புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014

கொன்சலிற்றா கெட்டுப்போகவில்லை ; கூறுகிறது மருத்துவ அறிக்கை 
news
குருநகர் பெரியகோயிலுக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மருத்துவ அறிக்கை இன்று நீதிமன்றத்தில் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதன்படி யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பி. சிவகுமார் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதேவேளை, கடந்த மாதம் 14ஆம் திகதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையும் இன்று பொலிஸாரால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையில் கொன்சலிற்றா கன்னித்தன்மை உள்ளவர் என்றும் தண்ணீரில் மூழ்கியதனாலேயே மரணம் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் நீதவானின் உத்தரவிற்கு அமைய இன்னும் 2 தினங்களுக்குள் டயலொக் நிறுவனத்திடம் இருந்து தொலைபேசி அறிக்கையினைப் பெற்று மன்றிற்கு வழங்குவதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ad

ad