புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2018

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு

வடக்கு மாகாண சபையின் 134ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

 

 
12:34
 
யாழ்ப்பாண  மாவட்ட கூட்டுறவு கிராமிய திணைக்களத்தின் சீமெந்து விநியோகம்  தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரி ஒருவரை நியமிப்பது என்ற தீர்மானம் எதிர்கட்சித் தலைவர் தவராசாவால்  இன்றையதினம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
 
 
12:32
 
கூட்டுறவு திணைக்களத்தின் சீமெந்து விற்பனை ஊழல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 
சம்பந்தப்பட்ட அமைச்சர் ஊழலில் ஈடுபட்டனர் என்று கூறப்படும் அதிகாரிகளுக்கு எதிராகவும் இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளாரா என்று எதிர்கட்சி தலைவர் தவராசா கேள்வி எழுப்பினார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுடன் சம்பத்தப்பட்டவர்களை  காப்பாற்ற யாரோ முயற்சிப்பது போன்று உள்ளது என்று மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி தெரிவித்தார்.
 
 
 
11:46
இதுவரையில்...
 
சபை அமர் ஆரம்பமானது. முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முக்கியமான நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு, மருத்துவமனைக்கும் சென்று தாமதித்து வருவதாக அவைத்தலைவருக்கு அறிவிக்கப்பட்டது.
அமர்வில் மீண்டும் அமைச்சு விவகாரம் தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
நீதிமன்றம், ஆளுநர் செய்யவேண்டிய விடயங்களை மாகாணசபை விவாதிக்கமுடியாது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக ஒரு மணித்தியாலம் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. அமைச்சரவை தொடர்பாக சபையில் கடும் சொற்போர் இடம்பெற்றது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தவராசா, சிவாஜிலிங்கம் ,பரஞ்சோதி ,அஸ்மின் ஆகியோர் கடும் விவாத்தில் ஈடுபட்டனர்.

காற்றாலை விவகாரம் தொடர்பாக நீண்டநேரம் விவாதம் இடம்பெற்றது 
இதன்பொழுது அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்திற்கும்  ஐங்கரநேசனுக்கும் இடையில் கடும் தர்கம் ஏற்பட்டது
 
 வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன் அவைத்தலைவரை பார்த்து நீங்கள் என்சார்ந்து என் அமைச்சு சார்ந்து திட்டமிட்டு செயற்படுகிறீர்கள் என்று கூறினார்.
 
 இதற்கு அவைத்தலவர் ஐங்கரநேசனை கடும் தொனியில் எச்சரித்ததுடன் இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு என்னால் இடம் அளிக்க முடியாது என்றார் 
 
இடைமறித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்  சிவாஜிலிங்கம், இங்கு ஊழல் இடம்பெற்றால் எனிமேல் இது தொடர்பாக விவாதிக்கவேண்டாம்.  ஆளுநர் மூலமாக நிதி குற்றவியல் விசாரணைக்கு முறைப்பாடு செய்து உடனடி விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார். 

ad

ad