திங்கள், பிப்ரவரி 05, 2018

தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் மீது தாக்குதல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் திரியாய் வேட்பாளரான பரமேஸ்வரன் (பஞ்சன்) மீது, நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். தென்னமரவாடியில் கட்சிப் பணிகளை முன்னெடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில், இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.