புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2014

மத்திய கல்லூரி வெற்றி ஹரிகரன் சிறப்பாட்டம்
ஹரிகரன் சிறப்பான பந்து வீச் சால் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தை வென்றது யாழ் மத்திய கல்லூரி.

இலங்கை பாடசா லைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் மட்டுப் படுத்தப்படாத பந்துப்பரிமாற்றம் கொண்ட இரண்டு நாள் துடுப்பாட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினை எதிர்த்து கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் முதல் இனிங்ஸில் 25.4 பந்துப்பரிமாற்றத்தில் 28 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

பந்துவீச்சில் யாழ். மத்தி சார்பாக சௌமிதரன், டர்வின், அலன்ராஜ் தலா 3 இலக்குகளை கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 77.3 பந்து பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் யூலியஸ் கலிஸ்ரன் 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில் கம்சிகன் 4 இலக்குகளைக் கைப்பற்றினர்.

172 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் 40 பந்து பரிமாற்றங்களில் 96 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்து, இனிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்க ளால் தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக ஹரிகரன் 27 ஓட்டங்களைக் விட்டுக் கொடுத்து 9 இலக்குகளைக் கைப்பற்றி, ஓர் இனிங்ஸில் அதிக விக்கெட் களை கைப்பற்றிய சாதனையும் நிலைநாட்டியுள்ளார்.

இரண்டு இனிங்ஸிலும் இவர் 10 விக்கெட்களையும் கைப்பற்றினார
.

ad

ad