புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014


ஜனவரி 13ல் இலங்கை வருகிறார் போப் 
 போப் பிரான்ஸிஸ் அடுத்த வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
அண்மையில் வத்திகானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஆயர்கள் குழு இது தொடர்பில் போப் பிரான்ஸுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எதிர்வரும் ஆண்டு  ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள போப் பிரான்ஸில் மன்னார் மடு தேவலாயத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் அரசியல் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். 
 
இதேவேளை கொழும்பில் மிகப்பெரிய பிரார்த்தணை கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது என இவரது விஜயம் தொடர்பில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோஸப் ஆண்டகை கத்தோலிக்க இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ad

ad