss.com
சிங்கள பௌத்த பேரினவாத தரப்புக்கள் 13வது திருத்தத்தை எதிர்பார்ப்பதற்கு பிரதான காரணம் அவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார் |
ஒற்றையாட்சியை ஏற்க முடியாது-எம்.ஏ.சுமந்திரன்
www.pungudutivuswiss.com
ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் |
8 பிப்., 2023
உருக்குலைந்த துருக்கி கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை! 14 ஆயிரத்தை கடந்தது...!
www.pungudutivuswiss.com
.! நிலநடுக்கதால் துருக்கியில் 8000 பேரும், சிரியாவில் 3,030 பேரும் உயிரிழந்துள்ளனர், இஸ்தான்புல் துருக்கி- சிரியா எல்லையில் நேற்று
எழுச்சிப் போராட்டங்கள் தொடரும் - மட்டக்களப்பு கூட்டத்தில் உறுதியேற்பு!
www.pungudutivuswiss.com
வட்டுக்கோட்டைத் தீர்மானம், பொங்குதமிழ் பிரகடனம், திம்புப் பேச்சுவார்த்தை என்பவற்றின் மூலம் வலியுறுத்தப்பட்ட, தமிழ் மக்களின் தன்னாட்சி, சுயநிர்ணயம், இறைமை என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களிற்கான இறுதித் தீர்வு சர்வதேச சட்டங்களின் பிரகாரம், சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன், தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையில் அமைய வேண்டும் என வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த பேரணியின் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது. |
பேரணியில் கலந்து கொண்ட வேலன் சுவாமிக்கு அழைப்பாணை
www.pungudutivuswiss.com
"வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி " பேரணியில் கலந்து கொண்டமை , சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டி வேலன் சுவாமிகளுக்கு யாழ்ப்பாண பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
"வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி " பேரணியில் கலந்து கொண்டமை , சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டி வேலன் சுவாமிகளுக்கு யாழ்ப்பாண பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி ஆரம்பமானது.
குறித்த பேரணியில் கலந்து கொண்டமை சட்டவிரோதமானது என குறிப்பிட்டு இன்றைய தினம் புதன்கிழமை சிவகுரு ஆதீனத்தில் வைத்து வேலன் சுவாமிகளிடம் சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தி அழைப்பாணையை வழங்கியுள்ளார்.
அதேவேளை குறித்த அழைப்பாணையில், சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக , சட்டவிரோத பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இளைஞனை கிணற்றில் தள்ளிக் கொன்ற நண்பர்கள்! - மதுபோதையில் சம்பவம்.
www.pungudutivuswiss.com
புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் |
7 பிப்., 2023
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 5 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: சொந்த,பந்தங்களை இழந்து கதறும் மக்கள்
www.pungudutivuswiss.com
ருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அங்காரா, துருக்கி
மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 4,800க்கும் மேற்பட்டோர்
கொழும்பிலிருந்த வந்த வழிப்போக்கர்களால் பிழையாக வழிநடத்தப்படுகிறது தமிழரசு கட்சி!
www.pungudutivuswiss.com
2010ஆம் ஆண்டிற்கு பின்னர் கொழும்பிலிருந்த வந்த வழிப்பேக்கர்களாக வந்தவர்கள்தான் இன்று தமிழரசுக் கட்சியை பிழையான வழியில் அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா குற்றம் சுமத்தியுள்ளார் |
கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று
www.pungudutivuswiss.com
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் தமிழர் எழுச்சிப் பேரணி இன்று இரவு 8.00 மணியளவில் மூதூர் -குமாரபுரத்தை சென்றடைந்தது. இதன்போது குமாரபுரம் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வும் அங்கு இடம்பெற்றது |
சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டம்!
www.pungudutivuswiss.com
வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர் |
அமைதிப்போராட்டக்காரர்கள் மீது பொலிஸ் தாக்குதல் - பொறுப்புக்கூற வேண்டும்!
www.pungudutivuswiss.com
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்திற்கு முந்தைய தினம் இரவு அமைதிப்போராட்டக்காரர்கள்மீது பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்புக்கூறச் செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. |
6 பிப்., 2023
யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது என யாழ்ப்பாண
மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும்
திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் பூகம்பம் பாதித்த பகுதியில் இருந்த 9 இலங்கையர்கள்!
www.pungudutivuswiss.com
துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த 9 பேரில் 8 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் |
வெளியே நிற்கின்ற கட்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்
www.pungudutivuswiss.com
வடகிழக்கிலுள்ள ஐந்து கட்சிகள் ஒரே கொடியின் கீழ் ஒரே சின்னத்தின் கீழ் ஒன்றுபட முடியுமாக இருந்தால் ஏன் கஜேந்திரகுமார் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோருடைய கட்சிகள் ஒன்றிணையாது ஏன் வெளியே நிற்கின்றது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.சிறிகாந்தா குறிப்பிட்டுள்ளார் |
முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளோம் - இனி தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்" - தமிழ்மகன் உசேன் பேட்டி
www.pungudutivuswiss.com
அதிமுக பொதுக்குழு முடிவை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்
தமிழ்மகன் உசேன். சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-
இரா.சம்பந்தன் விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தலைவராக வர முடியும்: பா.கஜதீபன்
www.pungudutivuswiss.com
இரா.சம்பந்தன் விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தலைவராக வர முடியும்
என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன்
ஒற்றையாட்சியா - சமஷ்டியா என்ற சொற்போரைப் கைவிடுங்கள்! ரணில்
www.pungudutivuswiss.com
வடக்கிலுள்ளவர்கள் சமஷ்டியை விரும்புகின்ற போது தெற்கிலுள்ளவர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஒற்றையாட்சி வேண்டும் என்கின்றார்கள், தெற்கிலுள்ளவர்கள்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்! 700க்கு மேற்பட்டோர் பலி
www.pungudutivuswiss.com
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
வசாவிளான் ஆலயத்தில் வழிபாட்டுக்கு அனுமதி
www.pungudutivuswiss.com
நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டுவந்த வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது. |
இந்தியா தமிழ்க் கட்சிகளை பிரிக்கவில்லை
www.pungudutivuswiss.com
இந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்து செயற்படவில்லை. அவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதை தான் விரும்புகின்றார்கள். ஊடகங்கள் கேள்விகளாக்குவதும் அதற்கு பதில்கள் கூறுவதும் சிறந்த விடயமல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார் |
அரசியல் தீர்விலேயே எங்கள் வாழ்வு தங்கியுள்ளது!
www.pungudutivuswiss.com
அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் - சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். எனவே, உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன்வலியுறுத்தியுள்ளார் |
அம்பாறையில் இருந்து பேரணிக்கு தடை உத்தரவு
www.pungudutivuswiss.com
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்புக்கள் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரெழுச்சி போராட்டம் நாளை மட்டக்களப்பினை சென்றடையவுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் சிவில் அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து ஆதரவு பேரணி ஒன்றை மட்டகளப்பு நோக்கிய முன்னெடுக்கவுள்ளனர் |
அவிஷ்கவின் அரைச் சதத்தால் தோல்வியை தவிர்த்த ஜப்னா அணி
www.pungudutivuswiss.com
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஜப்னா – கொழும்பு அணிகள் மோதிய 5ஆவது லீக் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (05) நிறைவுக்கு வந்தது.
திரையுலகை அதிர வைக்கும் தொடர்ச்சியான மரணம். பிரபல இயக்குநர் மரணம்
www.pungudutivuswiss.com
பிரபல்ய திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் தனது 68 வயதில் இன்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரால் அறிவக்கப்பட்டுள்ளது, இவர்
கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொள்வோருக்காக நாளை வடக்கில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன
www.pungudutivuswiss.com
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு
எதிர்வரும் 7 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில்
இடம்பெறவுள்ள நிலையில் பேரணியில் வடக்கு மாகாணத்தில்
குருந்தூர் மலை காணிகள் விடுவிப்பில் இழுபறி - காற்றில் பறந்த ஜனாதிபதியின் உத்தரவு
www.pungudutivuswiss.com
குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்காக ஆறு ஏக்கர் நிலப்பரப்பினை மட்டும் வைத்துக்கொண்டு ஏனைய பொதுமக்கள் மற்றும் வனத்துறையினருக்கு சொந்தமான காணிகளை மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளபோதும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் மட்டத்தில் இழுபறியான நிலைமைகள் நீடிப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன |
முல்லைத்தீவில் நிறைவடைந்த இரண்டாம் நாள் பேரணி
www.pungudutivuswiss.com
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி இன்று முல்லைத்தீவு நகரத்தில் நிறைவடைந்துள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)