புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2014

ஆணைக்குழுவின் கையில் போர்குற்ற விசாரணை; தமிழரையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயல் காணாமற்போனோர் தொடர்பான அமைப்புக்கள் விசனம் 
காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளே இன்னமும் முற்றுப்பெறவில்லை. இது தொடர்பிலான இடைக்கால அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

 
இவ்வாறானதொரு நிலையில் அந்த ஆணைக் குழுவுக்கு மேலும் விடயப்பரப்பை விரிவாக்கிப் போர்க் குற்றம் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்வதற்கு ஆணைகொடுத்திருப்பதானது, தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயல் எனக் காணாமற்போனோர் தொடர்பான விடயங்களுக்காகக் குரல் கொடுக்கும் பல்வேறு அமைப்பினரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
 
ஓர் விசாரணையே இன்னமும் முற்றுப் பெறாத நிலையில், மேலும் மேலும் பொறுப்புக்களை அதே ஆணைக் குழுவுக்கு கொடுப்பதானது இந்த விசாரணைகளின் முடிவுகள் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை இப்போதே எடுத் துக்காட்டுவதாக அமைகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக் குழுவின் விடயப் பரப்புக்கள் அதிகரிக்கப்பட்டுப் போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளும் ஆணைக் குழுவாக அது மாற்றப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக் குழுவுக்கு முறைப்பாடுகளைக் கையளித்த மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலையிடம் கேட்ட ஆணைக்குழுவின் போது,
 
ஓர் விசாரணையே இன்னமும் ஒழுங்காக நிறை வடையவில்லை. அப்படிப்பட்ட ஆணைக்குழுவுக்கு மேலும் பொறுப்புக்களை ஜனாதிபதி வழங்குகின்றார் என்றால், அந்த ஆணைக் குழுவினர் ஜனாதிபதிக்கு விசுவாசமாகச் செயற்படுகின்றனர் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கின்றது. 
 
மேலும் போர்க் குற்றம் என்பது பெரியதொரு விடயம். காணாமற்போனோர் தொடர்பில் இன்னமும் 18 ஆயிரம் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளன. அந்த முறைப்பாடுகளை விசாரிக்க முன்னர் இவ்வாறு விடயப்பரப்புக்களை அதிகரித்து ஆணைக்குழுவின் செயற்பாடுகளே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த அரசு, தமிழ் மக்களையும் d சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்காகவே இவ்வாறு செய்கின்றது என்று தெரிவித்தார். இதே நிலைப்பாட்டையே காணாமற்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவினரும் வெளிப்படுத்தினர்.

ad

ad