புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2016

அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் கவர்னர் கே.ரோசய்யா அறிவிப்பு


அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் என்று கவர்னர் கே.ரோசய்யா கூறினார். 

தமிழக சட்டசபை நேற்றைய கூட்டத்தில், கவர்னர் கே.ரோசய்யா பேசியதாவது:- 

ஒருங்கிணைந்த சாலை கூட்டமைப்பு

* போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான வாகனப் போக்குவரத்தை உறுதிசெய்ய, புறவழிச் சாலைகள், வெளிவட்டச் சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள் போன்றவை அமைக்கப்படும். சாலைகளின் தரத்தினை மேம்படுத்துவதற்காக, ‘ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமும்’, ‘செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையும்’ தொடர்ந்து செயல்படுத்தப்படும். 

* கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்குவதற்காக, ‘விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தை’ இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். 

நிதி ஆதாரம்

* நெசவுத் தொழிலை பாரம்பரியமாக செய்துவரும் பகுதிகளில், வேலைவாய்ப்பு வசதிகளை அதிகரித்திட, புதிய ஜவுளித் தொகுப்புகளும் பட்டு ஜவுளிப் பூங்காக்களும் அமைக்கப்படும். கழிவுநீர் வெளியேற்றத்தை முற்றிலுமாக தடுக்கும் வகையில், பொது சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்படும். 

* தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் உள்ள உட்கட்டமைப்புகளையும் பொது வசதிகளையும் மேலும் உயர்த்திட, ஊரகக் குடியிருப்புகளை மையமாகக் கொண்ட, ‘தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்’ தொடர்ந்து செயல்படுத்தப்படும். நிதி ஆணையத்தின் உதவி மானியங்களின் கீழ் ஊராட்சி அமைப்புகளுக்குக் கிடைக்கவுள்ள நிதி ஆதாரங்களில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். 

தூய்மையான கிராமம்

* இல்லந்தோறும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழிக்கும் சுகாதாரமற்ற பழக்கத்தை தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க, இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் பொது சுகாதாரம் மேலும் மேம்படுத்தப்படும். 

* ‘தூய்மைக் காவலர்களை’ நியமித்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல மாநிலங்கள் தற்போது பின்பற்றி வருகின்றன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

* முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திறன்மிகு தலைமையின் கீழ், குப்பைகள் அற்ற தூய்மையான கிராமங்களையும், நகரங்களையும் இந்த அரசு உருவாக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 

உலக வங்கி நிதியுதவி

* நகர்ப்புரங்களில் தரமான சாலை வசதிகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, தெரு விளக்குகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 

* தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டு இயக்கமும்’, ‘சென்னைப் பெருநகர வளர்ச்சி இயக்கமும்’ மத்திய அரசின் திட்டங்களான ‘திறன்மிகு நகரங்கள் திட்டம்’ மற்றும் ‘அட்டல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றங்களுக்கான திட்டங்களுடன்’ ஒருங்கிணைக்கப்பட்டு, நகர்ப்புரக் கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும். நகர்ப்புர மேலாண்மைக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் ‘தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்திற்காக’ இந்த அரசு உலக வங்கியின் நிதியுதவியைப் பெற்றுள்ளது. 

மெட்ரோ ரெயில் சேவை

* கிராமப்புற, நகர்ப்புரப் பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்ய, புதிய குடிநீர் வழங்கும் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவதற்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். சென்னைக்கு அருகே, நெம்மேலி மற்றும் பேரூரில் முறையே, நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் மற்றும் 400 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட 2 கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை நிறுவுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும். 

* கோயம்பேடு மற்றும் ஆலந்தூருக்கு இடையே பயணிகள் சேவைகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்போது வழங்கி வருகிறது. சின்னமலைக்கும் விமான நிலையத்திற்கும் இடையேயும், ஆலந்தூருக்கும் பரங்கிமலைக்கும் இடையேயும் பயணிகள் சேவைகள் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளன. மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு, 2017-ம் ஆண்டு இறுதிக்குள், அனைத்துத் தடங்களிலும் முழுமையாக பயணிகள் சேவைகள் தொடங்கப்படும். 

2-ம் கட்ட பணிகள்

* வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடம் 1-ன் நீட்டிப்புப் பணிகள் 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தும் வகையில், இந்த அரசு தனது தொடர் முயற்சிகளால் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கான பணிகளையும் இந்த அரசு விரைவாக செயல்படுத்த உறுதி கொண்டுள்ளது. 

ad

ad