செவ்வாய், ஜனவரி 16, 2018

தனிகட்சியா? நாளை முடிவு என தினகரன் பதில்


டி.டி.வி.தினகரன் குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் இரண்டு நாட்களாக தங்கி பொங்கலை கொண்டாடினார். இன்று காலை ஊட்டிக்கு செல்வதற்காக கிளம்பி செல்லும் போது புதுச்சேரி எல்லை திருச்சிற்றம்பலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :- "தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவு செய்யப்படும். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்"  என்றார். முன்னதாக திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் அவரது ஆதரவாளர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.