வெள்ளி, அக்டோபர் 14, 2016

ஓ.பி.எஸ். - ஸ்டாலின் சந்திப்பு

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக எம்எல்ஏக்கள் துரைமுருகன், அன்பழகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மான நகலை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஸ்டாலின் அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி பிரச்சனை தொடர்பான அனைத்துக் கடசிக் கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்தினோம் என்றார்.