புதிய அரசமைப்பு தொடர்பாக அனைத்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
13ஆவது திருத்தத்திற்கு மேலாக 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தற்போது அந்த விடயத்தில் 180 பாகை முரணாக மாறிவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் அரசியல் யாப்பு ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்றும் 25 இற்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கெடுத்திருந்தனர்.