19 மே, 2011


கவிஞர் வைரமுத்துவுக்கு வது முறையாக தேசிய விருது

58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதில்,  தென்மேற்கு பருவக்காற்று படத்தில் பாடல் எழுதியதற்காக சிறந்த பாடலாசியர் விருதை பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து.
பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், வைரமுத்து,   நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.
முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் காலத்தால் அழியாப் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர்,   சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1984ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலை பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.

இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு இரு மகன்கள்,பெயர்கள் மதன் கார்க்கி, கபிலன். (இவரும் இப்போது சினிமா பாடலாசிரியர்)
வைரமுத்து - சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது  பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்)

1. முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)
2.ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)
3.கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)
4.சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)
5.கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)
6.தென்மேற்கு பருவக்காற்று (.........)
 கவிஞர்

58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   இதில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘’எந்திரன்’’படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பிரிவில் எந்திரனுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
டெல்லியில் 58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   ’’தென்மேற்கு பருவக்காற்று‘’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

நாயகன் படத்தின் மூலம் பிரபலமான இவர் 
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் இவரது நடிப்புக்கு விருதே கிடைக்கும் முன்பே கூறினார்கள். அதன்படியே கிடைத்துவிட்டது.   

’’இப்போ என்னோட குரல்தான் ப்ளஸ்னு சொல்றாங்க. ஆனால் ஆரம்ப காலத்துல ஆம்பிளை குரல் மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்ணினவங்கள்ளாம் இருக்காங்க. வீட்டுக்கு போன் வரும். எடுத்து ஹலோன்னு சொல்வேன். சார்… சரண்யா மேடத்துகிட்ட கொடுங்கன்னு சொல்வாங்க. நான் சார் இல்லைங்க. மேடம்னு சொல்வேன். அந்த நேரத்துல அழுகை அழுகையா வரும்.

பத்திரிகை விமர்சனத்துல கூட சரண்யா டப்பிங் பேசாம இருந்திருந்தா நல்லாயிருக்கும்னு எழுதியிருக்காங்க. ஆனால் அதே பத்திரிகைகளில் என்னோட குரல்தான் ப்ளஸ்சுன்னு எழுதும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் சரண்யா.

’’நான் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடிச்சப்போ கூட திருப்திப்படல. ஆனால் இந்த படத்தின் டைட்டிலை பார்த்ததும்தான் திருப்தி வந்திச்சு. டைட்டிலில் அந்த கிராமத்தை சேர்ந்த அம்மாக்கள் நிறைய பேரை காட்டுவார் டைரக்டர்.

கடைசியா என்னையும் காட்டுவார். அந்த ஒரிஜனல் தாய்களுக்கும் எனக்கும் வித்தியாசமே தெரியாது. அந்தளவுக்கு அந்த ஊரை சேர்ந்தவள் மாதிரியே இருப்பேன் நான். 

இங்கேயிருந்து நான் போட்டுட்டு போன கம்மலை கூட அந்த ஊர் அம்மா ஒருத்தருக்கு கழற்றி கொடுத்திட்டு, அவங்களோடதை வாங்கி போட்டுகிட்டேன் என்றெல்லாம் சரண்யா சொல்ல, சொல்ல படத்தை எப்ப போட்டு காட்டுவாங்களோ என்ற ஏக்கமே வந்துவிட்டது’’ என்று தென்மேற்கு பருவக்காற்று பற்றி நெகிழ்கிறார் சரண்யா.
  மைனா படத்தில் நடித்த தம்பி ராமையாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கிய இவர் துணை நடிகர் பாத்திரங்களிலும் நடித்து வந்தார். 

மைனா படத்தில் இவரின் நடிப்பு நாயகனுக்கு இணையாக பேசப்பட்டது.   இப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.டிகர் தனுஷ் நடித்த ‘’ஆடுகளம்’’ படத்திற்கு 6  தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த நடிகருகான தேசிய விருது பெற்றார் ஆடுகளம் நாயகன் தனுஷ்.    சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதையாசிரியர் என இரண்டு தேசிய விருதுகள் பெற்றார் வெற்றிமாறன்.

ஆடுகளம் படத்தின் சிறந்த நடன  அமைப்புக்கான விருதை பெற்றார் நடன இயக்குநர் தினேஷ்குமார்.
சிறந்த படத்திற்கான ‘சிவராம் கரந்த்’விருதையும் ஆடுகளம் பெற்றது.

சிறந்த எடிட்டருக்கான விருதை இப்படத்திற்காக கிஷோர் பெற்றுள்ளார். 
நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகனும், இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான தனுஷ்,  ‘’துள்ளுவதோ இளமை’’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகனார்.  முதல் படமே பெரு வெற்றி பெற்றது.  இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார்.

அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வெளிவந்த ‘’காதல்கொண்டேன்’’ படமும் வெற்றிப்படம்.  இப்படத்திலும் தனுஷ் நடிப்பில் தனி முத்திரை பதித்திருந்தார்.


விளம்பரம்