ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்தார்.
தேர்தலில் தோற்கவில்லை: மின்னணு வாக்கு இயந்திரங்களில் பல கோல்மால்கள் நடந்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்
திமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.தென்னவன் இல்லத் திருமணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்
ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “புதிய நிர்வாக சபையினரின்” ஓர் கலந்துரையாடல்…
ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபையினரின் ஓர் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2014) 15:30 மணியளவில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகியது.
பழ.நெடுமாறன் தலைமையில் 'தமிழர் தேசிய முன்னனி' புதிய கட்சி தொடங்கம்
தமிழ் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் பழ.நெடுமாறன் போன்ற தமிழ்தேசிய உணர்வாளர்கள் இறங்கினார்கள். அதன் முதல்கட்டமாக கடந்த 11ந் தேதி சென்னையில் சுமார் 25 பேருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தப்பட்டது.
இரண்டு வாரங்களிலேயே மற்றுமொரு கிண்ணத்தை கைப்பற்றிய யங் ஸ்டாரின் சாதனை
இன்று நடைபெற்ற புளூஸ்டார் சுற்று போட்டியில் யங்ஸ்டார் கழகம் வெற்றி வாகை சூடி உள்ளது எந்த போட்டியிலும் தோல்வியுறாது 6 போட்டிகலிலும் ம் 11 கோல்களை அடித்து ஒரேயொரு கோலைமட்டுமே வாங்கி யசிதனின் தலைமையில் அற்புதமாக் களமாடி உள்ளார்கள் .இளம் வீரர்களையும் இணைத்துக் கொண்ட இன்றைய அணி இந்த முக்கியமான சுற்றினை வென்று தொடர்ந்து தர வரிசையில் 1 ஆம் இடத்தை தக்க வைத்துள்ளது
29 ஜூன், 2014
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார் எழுத்தாளர் ஞானி!
ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட எழுத்தாளர் ஞானி, அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். கட்சியின் உடல் நிலையும், தனது உடல் நிலையும் சரியில்லாததாலேயே தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு!
ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார்.
இந்தியாவை மீண்டும் சீண்டுகிறது சீனா: அருணாச்சல் பிரதேசத்தை சேர்த்து புதிய வரைபடம் வெளியீடு இந்தியாவை மீண்டும் சீண்டும்விதமாக அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என குறிப்பிட்டு சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவின் ஒருபகுதியான அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி சீனா அத்துமீறுவது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சீனா தனது அதிகாரப்பூர்வ
தேர்தல் பணியில் சுணக்கம்: பூங்கோதை, அனிதா உள்பட 15 பேருக்கு தி.மு.க நோட்டீஸ்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதாக கூறி முன்னாள் அமைச்சர் பூங்கோதை, வீரபாண்டி ராஜா, கம்பம் செல்வேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேரிடம் விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை தமிழ்ச்சங்கத்துக்கு வலைதளம்: ஜெ., தொடங்கி வைத்தார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென தனி அலுவலர் அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டதோடு, துணை விதிகள் உருவாக்கப்பட்டு,
சென்னையில் 12 மாடி புதிய கட்டிடம் இடிந்து தரைமட்டம் - மீட்பு பணி தீவிரம்
சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் 12 மாடி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு, முழுமை பெறாத நிலையில் இருந்தது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தனர்.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 16 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.
தமிழ் நாடு புதுச்சேரியில் இருந்து ஆவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக அடைக்கலம் கோரி படகில் சென்ற 153 ஈழத் தமிழர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிற்சர்லாந்து
“புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல்”
அன்புடையீர், வணக்கம்.
எதிர்வரும் 29.06.2014. ஞாயிறு மாலை மூன்று மணிக்கு புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல் நடைபெற விருப்பதால் “ஒல்ரன் மற்றும் ஒல்றனுக்கு அண்மையில் வாழும்” புங்குடுதீவு மக்களாகிய உங்கள் அனைவரையும் குடும்ப சகிதமாக வந்து பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின், “இறுவெட்டு” வெளியீட்டு விழா!
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)
அன்புடன் அழைக்கின்றோம்…
எமது மதிப்பிற்குரிய இசைப் பிரியர்களே!
வித்துவான் ஆறுமுகம் அவர்களின் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு
“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் பக்திப் பாடல் “இறுவெட்டு” வெளியீட்டு விழா.
இன்னிசை வேந்தர், சங்கீதபூஷணம், இளம் கலைஞர் மன்ற ஸ்தாபகர் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் பாடல் தொகுப்பான இறுவெட்டு வெளியீட்டு விழாவிற்கு தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
இடம் : Ealing Town Hall, New Broadway, Ealing, London W5 2BY
திகதி : FRIDAY 27.06.2014 மாலை 6.30 மணி
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து தங்கள் ஆதரவினை நல்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்) கருணை – 07958083456 கங்கா – 07766442273
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் வாகனம் நிறுத்துமிடப்பணி அமைப்பது பற்றி அறிக்கை தர கேரளா அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக கேரள அரசுக்கு, தமிழக அரசு இன்று எழுதியுள்ள கடிதத்தில், வாகன நிறுத்துமிடப் பகுதிக்கு ஆண்டு தோறும் குத்தகை வரி செலுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்டாலினை வீழ்த்த நினைக்கிறார்கள்: கருணாநிதி காட்டம் தி.மு.க.வை தரைமட்டமாக்கி விடுவோம் என்று மனப்பால் குடிப்பவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் கருணாநிதி,
தற்போது தி.மு.க-வில் நிகழ்ந்துவரும் பல்வேறு குழப்பங்களுக்கிடையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், நகைச்சுவை தொனிக்கப் பேசிவருபவர் துரைமுருகன். சமீபத்தில் மதுரையில் கலைஞர் பிறந்த நாள்
32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம்! வடக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார்
வடமாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் அமைச்சின் நடப்பாண்டிற்கான செயற்றிட்டங்களில் ஒன்றாக கிளிநொச்சி - வட்டக்கச்சி மாயவனூர் விவசாய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு புழுதி ஆற்று ஏற்றுநீர்
ஆசியாவின் ஆச்சர்யம்! தமது வர்த்தக நிலையங்களை தாமாகவே தீக்கிரையாக்கிய முஸ்லிம் வர்த்தகர்கள்
தமது வர்த்தக நிலையங்களை முஸ்லிம்களே தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக நிரூபிக்கத் தமது பங்களிப்பையும் முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர்
பலத்த எதிர்ப்பால் பொதுமக்களைச் சந்திக்க பயந்துகொண்டிருந்த ’மன்மத சாமியார்’ நித்தியானந்தா, தற்போது பாத பூஜை நிகழ்ச்சிகளுக்காக 15 நாட்கள் தமிழகம் முழுக்க டூரை தொடங்கியிருக் கிறார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின் அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பி.ஆர்.டி.சி.)த்திற்காக, புத்தம் புதிய 10 வால்வோ பேருந்து களை வாங்கியிருக்கிறது புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசு.
தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கும் வேலையை அதிரடியாகத் துவக்கி விட்டார் கலைஞர். தஞ்சை மா.செ. பழனிமாணிக்கம், தர்மபுரி மா.செ.க்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன்,
தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கும் வேலையை அதிரடியாகத் துவக்கி விட்டார் கலைஞர். தஞ்சை மா.செ. பழனிமாணிக்கம், தர்மபுரி மா.செ.க்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன், ராஜ்யசபா எம்.பி. கே.பி.ராமலிங்கம் உட்பட 6 நகரச் செயலாளர்கள், 21 ஒன்றியச் செயலாளர்கள், பேரூர் செயலாளர் ஒருவர்
இந்து முன்னணிப் பிரமுகர் சுரேஷ்குமாரின் படுகொலை, பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. போக்குவரத்து அதிகம் இருந்த இடத்தில் இந்தக் கொலை நடந்தும் கூட, ஒருவாரத்திற்கும் மேலாக, கொலையாளிகளைப்
தெற்கத்தி மாவட்டங்களில் பண் ணையார் குடும்பம் பற்றி தெரிந்திராத ஆட்களே இல்லை. எந்நேரமும் எதிரிகளின் கழுகுக் கண்களில் இருப்பவர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கல்யாணம், காதுக் குத்து, கோயில் கொடைகளில் கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்துபவர். நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவரான சுபாஷ் பண்ணையார் முதன்முறையாக நக்கீரனிடம் மனம் திறந்து பேசினார்.
ஒரு ஷூட்டிங் ஸ்பாட்..கடவுளின் அவதாரமான பாம்பு ஓரிடத்தில் ஒளிந்திருக்கும். வில்லன் வந்து நாயகியிடம் தந்திரமாக பேச வேண்டும். பின் பாம்பு தன் பலத்தால் வில்லனைப் பற்றி நாயகிக்கு அறிவுறுத்த வேண்டும். ஷாட் படி வில்லன் வந்து பேசிவிட்டுச் சென்றுவிட்டார். ஷூட்டிங் முடியும்போதுதான் உதவி இயக்குநர் ஒருவர் கவனித்திருக்கிறார். காலையில் வில்லன் போட்டிருந்த சர்ட் மஞ்சள் கலர். பிரேக்கிற்குப் பிறகு அவர் போட்டிருந்தது சிவப்பு கலர். கன்டினியூட்டி மிஸ்ஸிங்.
கடலோர காவல் படையினருக்கும், காவல்துறையிருக்கும் இடையே நடத்தப்படும் 48 மணி நேர 'ஆபரேஷன் ஆம்லா' இன்று (25ஆம் தேதி) காலை 6 மணிக்கு தொடங்கியது. மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். மேலும், 9 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராக்கிங் கொடுமையால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அரங்கேறும் கொடுமைகளை தடுக்க சட்டத்தில் பல வழிகள் இருந்தும் அதை சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கொடுமையின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சென்னை, எழும்பூரில் உள்ள கல்லூரியில் படித்த மாணவி சரிகாஷா ராக்கிங் கொடுமையால் கடந்த 1998ல் இறந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பிறகு ராக்கிங் கொடுமையை தடுக்க கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் ராக்கிங்கை தடுக்க குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் ராக்கிங் சம்பவங்கள் அந்தக் குழுக்கள் பெயரளவுக்கே செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றன.
மத்திய அமைச்சர்கள் புது கார்கள் வாங்க பிரதமர் மோடி தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் 100 நாட்களில் செய்யவிருக்கும் பணிகள் குறித்து
தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகள் இவை. எத்தகைய சீரழிவை நோக்கி இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் உதாரணம்.