03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஆகஸ்ட் 15, 2018

சிறுமியைத் தூக்க முயன்ற கழுகு! - அனுராதபுரத்தில் பரபரப்பு


அனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்பாக, விளையாடி கொண்டிருந்த 7 வயதுச் சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல
.
  
   

முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழுகுடன் போராடி தாயார் தனது குழந்தையை காப்பாற்றியுள்ளார். கழுகு பிரதேச மக்கள் இணைந்து பிடித்து அனுராதபுரம் விலங்கு அலுவலகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.

அனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்பாக, விளையாடி கொண்டிருந்த 7 வயதுச் சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழுகுடன் போராடி தாயார் தனது குழந்தையை காப்பாற்றியுள்ளார். கழுகு பிரதேச மக்கள் இணைந்து பிடித்து அனுராதபுரம் விலங்கு அலுவலகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 7 வயதான தெவ்மினி அமாயா என்ற சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை சிறுமி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருக்கும் போது பறந்து வந்த கழுகு ஒன்று அவரைத் தாக்கியுள்ளது. சிறுமியின் முதுகு பக்கத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் காயமடைந்துள்ளார்.

நேற்று 4 சிறுவர்களை கழுகு துரத்திச் சென்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து கழுகிடம் இருந்து தப்பியுள்ளனர். ஆனாலும் பிரதேச மக்கள் இணைந்து பாதுகாப்பாக கழுகினை பிடித்து வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கழுகினால் தாக்கப்பட்ட சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது