03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, ஆகஸ்ட் 18, 2018

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்: ஐ.நா. ஆணையாளரிடம் கோரிக்கை

இலங்கையில் பொறுப்புப்கூறலை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 7வது ஆணையாளராக நியமனம் பெற்றுள்ள மிச்சேல் பாச்லெட்டிற்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியிலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கப்படையினரினால் கடந்த 2009ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான தமிழ்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறு தமிழர்கள் கொல்லப்படுவதை தடுப்பதில் ஐ.நா. மிகமோசமான முறையில் தோல்விகண்டிருந்தது.

எனினும், தமது தோல்விகளை அடையாளம் கண்டு பரிகாரங்களைச் செய்வதற்கு ஐ.நா.வின் முக்கிய அதிகாரிகள் மேற்கொண்ட முன்முயற்சிகள் பாராட்டிற்குரியவை என உலகத்தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய்ந்து பொறுப்புக்கூறுவதற்காக அப்போதைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார். அத்தோடு இலங்கையில் இடம்பெற்றது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாதிருப்பதற்காக உள்ளக மீளாய்வு குழுவொன்றையும் நியமித்திருந்ததையை உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மேற்பார்வையின் கீழ் இலங்கையைத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு 2019ஆம் ஆண்டு மார்ச் அமர்வுகள் மிகவும் முக்கியமானவை என உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா. இந்த விடயத்தில் இழைக்கக்கூடிய எவ்விதமான தவறும் மனித உரிமைகளை மீறிச் செயற்படுகின்ற நாடுகளுக்கு பிழையான முன்னுதாரணத்தை வழங்கிவிடும் எனவும் தெரிவித்துள்ளது