புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், மார்ச் 01, 2018

திருப்பதியில் மகிந்த வழிபாடு!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திருப்பதியில் நேற்று வழிபாடு நடத்தினார். இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இந்தியா வந்த
மகிந்த ராஜபக்ச, சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா வந்தடைந்தார். அங்கிருந்து காரில் திருப்பதிக்கு சென்றவர், நேற்றுக் காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன பீடத்தில் ஏழுமலையானை தரிசித்த மகிந்தவுக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன