-
2 பிப்., 2016
நடிகர் மாதவன் நடித்து வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டைமைக் டைசன்
நடிகர் மாதவன் நடித்து வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டை
முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் 5–ந் தேதி இறுதி விசாரணை
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்துள்ள பரிசுப் பொருள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு
மும்பை அருகே கடலில் மூழ்கி 14 மாணவ–மாணவிகள் பலி கல்லூரி சுற்றுலா சென்ற இடத்தில் துயரம்
மும்பை அருகே கடலில் மூழ்கி கல்லூரி மாணவ–மாணவிகள் 14 பேர் பலியானார்கள்.
கல்லூரி சுற்றுலாமராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஆபேதா இனாம்தார் என்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர். 143 மாணவ, மாணவிகள் இந்த சுற்றுலாவில்
ஒரு நாடு ஒரு தேசம் மென்பொருள் அறிமுகம்!
சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில், “ஒரு நாடு ஒரு தேசம்” எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மைத்திரி அதிரடி! ரணில் அதிர்ச்சி! மகிந்த திணறல்!
மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன அதிரடியாக கைது செய்யச் சொல்லி மிகப்பெரிய அதிர்வலைகளை
சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுக்கும் யோஷித
விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் சி
தேசிய கீதம் தமிழில் பாடுவது தேசிய நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாகும்! டக்ளஸ் தேவானந்தா
1949ம் வருடம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற எமது நாட்டின் முதலாவது சுதந்திர தின விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ்
மோடி வருகைக்கு எதிர்ப்பு - கருப்பு கொடி 200 பேர் கைது
கோவையில் E.S.I மருத்துவமனை திறப்பு விழா, பொதுக்கூட்ட மேடையில் உரையாற்ற வரும் மோடியின் வருகையை
தனிப்படை போலீசார் அதிரடி : தேசியக்கொடியை எரித்த இளைஞர் கைது
தேசியக்கொடியை எரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மகேந்திரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை ராயப்பேட்டை
29 ஆண்டுகளாக டார்ச்சர்... உயர் அதிகாரி மீது பெண் ஐ.பி.எஸ். பகீர் குற்றச்சாட்டு!
கேரள மாநிலத்தின் போக்குவரத்து ஆணையர் டோமின் தச்சங்கரி, கடந்த 29 ஆண்டுகளாக எனக்கு தொல்லை கொடுத்து
பிப்ரவரி 5-ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இம்மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி அமைத்துள்ளன. இவர்கள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல், தி.மு.க.வும் விஜயகாந்த்தை இழுக்க முயற்சித்து வருகிறது. பா.ஜ.க. தலைவர்களும் விஜயகாந்த் எங்களது கூட்டணியில்தான் இருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை கூட்டணி குறித்து விஜயகாந்த் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் 5-ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி செல்லும் அவர் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிப். 5ல் டெல்லி செல்கிறார் விஜயகாந்த்... பாஜக தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சு!
பிப்ரவரி 5-ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி குறித்து
மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏன் அறிவிக்கப்படக்கூடாது என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே ஒன்றுகூடி, 'முதல்வர் வேட்பாளர்' குறித்து விரிவாக விவாதித்து, தெளிவாக ஒரு முடிவை அறிவித்துள்ளோம். கூட்டணியின் 'குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை' முன்வைத்து மக்களைச் சந்திப்பது என்றும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்றும் ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இந்நிலையில், "தலித் ஒருவர் ஏன் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது?" என்னும் உரையாடல் இப்போது பொதுவெளியில் தொடங்கியுள்ளது. விடுதலைச்சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தோழர் இரவிக்குமார் அவர்கள், 2014 ஆம் ஆண்டு, 'நிறப்பிரிகை' என்னும் தனது இணையப் பக்கத்தில் எழுதியதை அடிப்படையாக வைத்து, இதனைச் சிலர் தற்போதைய சூழலில் கிளறியிருப்பதாகத் தெரிகிறது. 'வடமாநிலங்களில் சுஷில்குமார் ஷிண்டே, மாஞ்ஜி, மாயாவதி போன்றவர்கள் முதல்வராகும் அளவுக்கு அங்கே உட்கட்சி சனநாயகமும் சமூக சனநாயகமும் வளர்ச்சியடைந்துள்ளது; ஆனால், தமிழகத்தில் ஒப்புக்காகவும் அப்படியொரு பேச்சுகூட எழவில்லையே ஏன்?' - என்னும் அடிப்படையில்தான் அவர் அந்தக் கேள்வியை எழுப்பினார். அன்று அதனை எவரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இன்று அதனை ஊதிப் பெருக்கி, மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கிட, சிலர் பெருமுனைப்புக் கொள்கின்றனர். தோழர் இரவிக்குமார் அவர்கள், மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்கு முன்பே, 2014 இல் பொதுவெளியில் எழுப்பிய இந்த சனநாயகக் குரலை, இன்று எமது கூட்டணிக்கு எதிராக எழுப்பப்பட்ட போர்க்குரலாகத் திரித்துக் கூற முயற்சிக்கின்றனர். காலம் காலமாக தமிழக அரசியலில் தொடரும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் தலித்துக்களின் மீதான அரசியல் சுரண்டலுக்கு எதிராகவும் உரையாட வேண்டிய சனநாயக சக்திகளும் இதனைத் தலித்துக்களுக்கு எதிராகவே திருப்பிவிட துடிக்கின்றனர் என்பது அதிர்ச்சியாகவுள்ளது. இதிலிருந்து, இன்னும் தமிழகத்தில் சாதியத்தைச் சாடுவதற்கும் கூட சனநாயகக் கூறுகள் வலிமை பெறவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே 'முதல்வர் வேட்பாளர்' என்கிற கேள்விக்கே இடமில்லை. இந்த ஒருமித்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். கூட்டணியை வலுவான மாற்று சக்தியாக முன்னெடுத்துச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளர் சர்ச்சை: திருமாவளவன் விளக்கம்!
மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)