புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2015

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை


யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 129 சந்தேகநபர்களில் 47 சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ்.நீதிமன்றத்தில்
ஆஐர்படுத்தப்பட்ட நிலையில் 2 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய 45 சந்தேகநபர்களையும் 9ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 20ம் திகதி மாணவி வித்தியா படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, யாழ்.நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் 129 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 47 சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள் 47 பேரில் 2 மாணவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதுடன், மீதி 45 சந்தேகநபர்களுக்கு 9 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிணையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கே.சயந்தன் ஆகியோர் ஆஜராகினர்.

ad

ad