புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2017

பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி

பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதற்கமைய குறித்த நியமனம் மார்ச்
1ம் திகதி வழங்க நடவடிக்கை இடம்பெறுவதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,
வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதற்கமைய குறித்த நியமனம் மார்ச் 1ம் திகதி வழங்க நடவடிக்கை இடம்பெறுகின்றது. வடக்கில் உள்ள பாடசாலைகளில் குறித்த பாடங்களில் நிலவிய 846 வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் வட மாகாண பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
அவ்வாறு கோரப்பட்ட சமயம் இவற்றிற்காக 2 ஆயிரத்து 455 விண்ணப்பங்கள் கிடைத்தன. அவ்வாறு கிடைத்த விண்ணப்பதாரிகளிற்கு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் இரண்டு பாடங்களிலும் 40 புள்ளிகளிற்கும் மேல் என்ற அடிப்படையில் பெற்ற பரீட்சார்த்திகளாக 789 பேர் இனம் கானப்பட்டனர். இவ்வாறு இனம் கானப்பட்பட்ட 789 பேரும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டனர்.
நேர்முகத் தேர்வில் தோற்றியவர்களில் 559 பேர் மட்டுமே தகுதியடைந்துள்ளனர். இவ்வாறு தகுதியடைந்தவர்களிற்கு நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடாக வட மாகாண அமைச்சர் வாரியத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த்து. அதன் பிரகாரம் அமைச்சர் வாரியமும் தற்போது அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து தேர்வான ஆசிரியர்களிற்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவர்களிற்கான நியமனங்கள் எதிர் வரும் 1ம் திகதி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. என்றார்.

ad

ad