-
3 அக்., 2013
இத்தாலியில் கப்பல் மூழ்கியது : 100 பேர் பலி- 250 பேரை காணவில்லை
வட ஆப்ரிகாவில் இருந்து இத்தாலி வந்த ஒரு கப்பல் இன்று கடலில் மூழ்கியது. இதில் 100 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 82 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கப்பலில் 500 பேர் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 250 பேர் நிலை தெரியவில்லை என்றும் மீட்புபணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 250 பேர் நிலை தெரியவில்லை என்றும் மீட்புபணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகரை இந்து ஆலயத்தில் இராணுவத்தின் தலையீடு: நிறுத்துமாறுகோரி அரச அதிபருக்கு யோகேஸ்வரன் எம்.பி.மகஜர்
வாகரை ஆலங்குளத்திலுள்ள இந்து ஆலயங்களில் இராணுவம் தலையிடுவதை நிறுத்தி உதவுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மட்டக்களப்பில் கடனை திரும்ப செலுத்த முடியாத பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் அதிகாரிகள்!- அதிர்ச்சி தகவல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் செய்ய கடனை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் கடனை திருப்பிச் செலுத்த முடியாத பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அரசசார்பற்ற
கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் உயிரச்சுறுத்தல்: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஈழத்தமிழர் தகவல்
நடந்து முடிந்த வட மாகாண தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்டதால் சில சிங்கள கட்சிகள் தன்னை அச்சுறுத்தி வருவதாக அதிவேக படகில் சென்று இந்தியாவில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்திய நபர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பின் 157 (அ) உறுப்புரையையும் அரசியல் அமைப்பிற்கான ஆறாவது திருத்தத்தையும், மீறியுள்ளதாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த 6 மனுக்களும் இன்று பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ், நீதியரசர்களான சந்திரா ஏகநாயக, ரோகினி மாரசிங்க ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
1. இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)