புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2012


களவு, கடத்தல், கொலை என டக்ளஸ் தனது வாழ்நாளில் முக்கால்வாசியை சிறையில் கழித்தவர்: சுரேஸ் பிரேமச்சந்திரன்
வங்கியில் கொள்ளையடித்து, பிள்ளைகளை கடத்தி, கம்பம் கேட்டு, கொலை செய்து தனது வாழ்நாளின் முக்கால் வாசியை சிறையிலேயே கழித்த அமைச்சர் டக்ளஸ் சிறைக் கைதிக ளை பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்.
சிறையில் வளர்ந்தவர்கள்தான் சிறைக்கைதிகள் பற்றிப் பேசவேண்டும் என்றுள்ளதா? அதுபோக சிறைச்சாலை படுகொலைக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவர் கூறினால் படுகொலைகள் சரியென ஒப்புக்கொள்கின்றாரா?
என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கூட்டமைப்பின் யாழ்.அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
சிறையில் கைதிகள் காவலாளிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர் என்றால் அதற்க்குத் தண்டனையாக படுகொலை செய்யலாமா?
சிறையில் கைதிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளையும், மயக்க மருந்துகளையும் தெளித்து அவர்கள் மயக்கமடைந்த பின்னர் அவர்களை அனுராதபுரத்திற்குக் கொண்டு சென்று அங்கு வைத்து மயக்கம் தெளியாத நிலையில் வைத்துத்தான் அடித்து நொருக்கினார்கள்.
எனவே கைதிகளை அடித்ததும், படுகொலை செய்ததும் சரியானதொரு விடயம், அவர்களை அப்படித்தான் செய்யவேண்டும் என்று அமைச்சர் ஏற்றுக் கொள்கின்றாரா என்பதை இந்த அமைச்சர் கூறவேண்டும் என்றார்.
இதேவேளை ரெசோ மாநாடு குறித்தும், தீர்மானங்கள் குறித்தும் கேட்டபோது தீர்மானங்கள் எமக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரப்போவதில்லை. ஆனால் குறித்த மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை நாங்கள் வரவேற்கின்றோம்.
இனிமேல்தான் கருணாநிதிக்கு வேலையிருக்கின்றது. எடுக்கப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசுக்கும், ஜ.நாவுக்கும் கொண்டு சென்று அவை நிறைவேற்றப்படுவதற்கு போதுமானளவு அழுத்தங்களை அவர் கொடுக்கவேண்டும்.
அப்போதே ஈழத்தமிழர் மீது அவர் கொண்டிருக்கின்ற உண்மையான உளப்பாங்கை நாம் பார்க்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம் என்றார்.
அபிவிருத்தி என அரசாங்கம் பேசிக் கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் தமிழர்களுடைய பெறுமதியான வளங்களை அரசாங்கம் தொடர்ந்தும் சூறையாடிக் கொண்டிருக்கின்றது. எனவே அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
மேலும் இலங்கையிலிருந்து பெருமளவு இளைஞர் யுவதிகள் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள். இது திட்டமிட்ட ஒரு செயல், இதில் அதிகாரிகளுக்கும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன.
இது நன்கு திட்டமிட்ட ஒரு செயலாகும், இங்கு பிரச்சினை அனைவருக்கும் உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆனால் அதற்காக எங்கள் நிலங்களை விட்டு ஓட முடியாது. இந்த சூழலோடு வாழ்ந்தாகவேண்டும் என்பதை எல்லோருக்கும் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விரும்புகின்றது என்றார்.

ad

ad