-
30 ஜூன், 2022
உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயம்-நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு
இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரிட்டன்
அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணயமாற்று விபரங்கள் உள்ளடங்கலாக இலங்கையின் பொருளாதார நிலவரத்தை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் விக்கி ஃபோர்ட் தெரிவித்துள்ளார் |
பூஜை அறையில் விளக்கேற்றிய பெண் தீயில் கருகி மரணம்!
திருகோணமலையில் உள்ள வீடொன்றில் தீ விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது |
ரயில் சேவையும் முடங்கும் ஆபத்து!
எ ரிபொருள் இல்லாததன் காரணமாக, ரயில்வே திணைக்கள ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்ல முடியாமையால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன, எதிர்வரும் நாட்களில் மேலும் பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவித்தார். |
அரபு நாடுகளிடம் உதவி கேட்க வெட்கமில்லையா?-முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா
கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்திய அநியாயங்கள் வேறு எந்த அரசாங்கத்தினாலும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அரபு நாடுகளுக்கு சென்று உதவி கேட்பதற்கு அரசாங்கம் வெட்கப்படவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். |
பயண கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு புதிய போக்குவரத்துக் கட்டணம் இன்று அறிவிப்பு!
புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று கையளித்திருந்தது |