03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி


வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்ததது. 
குறித்த உதவிகளை வடமாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவைகள் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அனந்தி சசிதரன் வைபவரீதியாக வழங்கி வைத்தார்.
வவுனியா, வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 10 குடும்பங்கள் இதற்கென தெரிவு செய்யப்பட்டிருந்தன.
வடமாகாண மகளிர் அமைச்சியினால் ஒதுக்கப்பட்ட  5 இலட்ச ரூபா நிதியில் இருந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரூபிணி வரதலிங்கம் மற்றும் பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.